பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தப்‌ பாய்ம இயக்கவியல்‌ 285

களிலும் உள்ள F என்னும் அளவுக்கு இடையிலான வேறுபாடு AF = F,-F, அதிர்ச்சி அலை முகப்புக் குச் செங்குத்தாக முன்னோக்கியுள்ள அலகு திசை யன் எனில், வரம்பற்ற மின் கடத்துந் திறன் உள்ள ஒரு பாய்மத்திற்கு அதிர்ச்சி நிபந்தனைகள் பின்வரு மாறு அமையும். AB. n = 0 A[(v. n -- u) B - (B.n) vJ = 0 A{(v.n-u) pv + (p +B^{2)n - (B.n) B/p] = 0 A{{v.n-u)p} =0 Alv.n-u) (}p + pE +B' / 2,) + (v.n) (p+ B'/2, )-(B.n) (B.v) /A}\ - . B-இன் ஒரு தொடுவியல் ஆக்கக் கூறு தொடர்ச்சி யற்றதாக இருக்குமானால், அலை முகப்புடன் கூடவே I= என்னும் படல் மின்னோட்டம் பாயும் என்னும் கூற்றையும் இச் சமன்பாடுகளுக்குத் துணையாகச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அதிர்ச்சி முகப்புகளிலும் விரைவானவை, மெது வானவை, நடுத்தர வேகமுள்ளவை என மூன்று வகை உள்ளன. B,n க்குச் செங்குத்தாக இருக்கும் போது செங்குத்து அதிர்ச்சிகளும், B, n ஆகியவை ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்போது இணை அதிர்ச்சிகளும் அமையும். இணை அதிர்ச்சிகளில் பாய்ம இயக்கவியல் இயக்கம் காந்தப் புலத்துடன் ணைந்திராது. அதிர்ச்சி சாதாரண பாய்ம இயக்க வியலில் உள்ளதைப் போலப் பரவும். இந்த நிகழ்வில் மெதுவான அதிர்ச்சிகளும் நடுத்தர வேகமுள்ள அதிர்ச்சிகளும் ரா. இணையான அதிர்ச்சிகளையும் மெதுவான, விரைவான செங்குத்து அதிர்ச்சிகளையும் பாய்வுத் திசைவேகம் இரண்டு பக்கங்களிலும் செங்குத்தாக உள்ள ஒரு மேற்கோள் சட்டத்தில் இருப்பதாகக் கருதலாம். இணையாகவோ, செங்குத்தாகவோ இல்லாத அதிர்ச்சிகள் சாய்ந்தவை எனப்படும். இவற்றுக்கு அதிர்ச்சி முகப்பின் இரு புறங்களிலும் அருவிக்கோடு கள் Bக்கு இணையாகவும் ஆனால் அதிர்ச்சி முகப்பைக் கடந்து செல்லும்போது திசை மாறுவதாகவும் உள்ள ஒரு மேற்கோள் சட்டத்தில் அதிர்ச்சி முகப்பிற்கு இரு புறங்களிலும் மின் புலம் மறைந்து விடுகிறது. இம் மூன்று அதிர்ச்சி வகைகளிலும் காந்தப் புலத்தின் தொடுவியல் ஆக்கக் கூறு B இல் ஏற்படும் மாற்றம் நன்கு வேறுபட்டுள்ளது. ஒரு விரைவான அதிர்ச்சி முகப்பிற்குக் குறுக்காக உள்ள B திசை மாறாமல் எண் மதிப்பில் உயரும். ஒரு மெதுவான அதிர்ச்சி முகப்புக்குக் குறுக்காக உள்ள B, எண் மதிப்பில் குறைந்து, திசை மாறாமலோ எதிர்த் திசைக்கு காந்தப் பாய்ம இயக்கவியல் 285 மாறியோ அமையும். ஒரு நடுத்தர வேகமுள்ள அதிர்ச்சி முகப்புக்குக் குறுக்காக உள்ள B; எண் மதிப் பில் மாறாமல் திசையை மாற்றிக் கொள்ளும். ஒரு விரைவான அதிர்ச்சியில் அதிர்ச்சிக்கு முன் புறத்தில் பூஜ்ய மதிப்புள்ள B. அதிர்ச்சிக்குப் பின் புறத்தில் பூஜ்யமல்லாத ஒரு மதிப்புள்ளதாக மாறலாம். இதற்குச் செயல் தொடங்கு (switch on) அதிர்ச்சி என்று பெயர். ஒரு மெதுவான அதிர்ச்சியில் B அதிர்ச்சிக்குப் பின்புறத்தில் பூஜ்யமாக மாற முடியும். இது செயல் முடிப்பு (switch off) அதிர்ச்சி எனப் படும். அதிர்ச்சி முகப்புக்கு முன்புறத்தில் "g>V என இருந்தாலும், அதிர்ச்சி வலிமை ஒரு மாறுநிலை மதிப் புக்குக் குறைவானதாக இருந்தாலும் மட்டுமே செயல் தொடங்கு அதிர்ச்சிகள் உண்டாக்க முடியும். அதிர்ச்சி முகப்புக்குப் பின்புறத்தில் <D. என இருந்தால் எப்போதும் செயல் முடிப்பு அதிர்ச்சிகள் உண்டாகும். அதிர்ச்சி போதுமான வலிவுடனிருந்தாலும் V>V என இருந்தாலும் செயல் முடிப்பு அதிர்ச்சிகள் தோன்றும். நிலையற்ற பாய்வு. ஒரு பொருளை அசைய வைப் பதன் மூலம் அல்லது புலங்களை உண்டாக்கக்கூடிய ஒரு மின் சுற்றை, செயல் தொடங்க வைப்பதன் மூலம் தோன்றி மறையும் நிலையற்ற பாய்வுகளை உண்டாக்க முடியும். ஒரு வரம்பற்ற கிடைத்தகடு குறுக்குத் திசையில் உள்ள ஒரு காந்தப் புலத்தில் திடீரென நகரத் தொடங்கினால் ஒரு தோன்றி மறையும் பாய்வு உண்டாகும். அது plaB2: என்னும் வரிசையிலுள்ள காலத்தில் சீர் நிலையை அணுகும். ஓரளவு வரம்பிலியான ஒரு கிடைத் தட்டு, ணையான புலத்தில் (S < 1) நகரும் போது அதன் நீளவாக்கில் உருவாகும் பாய்வு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தன்மைகள் கொண்டிருக்கும். முன் பக்கத்திலுள்ள விளிம்புக்கும் x=(1-VSut என்னும் புள்ளிக்கும் இடையில் பாய்வு, முன்பு விளக்கப்பட்ட சீர்நிலையை அணுகும். x = (1 + VS]pt என்னும் புள்ளிக்கு அப்பால் பாய்வு வரம்பிலி தட்டில் காணப்படும் நிலையை எட்டும். இவ்விரு புள்ளிகளுக்கும் இடையில் ஒரு நிலை மாறு பகுதி காணப்படும். . 1 ஒரு கிள்ளல் மின்னிறக்கம் குலைவு அடையும் போது, சுருங்குகிற காந்தப் புலத்தால் மேலே வாரித் தள்ளப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஒரு மெல்லிய படலமாகக் குவிக்கப்பட்டு அந்தப் படலம் அச்சை நோக்கித் தள்ளப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். இம்முறையில் அந்தப் படலத்தின் ஆரத்திற்கு ஒரு சாதாரணமான வகைக்கெழுச் சமன்பாட்டை உரு வாக்கிக் கொள்ள முடியும். இத்தகைய கிள்ளலின் குலைவு நேரம் Et r(pu). இதில் p என்பது பிளாஸ்மாவின் தொடக்க அடர்த்தி. T என்பது அதன் ஆரம். E என்பது மின்னிறக்கத்தை உண்டாக்குகிற மின் புலம்.