பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 காந்தப்‌ பாய்ம இயக்கவியல்‌

284 காந்தப் பாய்ம இயக்கவியல் வாகத் தோராயப்படுகிறது. யர பூஜ்யமாக இல்லா மல் மிகச்சிறிய மதிப்புள்ளதாக இருந்தாலும் S ன் மதிப்பு ஏறக்குறைய ஒன்றுக்குச் சமமாக ஆகும்போது மட்டுமே பிளேசியசின் தீர்வில் கணிச மான திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது. S1 என்னும் எல்லையில் எல்லைப் படலத்தின் தடிமன் வரம்பிலியாகி, புறப்பரப்பு உராய்வு பூஜ்ய மாகி விடும். சிறுவீச்சு அலைகள், காந்தப் பாய்ம இயக்கவியல் சமன்பாடுகள் நேர் போக்கற்றதன்மை பெற்றிருப்பது இடையூறு ஆகும். சிறுவீச்சுள்ள இயக்கங்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதன் மூலம் அந்தச் சமன்பாடுகளை நேர் போக்குள்ளவையாக்க லாம். ஃபூரியர் பகுப்பாய்வுக்குப் பல வகைப்பட்ட அலைகள் கிடைக்கும். இவற்றில் சில பாய்ம இயக்கம் பங்கு கொள்ளாத, பெருமளவில் மின் காந்தத்தன்மை கொண்ட அலைகள். ஆனால் B. என்னும் ஒரு நேர்த் திசைக் காந்தப் புலத்தைச் செலுத்தினால் புலங்களுக் கும் பாய்ம இயக்கத்திற்கும் இடையில் ஒரு வலிமை யான இடைவினை தோன்றும் வகையில் குறைந்த அதிர்வெண்ணுள்ள அலை வகை உண்டாகும். இந்த அலைகள் சாதாரண ஒலி அலைகளை ஒத்தவையே. ஆனால் ஒரு பாய்மத்தில் ஒலி ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் மட்டுமே பரவும். ஆனால் இந்த அலை களுக்கு மூன்று வேகம் உண்டு. இவ்வேகம் B இன் திசையைப் பொறுத்து அலைகள் பரவும் திசைகளைப் பெரிதும் சார்ந்துள்ளன. பாய்மமும் புலக்கோடுகளும் சேர்ந்து நகர முனை யும்போது தன்னியல்பான மீட்டு வரும் விசைகள் தோன்றும். அவை பல வெல்வேறு வகையான வழி களில் சாதாரண அழுத்த விசைகளுடன் ணைகின் றன. இதன் காரணமாகப் பலவகையான அலைகள் தோன்றும். குறிப்பாக, அலை பரவும் திசைக்குச் செங்குத்தாகப் பாய்மம் நகரும்போது சறுக்கு விசை கள் உண்டாகும். மிக எளிமையான சறுக்கு அலை ஆல்ப்வென் அலை எனப்படும்.அது காந்தப் புலக் கோடுகளுக்கு இணையாக v=B/v/pu என்னும் ஆல்ப்வென் வேகத்துடன் நகரும். காந்தப் புலத்திற் குச் செங்குத்தான திசையில் இறுக்க அலைகளின் வேகம் / + இதில் என்பது ஒலியின் சாதா ரண வேகம். அலையின் பரவு திசைக்கும். காந்தப் புலத்தின் திசைக்கும் இடையில் 8 என்னும் தன்னியல்புக் கோணம் அமைந்திருக்கும்போது ஓர் அலை வகை சறுக்கு அலையாக இருக்கும். அதில் B என்னும் புலமும் K என்னும் அலைத் திசையனும் அடங்கிய தளத்திற்குச் செங்குத்தாகப் பாய்மம் நகரும் அந்த அலையின் திசை வேகம் v, cos ஆகும். பிற இரண்டு அவை வகைகளும் பொதுவான கலப்பின வடிவத்தில் இருக்கும். அவற்றில் K திசையனின் v= திசைக்குச் செங்குத்தாகவும், இணையாகவும் (B,,K) தளத்தில் பாய்ம இயக்கத்தின் ஆக்கக் கூறுகள் அமைந்திருக்கும். சறுக்கு அலை வேகத்தைவிட மிகுதியாகவும். குறைவாகவும் உள்ள இரண்டு திசை வேகங்கள் பின் வருமாறு: K திசையன் B. க்குச் √½[v¸²+v³±√(v¸²+v¸²)³ — 4v¸²v,ª cos* 0] - செங்குத்தாகவோ, இணையாகவோ இருக்கும்போது அவ்விரு கலப்பின அலை வகைகள் தூய சறுக்கு அலையாகவும் இறுக்க அலையாகவும் மாறி விடும். K, B. க்கு இணையாக இருக்கும்போது அவை ஒரே தளத்தை அமைக்கா. எனவே இரு சறுக்கு அவை வகைகளும் ஒரே மாதிரியாகி, பிரித்தறிய முடியாத வையாகி விடும். K, B. க்குச் செங்குத்தாக இருக்கும் போது இரு சறுக்கு அலை வகைகளின் திசைவேகமும் பூஜ்யமாகி இறுக்க அலை மட்டுமே எஞ்சும். B என் னும் புலத்தில் சுருள் பாதையில் ஓடும் அயனிகளின் கோணத் திசை வேகமான w= eB/m என்னும் மதிப்பை அலையின் அதிர்வெண் அணுகும்போது பாய்ம இயக்கத்திற்கும் புலத்திற்கும் இடையிலான வலிய இணைப்பு மறைந்து விடும். பாய்மம் புலக் கோடுகளுக்குக் குறுக்காகப் புகுந்து அலைக் கட்ட மைப்பைத் தகர்த்து விடும் அதிர்வெண்ணான Van பிற எல்லை ஆகும். ஒரு வலிமையான காந்தப் புலத்தில் ஓர் உருகிய சோடியத் தம்பத்தைச் சுழற்றுவதன் மூலம் ஆய் வகத்தில் ஆல்ப்வென் அலைகள் உண்டாக்கப்படுகின் றன. இந்த ஆய்வை வடிவமைப்பதில் அளவு குறிப்பு விதிகள் மிகவும் பயன்படுகின்றன. இந்த நிகழ்வை விவரிப்பதில் N, = R,VS BLoVujp என்னும் லுன்ட்குவிஸ்ட் எண் இயல்பான பங்கேற்கிறது. இதில் I என்பது தம்பத்தின் ஆரம். அது ஒன்றை L விட மிகப்பெரியதாக இருக்க வேண்டும். = அநிர்ச்சி அலைகள். நேர் போக்கற்ற நிகழ்வுசுளி லும் காந்தப் பாய்மஇயக்கவியல் அலைகளின் மூன்று நிலைக் கட்டமைப்பு வெளிப்படுகிறது. p,P, B ஆகிய வற்றைப் பொறுத்த மூன்று திசைவேகங்கள் கிடைக் கி ன்றன. இத் திசைவேகங்கள் சில குறிப்பிட்ட வகை உலைவுகளின் மாதிரித் தனமான இயக்கத்தை வரை யறுக்கின்றன. பிற சாதாரண பாய்ம இயக்கவியல் அலைகளைப்போலவே காந்தப் பாய்ம இயக்கவியல் அலைகளும் முகப்பில் மிகுசரிவுள்ளவையாகி அதிர்ச்சி அலைகளாக உருவெடுக்கின்றன. அதிர்ச்சி அலை கள் எனப்படுகிற பரப்புகளுக்குக் குறுக்காக இயற் பியல் நிலை தொடர்ச்சியற்ற தன்மையில்மாறும். இம் மாற்றங்கள் மாறாமை விதிகளால் கட்டுப்படுத்தப்படு கின்றன. இவை அதிர்ச்சிமுகப்பின் ஒருபுறத்தில் உள்ள நிலைமாறிகளுக்கும், மறுபுறத்தில் உள்ள நிலை மாறி களுக்கும் இடையிலும், அதிர்ச்சி முகப்பின் u என்னும் வேகத்திக்கு இடையிலும் தொடர்புகளை ஏற்படுத்து கின்றன. ஓர் அதிர்ச்சி அலை முகப்பின் இரு புறங்