பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 காந்தப்‌ பாய்ம இயக்க மின்னாக்கி

274 காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கியில் வளிமத் திற்குப் பதிலாக நீர்ம உலோகத்தைப் பயன் படுத்தலாம். இதன் சிறப்பு. அயனியாக்கப்பட்ட, வளிமத்தின் மின்கடத்துந் திறனைவிடப் பன்மடங்கு மின்கடத்துந்திறனை அனைத்து வெப்பநிலைகளிலும் பெறுதலாகும். நீர்ம உலோகக் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கிகளில் வளிமம் அல்லது ஆவி வெப்ப ஆற்றலிலிருந்து இயங்கு ஆற்றலாக மாற்றும் வெப்ப இயக்கவியல் செயல்படும் பாய்மமாகவும். நீர்ம உலோகம் இயங்கு ஆற்றலிலிருந்து மின்னாற்ற லாக மாற்றும் மின்கடத்தியாகவும் பயன்படுகின்றன. பல்வேறு நீர்ம உலோகக் காந்தப் பாய்ம இயக்கச் சுழற்சி முறைகள் விண்வெளியில் மின் உற்பத்தி செய்யத் தக்கனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் ஒன்று அமெரிக்க ஐக்கிய நாட்டாரான டி.ஜி.எல்லியட் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரு தறுவாய் இரு உள்ளுறுப்புகளின் சுழற்சி அமைப்பு. படம் 8 இல் காட்டப்பட்டுள்ளது. இச் சுழற்சியில் பொட்டாசியம் அல்லது சீசியம் சுற் றோட்டப் பாய்மம், லித்திய நீர்மச் சுற்றோட்டப் பாய்மம் என இருவகை உள்ளன. லித்திய நீர்மம் கதிர்வீசியில் (radiator) இருந்து மின்காந்தம் மூலமாக எக்கியால் இறைக்கப்பட்டுக் கலவை அறையை அடைகிறது. அங்கு இந்நீர்மம் அணுக்கரு உலையால் ஆவியாகிறது. இந்த இரு தறுவாய் ஓட்டம் கூம்புக் குழலில் விரிவடைகிறது. பிறகு உயர் திசைவேக நீர்ம உலோகத்தினின்று, ஆவியைப் பிரித்துக் குளிரச் செய்து மீண்டும் சுற்றோட்ட முறையில் பயன்படுகிறது. உயர்திசைவேக நீர்ம உலோகத்தைக் காந்தப் பாய்ம இயக்சு மின்னாக்கி யின் குழாயில் செலுத்தி மின் உற்பத்தி செய்யப்படு கிறது. 715°C முதன்மை லித்தியம் சுற்றுவழி பொட்டாசியம் சுற்றுவழி எக்கி குளிர்விப்பான் வெப்பப் பரிமாற்றி காபா கலவை கூம்புக்குழல் பிரிப்பி இ விரவி குழாய் 1100°C வெப்ப மூலம் படம் 8. நீர்ம உலோகக் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கியின் இரு தறுவாய் இரு உள்ளுறுப்புகள் (எல்லியட்) சுழற்சி