பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 காந்தத்‌ தடை

253 காந்தத் தடை முறைக்கும் காந்தச் சுற்று என்னும் பெயருண்டு. மின்மாற்றி உள்ளகங்கள், அஞ்சல் சட்டங்கள் (relay frams), மின்கருவிகளின் இரும்பாலான உறுப் புகள் ஆகியவை காந்தச் சுற்றுக்கு எடுத்துக்காட்டு களாகும். இத்தகைய கருவிகளின் காந்தப் புலச் சமன்பாடுகள் நேர் மின்னோட்டச் சுற்றுகளின் சமன் பாடுகளைப் பெரிதும் ஒத்துள்ளமையால் அக்கருவி களுக்குக் காந்தச்சுற்றுகள் (magnetic circuits) என்னும் பெயர் இடப்பட்டது. காந்தப் பாயம் தன் வழியாகப் பாய்வதை எதிர்க்கும் தன்மைக்குக் காந்தப் பாயத் தடை (reluctance) என்று பெயர். அது ஒருபொருளின் தடைக் காந்த அழுத்த வேறுபாட்டிற்கும் காந்தப் பாய அளவிற்கும் இடையிலான தகவுக்குச் சமம். ஒரு முடிவுற்ற உள்ளகத்தில் NI ஆம்பியர் - சுற்று அளவில் காந்த இயக்குவிசை (magnetomotive force} அமைந்திருந்தால், = NI PA இதில் 1 என்பது காந்தப்பாதையின் நீளம்; A என்பது அதன் குறுக்குப் பரப்பளவு: # என்பது உட்புகுதிறன் (permeability). N என்பது உள்ளகத்திலுள்ள சுற்று களின் எண்ணிக்கை; I என்பது ஆம்பியரில் மின்னோட்டம்; [/PA என்பது காந்தப் பாயத்தடை R. எனவே. காந்த இயக்குவிசை = ¢XR உள்ளகம், வேறுபட்ட தன்மைகளுள்ள கூறுகளாலா னதாக இருந்தால் அதன் மொத்தக் காந்தப் பாயத் தடைக்கூறு காந்தப் பாயத்தடைகளின் கூட்டுத் தாகையாகும். f ஒரு குறிப்பிட்ட மாறாத அளவிலுள்ள காந்தப் பாயம் பல இணையான பாயப் பாதைகளில் பங்கிடப் பட்டிருந்தால், அவ்வாறான பகிர்வு அந்தப் பாதைகளின் பாயத் தடைக்குத் தலைகீழ் விகிதத்தில் ஏற்படும். இந்த இணையான். தொடரான காந்தப் பாயத் தடைகள், இணையான, தொடரான மின் தடைகளைப் போலவே கணக்கிடப்படுகின்றன. எனவே அவற்றின் அடிப்படைச் சமன்பாட்டைக் காந்தச் சுற்றுகளுக்கான ஓம் விதி எனக் குறிப்பிடுவ துண்டு. ஆனால் காந்த இயக்க விசை ஒரு விை சை யன்று: மின்னோட்டத்தைப் போன்று காந்தப் பாயம் பாய்வதில்லை. அடிப்படைச் சமன்பாட்டைக் கண் பிடித்தவர் ஓம் அல்லர்; அது ஹாப்கின்சன் பாரால் கண்டுபிடிக்கப்பட்டது. என் காந்தச் சுற்றுப் பாயத் தடை ஏறக்குறைய எப் போதும் பண்பறுதியான (qualitative) முறையிலே பயன்படுகிறது. அது விளக்கமளிக்கவும்,விவாதிக் கவும் மிகவும் எளிதாக உதவும், பாயத் தடை மாறும் போது பாயத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிட வழக்கமாக ஒரு நேர்தன்மையற்ற (non-linear) கணக்கீட்டு முறை பயன்படுகிறது. அது பாயத் தடைக்கு ஓர் எண் மதிப்பைக் கணிப்பதுகூட இல்லை. இதற்கேற்ப, காந்தப் பாயத் தடை அலகுக்கு ஒரு பொதுவான பெயர் தரப்படவுமில்லை. அளவறுதியான (quantitative) கணக்கீடுகளுக்கு மூன்று கொள்கைகள் பயன்படுகின்றன. அவை, காந்தப்பாயக்கோடுகள் முடிவற்றவை. ஒரு பாயத் தாகுப்பில், சில இடங்களில் பாயக் கோடுகள் குறிப்பாக நெருக்கமாக அமைந்துள்ள போதும், தொகுப்பிலுள்ள அனைத்துப் புள்ளிகளிலும் மதிப்புச் சமமாயிருக்கும். எந்த ஒரு புள்ளியிலும் பாய அடர்த்திக்கும் (B) புலத் திசையனுக்கும் (H) இடையிலுள்ள தொடர்பு அப்புள்ளியிலுள்ள பொருளின் பண்பு ஆகும். ஆய்வு களின் வாயிலாக ஒரு பொருளுக்கு இவற்றில் ஒன் றின் மதிப்பு தெரிந்தால் அதிலிருந்து மற்றதன் மதிப்பைக் கணக்கிட்டுவிட முடியும். ஆம்பியரின் கோட்டுத் தொகையீடு (line integral), பகுப்பாய்வு செய்யப்படுகிற பாயத் தொகுப்புச் செல்லும் பாதை முழுமைக்குமாகக் கணக்கிடப்படுகிறது. கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Arthur F. Kip, Fundamentals of Electricity and Magnetism, McGraw Hill Kogakusha Ltd, Tokyo, 1969., Brij Lal, N. Subramanyam, Electricity and Magnetism, Ratan Prakashan Mandir, Delhi, 1983. காந்தத் தடை காந்தச் சுற்று (magnetic circuit) ஒன்று அதன் வழியே விளையும் காந்தப் பாயத்திற்கு (magnetic flux) அளிக்கும் தடை, காந்தத் தடைஎனப்படுகிறது. அது காந்தச் சுற்றில் காந்த இயக்கு விசைக்கும் (magneto motive force) காந்தப் பாயத்திற்கும் உள்ள விகிதத் திற்குச் சமமாகும். காந்தச் சுற்று என்பது காந்த விசைக் கோடு களுக்கு அல்லது காந்தப் பாயத்திற்குத் தொடர்ச்சி யான பாதை ஒன்றை அமைத்துத் தரும் வகையில் அமைந்த ஃபெரோ காந்தப் பொருள்களின் அமைப் பாகும். காந்தச் சுற்றுகள் மின்னியல் எந்திரங்களி லும் பலவகை மின்னியல் கருவிகளிலும் பெரும் பங்கு கொள்கின்றன. சிறு கம்பிச் சுருள் சுற்றப்பட்ட ஓர் இரும்பு வளையம் காந்தச் சுற்றுக்கான எளிய எடுத்துக்