காந்த நீக்கு விசை 265
மாக்கும் புலம் பொருளின்மேல் செலுத்தப்படுகிறது. இந்த மாறுநிலை அளவு பொருளின் தன்மையைப் பொறுத்து அமையும். காந்தமாக்கும் புலத்தின் வலிமையைக் குறைத்து அதன் திசை மாற்றத்தை யும் பலமுறை தொடர்ந்து செய்து வந்தால் காந்த மாக்கும் புலம் சுழி மதிப்பை அடையும்போது பொருள் காந்தத்தன்மையை முழுமையாக இழந்து விடும். புலத்தின் திசையை மாற்ற, நேர் மின்னோட் டத்தை எந்திரவியல் முறைகளில் திசைமாற்றுவது. படிப்படியாகக் குறைகிற அலைவு மின்னோட்டங் களைச் செலுத்துவது, ஓர் அலைவு காந்தப் புலத்தி லிருந்து பொருளைப் படிப்படியாக வெளியேற்றுவது போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. பாரா காந்த உப்புகளின் காந்தத்தன்மையை மாற்றீடற்ற முறைகளில் நீக்குகிற முறை தனிச் சுழியை நெருங்கிய தாழ் வெப்ப நிலைகளை ஏற் படுத்துவதில் உதவுகிறது. - வெப்ப கே. என். ராமச்சந்திரன் நூலோதி.B. D. Cullity, Introduction to Magnetic Materials. Addison - wesley Fublishing Company. California, 1972. காந்த நீக்கு விசை 265 லிருந்து காந்தத்தன்மையை நீக்குவதற்கும் ஒரு காந்தப் புலம் தேவைப்படுகிறது. இக் காந்தப் புலத் திற்குக் காந்த நீக்கு விசை (coercivity) என்று பெயர். உருளைச் சுருளுக்குள் (solenoid) ஓர் இரும்புக் கம்பியை வைத்துவிட்டுச் சுருளில் ஒரு நேர் மின் னோட்டத்தைச் செலுத்தினால் அதற்குள் காந்தமாக்கும் புலம் (magnetising field) உருவாக இரும்புக் கம்பிக்குக் காந்தத்தன்மை ஏற்படும். காந்த மாக்கும் புலத்திற்கும் (H) கம்பியிலேற்படும் காந்தத் தூண்டலுக்கும் (B) இடையில் ஒரு வரைபடம் வரைந் தால் அது படத்தில் காட்டியபடி அமையும். கம்பியில் காந்தத்தன்மை ஏறித் தெவிட்டிய நிலை அடைவதை OA பகுதி காட்டுகிறது. பிறகு காந்தமாக்கும் புலத்தைக் குறைக்கும்போது காந்தத் தூண்டல் ABC வழியாகக் குறைகிறது. காந்தமாக்கும் புலத்தைப் பூஜ்யமாக்கினாலும் காந்தமாக்கல் செறிவும் (intensity of magnetisation), காந்தப்பாய அடர்த்தியும் (flux density) பூஜ்யமாவதில்லை. இதற்குக் காரணம் இரும்பின் காந்தத் தேக்கு திறன் (retentivity) என்னும் இயல்பாகும். அதிலிருந்து காந்தத்தன்மையை முழுமையாக நீக்க வேண்டுமானால் படிப்படியாகக் குறைவதான காந்தப் புலச் சுழல்களைச் (magnetic cycles) செலுத்தி அதிலுள்ள காந்தத்தன்மையைப் படிப்படியாகக் குறைத்துப் பூஜ்யமாக்க வேண்டும். 0C என்னும் அளவு இரும்பின் காந்த நீக்கு விசை எனப்படும். OB என்னும் அளவு இரும்பின் காந்தத் தேக்கு திறன் ஆகும். B B H A காந்த நீக்கு விசை ஒரு பொருளில் காந்தத்தன்மையை ஏற்றுவதற்கு ஒரு காந்தப் புலம் தேவைப்படுவதைப்போல ஒரு பொருளி படம் 1.