266 காந்தப் பதிவு
266 காந்தப் பதிவு இரும்பைத் தவிர நிக்கல், கோபால்ட் ஆகிய பொருள்களும் காந்தத்தன்மை பெறக் கூடியவை. அலைவு மின்னோட்டங்கள் பயன்படுத்தப்படுகிற மின் கருவிகளில் பொருத்தப்படுகிற இவ்வுறுப்பு களுக்குத் தேவையான காந்தத் தகுதிகள் இருக்க வேண்டும். இதற்காகப் பல வகை உலோகக் கலவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரும்புடன் நிக்கலைக் கலந்தால் காந்த நீக்கு விசை கூடுகிறது. சிறிய அளவுகளில் சிலிக்கானைக் கலந்தாலும் காந்த நீக்கு விசை கூடுகிறது. ஆனால் அதன் அளவு 2.5% க்கு மிகுதியானால் காந்த நீக்கு விசை குறையத் தொடங்குகிறது. ஒரு மின் காந்தத்தின் உள்ளகத்தைக் குறைந்த காந்த நீக்குந் திறனுள்ள உலோகத்தால் உருவாக்க வேண்டும். ஒலிவாங்கிகளிலும் (microphones) ஒலி பெருக்கிகளிலும் (loudspeaker) பயன்படும் நிலைக் காந்தங்களை உயர்ந்த காந்த நீக்குந் திறனுள்ள உலோகத்தால் அமைக்க வேண்டும். அளவிடும் கருவி களிலுள்ள நிலைக்காந்தங்கள் அதிர்ச்சி, வெப்பநிலை மாற்றங்கள். காலப்போக்கு ஆகியவற்றால் காந்தத் தன்மையை இழக்கா. எனவே உயர்ந்த காந்த நீக்க விசையுள்ள அல்நிக்கோ, கோபால்ட், எஃகு போன்ற உலோகக் கலவைகளாலான காந்தங்கள் இக்கருவிகளில் பொருத்தப்படுகின்றன. கே.என். ராமச்சந்திரன் நூலோதி. Brijlal, N. Subramanyam, Electricity and Magnetism, Ratan Prakashan Mandir, New Delhi, 1983. காந்தப் பதிவு மின் குறிப்பலைகளை அசையும் காந்தப் பரப்பின் மீது காந்த நிலையில் சேமித்து வைக்கக்கூடிய நுட்பமே காந்தப் பதிவு (magnetic recording) எனப் படும். இக்காந்தப்பதிவில் நேரத்திற்கு ஏற்ப மாறு படும் மின்னோட்டம், நேரத்திற்கு ஏற்ப மாறுபடும் காந்தப் புலத்தை, பதிவு செய்யும் தலைப்பகுதியில் (recording head) உண்டாக்குகிறது. பின்னர் இப் புலம். பதிவு செய்யும் தலைப்பகுதியின் செல்லும், காந்தப் பொருளால் ஆன மீது பதியப்படுகிறது. இவ்வாறு மாறுபட்ட இடை வெளியுடன் பதிவு செய்யப்பட்ட நாடா, திரும்பப் பெறும் தலைப்பகுதியின் (playback head) வழியாகச் செல்லும்போது, உட்செலுத்தப்பட்ட மின் குறிப் பலைக்குரிய, நேரத்திற்கு ஏற்ப வேறுபடும் மின் வெளியீட்டைத் தருகிறது. ஓர் எளிய காந்தப் பதிப்பி (magnetic recorder) படத்தில் காட்டப்பட்டுள்ளது. வழியாகச் நாடாவின் காந்தநாடா அழிப்பான் செலுத்தும் சிட்டம் ஏற்றுக் கொள்ளும் சிட்டம் அழுத்த உருளி திரும்பப் பெறும் தலைப்பகுதி பதிவு செய்யும் தலைப்பகுதி படம் 1. காந்தப் பதிப்பி செலுத்தும் சிட்டத்திலிருந்து (supply reel) வரும் காந்த நாடா, அழிப்பான் வழியாகச் செல்லும்போது, அந்நாடாவில் முன்னர்ப் பதிவு செய்யப்பட்ட குறிப் புகள் அனைத்தும் நீக்கப்பட்டு, காந்த நீக்கம் (demagnetized) செய்யப்பட்ட நிலையில் உள்ளது. பின்னர்ப் பதிவு செய்யும் தலைப் பகுதியில் செலுத் தப்படும் மின் குறிப்பலைகள், அந்நாடாவின் மீது தேவையான வடிவில் புதிதாகப் பதியப்படுகின்றன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அமைப்பு, திரும்பப் பெறும் தலைப்பகுதியின் மேல் செல்லும்போது மின் வெளியீட்டைத் தூண்டுகிறது. அழிப்பானால் அழிக்கப்படும் வரை அல்லது வேறு வகை மாற்றங்களுக்கு உள்ளாகும் வரை அந் நாடாவில் காந்தத்தன்மை இருக்கும். இதனால் இந்நாடா செலுத்தும் சிட்டத்தில் மீண்டும் சுற்றப் பட்டு, பதிவு செய்யப்பட்ட குறிப்பலைகள் தேவை யானபோது திரும்பப் பெறப்படுகின்றன. இத்தகைய செயலில் அழிப்பானும், பதிவு செய்யும் தலைப்பகுதி யும் இடம் பெறுவதில்லை, திரும்பப் பெறும் தலைப் பகுதி மட்டுமே இயக்கப்படுகிறது. மின்னோடியால் இயங்கும் அழுத்த உருளி, தலைப் பகுதிகளின் மீது காந்த நாடாப் பதிவின் போதும் திரும்பப்பெறும் போதும் (play back) சீரான, கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் செல்ல உதவுகிறது. கேளலை (audio). காட்சியலைக் (video) காந்தப் பதிப்பிகள் இன்றியமையாதவையாக உள்ளன.