276 காந்தப் பாய்ம இயக்கவியல்
276 காந்தப் பாய்டீ இயக்கவியல் கொண்ட காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி ஒன்றை நிறுவி அதன் இயக்கத்தைச் செய்முறைகள் மூலம் நிறுவிக் காட்டினர். இங்கிலாந்தில் திரிங் என்பார் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார். ஜப்பானில் 5 டெஸ்லா மீமிகு கடத்திகளைக் கொண்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி ஒரு காந்தப் பாய்ம இயக்க ஆய்வு மின்னாக்கி உரு சோவியத் வாக்கப்பட்டது. U - 02 என்னும் முதல் நாட்டுக் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி ஆய்வுக் சுருவி 1964 இல் நிலை நாட்டப்பட்டது. ஏறக் குறைய 10,000 மணி மின் வரை ஓடி உற்பத்தி செய்தது. என்னும் மின்னாக்கி, மாஸ்கோ நகர்ப்புற வட எல்லையில் வணிக முறையில் நிறுவப்பட்டது. இந்தத் திறந்த சுழற்சி வகை, இயற்கை வளிமத்தை எரிபொரு ளாகக் கொண்டு மாஸ்கோ நகருக்கு ஏறத்தாழ 20. 5 மெகாவாட் மின்திறனை வழங்கியது. காந்தப் பாய்ம இயக்க மின்நிலையம் படம்|g காட்டப்பட்டுள்ளது. U-25 பிறகு 1971 இல் ல் இடர்ப்பாடுகள். காந்தப் பாய்ம இயக்க மின்னாக் கியை உருவாக்குவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட் டிருந்த போதும் உயர் வெப்பநிலையில் நீடித்துப் பயன்படும் உலோகங்களை உருவாக்க முடியவில்லை. அதாவது உயர் வெப்பநிலையில் அயனியாக்கப்பட்ட வளிமங்களைச் சுமந்து செல்லும் கனற்சி அறை குழாய், கூம்புக்குழாய் போன்றவற்றின் வலிமை குறையாமல் இருப்பதற்கான வழிமுறைகளை இதுவரை கண்டறியவில்லை. சில் கார உலோகங் களை விதைப்பருப்பொருள்களாகப் பிளாஸ்மாவுடன் சேர்த்தால் இயக்க வெப்பநிலையைக் குறைக்க முடியும். ஆனால் இத்தகைய விதைப்பருப்பொருள் களால் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கியின் கட்டுமான உலோகங்கள் மிகுதியும் அரிப்புக்கு ஆளாகின்றன. தற்போது கிராஃபைட், மக்னீசியம் ஆக்சைடு போன்ற உலோகங்கள் 2200-2500c வரையிலுள்ள வெப்பநிலையைத் தாங்கக்கூடியவை யாக இருந்தாலும், அந்த உயர் வெப்பநிலையில் எந்திரத் தகைவுகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அற்றவையாக உள்ளன. எரிபொருளாக நிலக்கரி பயன்படும் காந்தப் பாய்ம இயக்க மின்நிலையத்தில், நிலக்கரியை எரிப்பதில் கிடைக்கும் உராய்வுத் துகள் கள் எளிதாகக் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி அமைப்புக்குள் புகுந்து குழாய். கூம்புக்குழல் போன்ற கட்டுமான உலோகங்களை அரிப்புக் குள்ளாக்குகின்றன. காந்தப் பாய்ம இயக்க மின்னாக் கிக்கு மீமிகு கடத்திப் பொருள்களின் மூலம் மிகு வலிமை வாய்ந்த காந்தப்புலத்தை ஏற்படுத்தினாலும், உயர் வெப்பநிலையில் இத்தகைய மீமிகு கடத்திப் பொருள்கள் தாக்கமுறாமல் பேணுவது அரிய செயலாகும். தொழில் வளம் பெருகி வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் வணிக முறையில் காந்தப்பாய்ம இயக்க மின்னாக்கிகளை அமைப்பதில் மிகுந்த து சுவனம் செலுத்தி வருகின்றன. காந்தப் பாய்ம மின்னாக்கியில் கிடைக்கும் உயர்திறன் அந்த அமைப்பின் செயல்படு திறனை அதிகரிக்கிறது. தற்போது ஆய்விற் காக அமைக்கப்படும் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கிக்கு ஆகும் முதலீட்டுச் செலவு மிகுதி என்றாலும். வருங்காலத்தில் சிக்க இவற்றைச் னமாகத் தயாரிக்க முடியும் என்று கருதப்படுகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்தாது. கனிவளங் வ்லகை மின்னாக்கிகளால் இயற்கைக் களை முழுமையாகப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரியில் சாம்பல் பெரும ளவில் உள்ளது. இந்த நிலக்கரியை மிகுந்த திறமை யோடும். பயனுடைய வழியிலும் பயன்படுத்து வதற்குக் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கிக் கருவி சிறப்பானதாக உள்ளது. - எல்.கே.இராமலிங்கம் நூடு லோதி Edward M. Purcell, Electricity and Magnetism. Volume 2, McGraw-Hill Book Company. New York, 1965.. C. Thomas Olivo, Thomas P. Olivo, Fundamentals of Applied physics, Delmar Publishers, Aibany, New York, 1978. B.D. Cullity, Introduction to Magnetic Materials, Addison-Wesley Company. California, 1972. காந்தப்பாய்ம இயக்கவியல் ஒரு காந்தப் புலத்துடன் இடைவினை செய்கிற ஒரு வளிமம் அல்லது நீர்மத்தின் இயக்கங்களின் தன்மை களைப் பற்றி ஆய்வு செய்யும் பிரிவிற்குக் காந்தப் பாய்ம இயக்கவியல் (magneto hydro dynamics) எனப் பெயர். அந்தப் பாய்மம் மின்சாரத்தை நன்கு கடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அது நீர்மநிலையிலுள்ள ஓர் உலோகமாகவோ, அயனியாக்கம் செய்யப்பட்ட வளிமமாகவோ, பிளாஸ்மாவாகவோதான் இருக்க முடியும். சுட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு உலைகளை உருவாக்குவதில் காந்தப் பாய்ம இயக்க வியல் பெரும் பங்கேற்கிறது. இந்த வெப்ப அணுக்கரு உலைகளில் நிறைமிக்க ஹைட்ரஜன் ஐசோடோப்பு களானஉயர் வெப்பநிலை பிளாஸ்மாவில் அணுக்க நுக்கருப் பிணைவு வினைகள் நிகழ்கின்றன. பிளாஸ்மாவைச் சுற்றி ஒரு காந்தப் புலம் அமைந்திருக்கும். அந்தக் காந்தப் புலம் பிளாஸ்மாவை அடக்கி வைத்து அது வினைக் கலத்தின் சுவர்களைத் தொட்டுவிடாமல்