பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தப்‌ பாய்ம இயக்கவியல்‌ 281

கலவையாகக் கருதலாம். அந்த ஆக்கக் கூறுகளின் அடர்த்திகள் முறையே pp, Pa எனவும் திசை வேகங் கள் முறையே Vpy Na எனவும் ஆகும். கலவையின் அடர்த்தி p= pg + Pa. அதன் திசை வேகம் v=(p,vu+p,v Nlp. V v க்குப் பதிலாக vp - ஐச் செருகினால் ஓம் விதி 14 ஆம் சமன்பாட்டின் வடிவத்திலேயே நீடிக்கும். i என்னும் வகையைச் சேர்ந்த ஒரு துகள் Sவகையைச் சேர்ந்த அனைத்துத் துகள்களுடனும் மோதுவதற் கான பயனுறு மோதல் நேரமாக ஐ எழுதினால், ச-வுக்கான சமன்பாட்டில் உள்ள பயனுறு மோதல் நேரத்தைப் பின்வருமாறு குறிப்பிடலாம். 111 1 T Tel + T + ен (17) முறையே அயனிகள், ie, n ஆகிய குறியீடுகள் எலெக்ட்ரான்கள், நடுநிலை அணுக்கள் ஆகிய வற்றைக் குறிப்பிடுகின்றன. நடுநிலைப் பகுதியைப் பொறுத்துப் பிளாஸ் மாவின் இயக்கம் ஆம்பிப்போலார் விரவல் எனப்படும். இதன்காரணமாக இழுப்புவிசைகள் தோன்றுகின்றன. அவை லெப்பமாக ஆற்றலை வீணாக்குகின்றன. அயனிகளுக்கும் நடுநிலை அணுக்களுக்கும் இடையி இழுப்பு விசைகளால் ஆற்றல் வெப்பமாக லான மாற்றப்படுவதை ஜுல் வெப்பமாக்குதலுடன் சேர்த்துக் கொள்வதில்லை. . காந்தப் பாய்ம இயக்கவியல் நிகழ்வுகள். பாய்ம இயக்க விளைவுகளும் மின் காந்த விளைவுகளும் சேரும்போது பலவிதமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பல வேளைகளில் சமன்பாடுகளுக்கு அளவு குறிப்புக் காரணிகள் மட்டுமே வேறுபட்டதாகவும் பிற வகை களில் ஒத்தனவாகவுள்ள தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியுமென்பதைக் கவனத்தில் கொண்டால் இந்த நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்வது எளிதாகி விடும். ஒரு குறிப்பிட்ட கணக்கீடு அல்லது ஆய்வு மூலம் கிடைத்த முடிவுகளை ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பயன்படுத்த முடியும். சில குறிப்பிட்ட பரிமாணமில்லாத அளவு களின் மதிப்புகளைக் குறிப்பிட்டுச்சொல்வதன் மூலம் அளவு குறிப்பு விதிகளை (scaling laws) மிகவும் எளிதாகப் பயன்படுத்த முடியும். இயக்கம் இல்லாதபோது விசை அடர்த்தியை மாக்ஸ்வெல்லின் தகைவு டென்சாரின் விரிவாக்க மாகக் குறிப்பிட்டுச் சமநிலை நிபந்தனைகளை எளி தாக உருவாக்கிவிடலாம். = (jxB); (BB-8,12) (18) இந்த காந்தப் பாய்ம இயக்கவியல் 281 டென்சாரினால் குறிக்கப்படும் தகைவுகள் வகையானவை. அவை புலத்திற்குச் செங்குத் தான B*/24 என்னும் அழுத்தமும், புலக்கோடுகளின் திசையில் அமைந்த -B/24 என்னும் இழுவிசையும் ஆகும். புலக்கோடுகள் ஒன்றையொன்று விலக்க முனையும், அத்துடன் அவை நீட்டப்பட்ட ரப்பர் கயிறுகளைப் போலச் சுருங்கவும் முயற்சிக்கின்றன. காந்தப் புலக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக வும் நேராகவும் இருக்கும்போது p +B/24 ஒரு மாறிலி எனில் சமநிலை தோன்றுகிறது. காந்தப் புலக் கோடுகள் ஓர் உருளையின் அச்சைச் சுற்றி வட்டங் களாக அமைந்திருக்குமானால் சமநிலை நிபந்தனை பின்வருமாறு அமையும். dp B d dr ur dr (rB)=0. (19) இதைத் தொகையிட மேலும் ஒரு சமன்பாடு தேவை. எடுத்துக்காட்டாக B, r-க்கு நேர் விகிதத்தில் இருப்ப தால்,p+B/ மாறிலி எனக் கிடைக்கிறது. இந்த வடிவியல் அமைப்பில் உள்ள காந்தப் புலம், முதல் எடுத்துக்காட்டில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று இரு மடங்கு அழுத்தத்தைச் சமன் செய்ய முடியும். புலக்கோடுகளின் ஊடான இழுவிசை ஓர் உள் நோக் கிய விசையைக் காந்த அழுத்தச் சரிவுடன் கூட்டு கிறது. இரண்டாம் எடுத்துக்காட்டில் காணப்படும் வடிவியல், சூரிய வளி மண்டலத்திலுள்ள இழை களைப் பற்றிய கொள்கைகளிலும், கட்டுப்படுத்தப் பட்ட அணுக்கருப் பிணைவில் தோன்றுகிற நிலைக் கிள்ளல் (static pinch) பற்றிய கொள்கைகளிலும் பயன்படுகிறது. சமநிலை வடிவமைப்புகளைப் பற்றி விளக்கும் போது புலத்திற்கு எளிய கணிதக் கோவைகளை ஊகித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதில் நம்பக்கூடிய வகையில் மின்னோட்டப் பரவீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காட்டாக ருளையான வடிவமைப்பில் உள்ள காந்தப் புலம் உருளையின் அச்சின் திசையிலான ஒரு மாறிலி மின்னோட்ட அடர்த்தியால் உ உருவாக்கப்படுவதாகக் கொள்ளலாம். அச்சுத் திசையில் சமச்சீர்மையான வடிவமைப்புகளில் புலங்கள் ஓர் உள்ளார்ந்த பகுதியில் மட்டும் அடங்கி விடும்போது அழுத்த விசைகள். நிறையீர்ப்பு விசைகள் ஆகிய இரண்டுடனும் சமநிலையில் இருக்கும் வகையில் வளையக்குழல் வடிவிலும், முனைப்பட்ட வடிவிலும் புலங்களைத் தகுந்தபடி இணைத்துப் பராமரிக்க முடியும். கோளம், வரம்பற்ற உருளை ஆகிய வடிவமைப்புகளுக்குக் குறிப்பான தீர்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சூரியன், விண்மீன் மண்டலம், புறமண்டலங்களின் சுருள் கைகளிலுள்ள வலிமை காந்தப் புலங்களை விளக்க வரம்பற்ற உருளை வடிவமைப்புப் பெரிதும் உதவியாக உள்ளது.