260 காந்தத் தயக்கம்
260 காந்தத் தயக்கம் S 'N S N படம் 3. தொடரிணைப்பு முறையில் இணைக்கப்பட்ட காந்தத் தடைகள் N N R ஆகும். 1 R1 + படம் 4. பக்க இணைப்பு முறையில் இணைக்கப்பட்ட காந்தத் தடைகள் + R, R, ரா.நாகராஜன் நூலோதி. D.N. Vasudeva, Fundamentals of Magnetism and Electricity, S. Chand & Co., New Delhi. 1983. காந்தத் தயக்கம் ஒரு ஃபொரோ காந்தப் பொருளைக் காந்தமேற்றும் போது அல்லது காந்த நீக்கம் செய்யும்போது அதிலுள்ள காந்தமாக்கல் செறிவு, காந்தமாக்கும் புலத்தைவிடப் பின்தங்கியே உள்ளது. இதற்குக் காந்தத் தயக்கம் (magnetic hysterisis) என்று பெயர். காந்தமேற்றப்படாத நிலையிலுள்ள ஒரு ஃபெர்ரோ காந்தப் பொருளைத் தொடர்ந்து அதிகரிக்கிற காந்தமாக்கும் புலத்தின் புலத்தின் விசைக்கு உள்ளாக்கும்போது புலவிசை H, பாய அடர்த்தி B ஆகியவற்றுக்கிடையில் உருவாகும் உறவைப் படத் தின் Oab என்னும் பகுதி குறிப்பிடுகிறது. காந்த மாக்கும் புலம் அதிகரித்து H; என்னும் மதிப்பை அடையும் போது பொருளின் காந்த நிலையை a என்னும்புள்ளிகுறிப்பிடுகிறது. காந்தமாக்கும்புலத்தை மேலும் அதிகரித்து H, என்னும் பெருமமாக்கிப் பின்னர் H. அளவிற்குக் குறைத்தால், குறைந்து வரும் பாய அடர்த்தி, தான் பெருமமான பாதையிலேயே குறையாமல் திரும்ப அதைவிடச் சிறிய வீதத்தில் குறைகிறது. காந்தமாக்கும் புலத்தில் ஏற்படுகிற மாற்றத்தைவிடப் பாய அடர்த்தியில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு பின் தங்குவது காந்தத் தயக்க மாகும். காந்தமாக்கும் புலத்தை H, இலிருந்து மேலும் குறைத்துப் பூஜ்யமாக்கினால், பாய அடர்த்தி பூஜ்யமாவதில்லை. அதற்கு மாறாக B' என்னும் அளவில் சிறிதளவு பாய அடர்த்தி பொருளில் தங்கி விடுகிறது. B' என்னும் அளவு காந்தத் தேக்குந் திறன் எனப்படுகிறது. பாய அடர்த்தியைப் பூஜ்யமாக்க வேண்டுமானால், காந்தமாக்கும் புலத்தின் திசையை எதிராக்கி அதன் மதிப்பை H, என்னும் அளவிற்கு அதிகரிக்க வேண்டும். H, - இன் அளவு காந்த நீக்க விசை எனப்படுகிறது.