காந்தத் திருப்புத் திறன் 263
பெறலாம். ஆற்றல்மிக்க ஒளித் துகள் கற்றைகளைப் புரோட்டானோடு மோதும்படிச் செய்து காந்தத் தனி முனைகளைப் பெற இயலும். கனமான, சம முனை வலிமையுடைய, வட் தென் காந்தத் தனி முனை களைப் பருப்பொருள் இணை உருவாக்கத்தால் பெறவேண்டுமானால், ஒளித் துகளின் ஆற்றல் மிக அதிகமாக இருக்க வேண்டும். இதன் காரணமாகக் காந்தத் தனி முனை என்பது உயர் ஆற்றல் துகள் முடுக்கிகளாலும், உயர் ஆற்றல் காஸ்மிக் கதிர்க ளாலும் மட்டுமே இயலும். காஸ்மிக் கதிர்களால் வளி மண்டலத்தில் உருவாக் சுப்படுகிற காந்தத் தனி முனைகள் பேரண்ட வெளி யில் உள்ள காந்தப் புலத்தாலும், புவியின் காந்தப் புலத்தாலும் முடுக்கப்பட்டு மிக விரைவாகப் புவியை வந்தடைகின்றன. காந்தத் தனி முனைகள் மிகுதி யாக அயனியாக்குந் தன்மையுடைமையால் வளி மண் டலத்தில் தன் ஆற்றலில் பெரும்பங்கை இழக்கும். எனினும் வளிமண்டலம் முழுமையும் கடந்து புவியில் மிகு ஆழம் ஊடுருவ வல்லனவாகவும் உள்ளன. காந் தத் தனி முனைகளை, இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற ஃபெரோகாந்தப் பொருள்கள் தன்னகத்தே இருத்தி வைத்துக் கொள்ளும் பண்பைப் பெற்றுள் ளன. இதனால் இரும்புத் தாதுவால் ஆன எரிகற் களில் (meteorites) காந்தத் தனி முனைகள் இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. புவியை நோக்கி வரும் காந்தத் தனி முனைகளில் வட முனை வடக்கு நோக்கியும், தென்முனை தெற்கு நோக்கியும் புவிக் காந்தப் புலத்தால் சிறிது விலக்கப்படுகின்றன. இவ் வாறு விலக்கப்பட்ட காந்தத் தனி முனைகள் அப்பகுதி களில் உள்ள இரும்புத் தாதுக்களால் தொகுக்கப் பட்டிருக்கலாம் என்று சுருதப்படுகிறது. பயன்கள். அளப்பரிய ஆற்றலை உடைய காந்தத் தனி முனைகளைக் கொண்டு அடிப்படைத் துகள் களைத் தாக்கி இடையீட்டுச் செயலை ஏற்படுத்தி. அவற்றின் நுண் கட்டமைப்புகளை அறிய முடியும். துகள்களை முடுக்கும் வழி முறைகளில் ஒரு புதிய வழியை வகுத்துக் கொள்ளவும் முடியும். மெ. மெய்யப்பன் நூலோதி. Edward M.Pureell, Electricity and Magnetism, Volume 2, McGraw-Hill Book Company, New York, 1965. காந்தத் திருப்புத்திறன் காந்தப் பண்புகளில் ஒன்றான காந்தத் திருப்புத் திறனானது (magnetic moment ) ஒரு காந்தம் அல்லது மின்னோட்ட வளையம் அல்லது காந்தப் புலத்தில் செல்லும் மின்னூட்டத்தின் மீது செயல் காந்தத் திருப்புத்திறன் 763 படும் திருப்பு விசைக்கும், காந்தப் உள்ள தொடர்பை வரையறுக்கிறது. ஒரு புலத்திற்கும் காந்தத்தில் காந்த முனைகளுக்கிடையில் உள்ள தொலைவு காந்த நீளம் 21 எனப்படுகிறது. ஒரு நல்லியல்பு காந்தத் (ideal magnet) துருவங்கள் காந்தத்தின் முனைகளில் அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. SN எனும் காந்தம் படத்தில் காட்டியுள்ள வாறு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். காந்தப் புலத்தில் இருக்கும் இந்தக் காந்தம் ஓர் இரட்டை அல்லது திருப்புவிசை இணைவு பெறும். காந்த முனை ஒவ்வொன்றின் மீதும் pB எனும் விசை செயல்படுகிறது. S PB B B 21- PB N இங்கு p என்பது முனை வலிமை, B என்பது காந்தப் பாய அடர்த்தியாகும். இங்குச்செயல்படும் இரட்டை யின் திருப்புமை, T = வின சை X அவற்றிற்கிடையே உள்ள = PB X SN sing PB 21 sing MB siné தொலைவு இங்கு M = 2pl என்பது காந்தத் திருப்புத் திறன் எனப்படும். இது SN திசையில் ஒரு திசையன் (vector) அளவாகும். இதை, திசையன் குறியீட்டில் T=MXB என்றும் எழுதலாம், இங்கு எதிர்க்குறி, திருப்புவிசை எனும் கோணத்தைக் குறைக்கும் விதத்திற்குரிய திசையில் செயல்படுவதைக் குறிக்கிறது. அதாவது, காந்தம் வெளிப்புறத்திலிருந்து செயல்படும் காந்தப் புலத்தின் திசையில் தன்னை வைத்துக் கொள்ள முயலுகிறது.