பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 காந்தத்‌ தனிமுனை

262 காந்தத் தனிமுனை இரு சமமான, ணையான காந்த எதிரான வட, தென் காந்தமுனைகளைக் கொண்டது. இதையே காந்த இருமுனை (magnetic dipole) என்பர். ஆனால் காந்த மின்னூட்டம் முனைக்கு துகள்கள், நேர் அல்லது எதிர் மின்னூட்டம் உடைய தனி முனைகளாக உள்ளன. இத்தகைய அடிப்படைக் மின்னியலும் கருத்துக்களுடனேயே காந்தவியலும். இன்று வரை வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் கா ரு முனை என்னும் கருத்து, கலிஃபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த அறிவியலார்களான புபோர்டு பிரைசும், எட்வர்டு சிர்க்கும் ஹீஸ்ட்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாரான சாக் ஆஸ்பரீனும் பின்ஸ்கியும் இணைந்து 1975 இல் கண்டறிந்த காந்தத் தனி முனை (magnetic mono- pale) மறு சிந்தனைக்கு உள்ளாக்கப்பட்டது. பண்புகள், மின் காந்தக் கொள்கைப்படி காந்தத் தனி முனை, மிக நுண்ணிய தடிப்புள்ள காந்தத்தின் ஒரு நுனியாகும். காந்தத்தின் மறு நுனி முடிவற்ற இடத்தில் இருக்கும். பெற்ற துகள்களில் மின்னூட்டம் எவ்வாறு குவாண்ட்டம் மதிப்புடன் உள்ளதோ அவ் வாறே காந்தத் தனி முனைகளிலும் முனைவலிமை (pole strength) குவாண்ட்டம் மதிப்புடையதாக இருக்கும். மிகத் தாழ்ந்த முனை வலிமை 137 இன் வர்க்க மூலமாக இருக்கும் என்று கொள்கை மூலம் கண்டறிந்துள்ளனர். இரு எலெக்ட்ரான்களுக்குப் பதிலாக அதே இடைவெளியுடன் இரு காந்தத் தனி முனைகள் வைக்கப்படுமானால், அவற்றிற்கிடையே செயல்படும் விசை ஏறத்தாழ 4700 மடங்கு மிகுதி இருக்கும். இக்கருத்துகள், காந்தத் தனி முனைகள் இது வரை கண்டறியப்பட்ட அடிப்படைத் துகள்கள் அனைத்தையும்விட மிகு நிறையுடையவாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. ஒரு காந்தத் தனி முனையின் நிறை, புரோட்டானின் நிறையைவிடப் பலமடங்கு மிகுதியாக இருக்கும் என்று ஆய்வா ளர்கள் கணித்துள்ளனர். பிரைஸ் குழுவினரின் கருத்தும் இதற்கு ஏற்பவே அமைந்துள்ளது. அவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் காந்தத் தனி முனை யின் நிறை புரோட்டானின் நிறையைவிட இருநூறு மடங்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். பிரைசும் அவர் குழுவினரும் தனி வகையான உணர்வுப் பால்மம் (emulsion) பூசப்பட்டுள்ள ஒளிப் படத் தட்டுகளைப் பலூன்களில் வைத்து மிகு உயரங் களுக்கு அனுப்பி, வளிமண்டலத்தில் நடத்திய காஸ் மிக் கதிர் பற்றிய ஆய்வுகளால் காந்தத் தனிமுனை களைக் கண்டறிந்தனர். இதுவே காந்தத் தனி முனை பற்றிய முதல் ஆய்வாகும். அவர்களின் ஆய்வு முடிவு கள் ஒரே ஒர் ஒளிப்படத்தைக் கொண்டு அமைவ தால், காந்தத் தனி முனை பற்றிய கருத்துக்களை மறுப்பாரும் உளர். 1862 ஆம் ஆண்டில் மாக்ஸ்வெல் என்னும் அறிவியலாரால் வெளியிடப்பட்ட மின் காந்தக் கொள்கை காந்தத்திற்கும், மின்னூட்டத்திற்கும் இடையே காணப்படும் ஒத்த தன்மைகளை வெளிப் படுத்தியது. மின்காந்தக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு நேர் அல்லது எதிர் மின்னேற்றம் கொண்ட துகள் கள் இயற்கையில் இருப்பது போலக் காந்தமும் தனி முனைகளாக இருக்கக் கூடும் என்னும் இங்கிலாந்து அறிவியலாரான டிராக்கின் கருத்திற்கு வலிவூட்டு மாறு அமைந்தன. மின் புலத்தில் எங்ஙனம் மின் னூட்டமுடைய துகள்கள் இடையீட்டுச் செயலை ஏற்படுத்துகின்றனவோ, அவ்வாறே, இந்தக் காந்தத் தனிமுனைகள் காந்தப் புலத்தில் ஏற்படுத்தும் என டிராக் தம் குவாண்டம் கொள்கையில் கூறியுள்ளார். எந்த இயற்பியல் விதிகளுக்கும் முரண்பட்டதாக இல்லாததாலும், மின்னூட்டத்தில் காணப்படும் குவாண்ட்டம் அளவை (குவாண்ட்டம் என்பது குறிப் பிட்ட மதிப்புடைய ஒரு சிறு பங்காகும்) விளக்கக் கூடியதாக இருப்பதாலும் காந்தத் தனி முனை இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ள முடிய வில்லை. டிராக்கின் காலந்தொட்டே காந்தத் தனி முனைகளைப் பன்னாட்டு அறிஞர்களும் கண்டறியத் தலைப்பட்டனர். இந்திய அறிவியவரான சாகா என் பாரும் காந்தத் தனி முனையின் பண்புகளைப் பற்றிய தருக்க முறைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். யாக இடையீட்டுச் செயலின் வலிமை துகளின் நிறைக்கு ஏற்ப இருப்பதால், நிறைமிக்க காந்தத் தனி முனைகள் வலிமை மிக்க வினைகளில் (strong interaction ) ஈடுபடக்கூடியவாக இருக்கும் எனலாம். மேலும் மின்னூட்டம் பெற்ற துகள்களில் எவ்வாறு பல வகைகள் உள்ளனவோ, அவ்வாறே காந்தத் தனி முனைகளிலும் பல வகைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எந்த வினையும் ஒரு வகையான மாறாக் கோட் பாட்டிற்கு உட்பட்டே நிகழ்கின்றது. அதன்படி காந்தத் தனி முனை தானாகச் சிதைந்து அழிவதாக இருக்குமானால், அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காந்தத் தனி முனைகளாகத் தோன்றும். இந்நிகழ்வில் முனை வலிமை, மாறாக் கோட்பாட் டிற்கு உட்படுகிறது. இதன் மூலம் சிதைவிற்கு முன்னால் உள்ள காந்தத் தனி முனையின் முனை வலிமையும், பின்னால் விளையும் காந்தத் தனி முனைகளின் கூடுதல் முனை வலிமையும் சமமாகும். காந்தத் தனி முனை தானாகச் சிதைந்து அழி யாது என்றாலும், முழு அழிவாக்கக் கொள்கைக்கு (annihilation theory) ஏற்ப இரு சமமான எதிரான காந்தத் தனி முனைகள் மோதிக் கொள்ளுமானால் அவை முழுதுமாக அறிந்து ஆற்றலை வெளிப்படுத்தும் பருப்பொருள் இணை உருவாக்கம் (pair production) ) என்னும் முறையால், இந்தக் காந்தத் தனி முளை களை சமமான எதிரான) ஆற்றலிலிருந்தும்