264 காந்த நீக்கம்
264 காந்த நீக்கம் காந்தம் அதனுடைய மையப் புள்ளியைப் பொறுத்துத் தன்னிச்சையாகச் சுழலும் எனில், அதன் மீது செயல்படும் இரட்டையால் அது 1 - 0 என்னும் நிலைக்குக் கொணர முயலும். 8 = 90° நிலையில், B=1 ஆக இருக்கும்போது T = MB sin ஆனதால், இரட்டையின் திருப்புமை T=M ஆகும். ஆகையால், காந்தத் திருப்புத்திறனைக் கீழ்க்காணுமாறு வரை யறுக்கலாம். காந்தத்திருப்புத்திறன் என்பது ஒரு காந் தத்தை ஓரலகு அளவுடைய சீரான காந்தத் தூண்ட லுக்குச் செங்குத்தாக இருத்தி வைக்கத் தேவைப் படும் இரட்டை அல்லது திருப்பு விசையாகும். காந்தத் திருப்புத்திறனின் அலகு ஆம்பியர் மீட்டர் ஆகும். காந்தத் திருப்புத்திறன் வெப்பநிலை மிகும்போது குறைகிறது. வெப்பநிலை குறையும் போது: குறைவான விகித அளவில் கூடுகிறது. மின்னோட்டங்கள் காந்தப் புலங்களுக்குக் காரண மாக அமைவதால், காந்தப் பண்புகளை இவ்வடிப் படையில் விளக்குவது மின்காந்தவியல் வழக்கமாகும். N சுற்றுகளும், பரப்பு A அளவும் உள்ள ஒரு தட்டைக் கம்பிச்சுருளில் I என்னும் மின்னோட்டம் செல்வ தாகக் கருதலாம். இந்தச் சுருள் காந்தப் அடர்வு Bடெஸ்லா எனும் புலத்தில் இருக்கும்போது, திருப்புவிசை (L) ஐ உணர்கிறது. இந்தத் திருப்பு விசை. L = NIAB sin l என நிறுவலாம். பாய் இங்கு 8 என்பது காந்தப் புலத்திற்கும் கம்பிச் சுருள் தளத்திற்கான செங்குத்திற்கும் இடைப்பட்ட கோணம் ஆகும். இந்தக் கோணம் / =90° எனில் திருப்புவிசை L பெருமதிப்பை அடைகிறது. அதாவது கம்பிச் சுருளின் தளம் காந்தப் புலத்திற்கு இணை யாக இருக்கும்போது L பெரும மதிப்பை அடைகிறது. திருப்பு விசையின் பெரும மதிப்பிற்கும் காந்தப் பாய அடர்வுக்கும் உள்ள விகிதம் காந்தத் திருப்புமை ஆகும். எனவே, ரான் M = L B NIAB B NIA M NIA அணுவில் அணுக்கருவைச் சுற்றி வரும் எலெக்ட் அதன் சுற்றுப் பாதையைப் (orbit) பொறுத்துப் பெற்றிருக்கும் காந்தத் திருப்புத் திறன் சுற்றுப்பாதைக் காந்தத் திருப்புத்திறன் மின் எனப்படுகிறது. எலெக்ட்ரானின் இயக்கம் னோட்டத்தை உண்டாக்கும். அணுவில் இயங்கும் எலெக்ட்ரானின் இயக்கத்திற்கான சமான மின் னோட்டம் I என்றும். ஒரு சுற்றுக்கான என்றும் கருதினால், I = T = காலம் T . ங்கு 2 TT என்பது கோண அதிர்வெண்ணாகும். 6- எலெக்ட் ரானின் மின்னூட்டம் ஆகும். சுற்றுப்பாதைப் பரப்பு A எனில், சுற்றுப்பாதைக் காந்தத்திருப்புத்திறன், M = IA = A ஆகும். கு சரவணன் நூலோதி. B.D. Cullity, Introduction to Magnetic Materials. Addison-Wesley Publishing Company, California, 1972. காந்த நீக்கம் 9 ஒரு காந்தமேற்றிய பொருளிலிருந்து காந்தத் தன்மையை நீக்குவதற்கான நடைமுறை காந்த நீக்கம் (demagnetization) எனப்படுகிறது. காந்த மேற்றிய பொருளை நடுநிலைக்குக் கொண்டு வருவது, அதன் காந்தத் தூண்டல், காந்தப் புல வலிமை ஆகியவற்றைச் சுழியாக்குவதே இந்த நடைமுறையின் நோக்கங்கள் ஆகும். ஃபெர்ரோ காந்தப் பொருளுக்கான காந்தத் தூண்டல், காந்தப் புல வலிமை ஆகியவற்றுக்கிடையி லான உறவு சிக்கல் நிறைந்தது. ஏனெனில் அது அப் பொருளின் கடந்தகாலக் காந்தவியல் வரலாற்றையும் பொறுத்து அமைகிறது. அப்பொருளின் நிலையைக் காந்தமாக்கல் வரைபடத்திலுள்ள ஒரு புள்ளி தனித் தன்மையுடன் குறிப்பிடாது. ஏனெனில் ஒரு குறிப் பிட்ட காந்தப் புல வலிமை மதிப்புக்கு நேரான காந்தத் தூண்டலின் மதிப்பு அம்மதிப்பு எட்டிய நிகழ்ச்சிகளின் நிரலைப் பொறுத்துள்ளது. ஒரு பொருளின் காந்தவியல் நிலை அதன் கடந்தகாலக் காந்தவியல் வரலாற்றைச் சாராமல் இருக்கவேண்டு மானால், அதை ஒரு செந்தரமான செயல்முறையின் மூலம் காந்த நீக்கம் செய்ய வேண்டும். காந்தப் பொருளை ஒரு காந்தமாக்கும் புலத்தில் வைத்தால் அப்பொருள் காந்தமாகிவிடும். பிறகு காந்தமாக்கும் புலத்தை நீக்கினால் அப்பொருளி காந்தப் பாய் லுள்ள காந்தமாக்கல் செறிவும், அடர்த்தியும் சுழியாவதில்லை. அப்பொருளிலிருந்து காந்தத்தன்மையை முழுமையாக நீக்க வேண்டு மானால், தொடர்ந்து குறைகிற புலவலிவுடன் கூடிய பல காந்தமாக்கல் சுழல்களை அதன்மேல் செலுத்த வேண்டும். B-H கண்ணியின் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து இறுதியில் பொருளின் காந்தவியல் நிலை 0 என்னும் புள்ளியால் குறிப்பிடக்கூடியதாகிவிடும். செந்தரமான காந்த நீக்க முறைகளில் ஒரு குறிப் பிட்ட மாறுநிலை அளவிற்கு மேற்பட்ட காந்த