பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 காந்தப்‌ பாயம்‌

286 காந்தப் பாயம் படலப் பாய்வு நிலையாமை. R.மதிப்பு ஒரு ஒரு மாறுநிலை எண்ணுக்கு மேற்பட்டதாக ஆகும்போது பாய்வு குலைந்து விடுகிறது. ஒரு காந்தப் புலம் பாய்வின் நிலைத்தன்மையை மிகுதிப்படுத்தும். Rஇன் மாறுநிலை மதிப்பு NH - க்கு நேர் விகிதத்தில் உயர் கிறது. இரண்டு கிடைத்தகடுகளுக்கு இடையில் ஒரு பாய்மம் காந்தப் புலத்திற்குச் செங்குத் தாகப் பாயும்போது R = 50,000 NH என்னும் அளவில் நிலையாமை தொடங்கும். R H ணையான 225 Ni என்னும் அளவில் குழப்பங்கள் அடங்கத் தொடங்குகின்றன. ஓரச்சான இரண்டு உருளைகளின் மிக விரை உட்புற உருளை வெளி உருளையைவிட வாகச்சுழலும்போது அச்சுத் திசையில் ஒரு காந்தப் புலத்தைச் செலுத்தினால், NH ≥ 20 என்னும் அளவு களில் மாறுநிலைத் திசைவேகம் ஏறக்குறைய NH/2 மடங்கு உயர்கிறது. கே. என். ராமச்சந்திரன் நூலோதி Edward M. Purcell, Electricity and Magnetism, Volume 2, McGraw-Hill Book Company, New York. 1965.. C. Thomas Olivo, Thomas P. Olivo, Fundamentals of Applied physics, Delmar Publishers, New York, 1978. காட்டியுள்ளவாறு குறிக்கலாம். காந்தப் புலச் செறிவு (intensity of the field) மிகுதியாக உள்ள இடங்களில் காந்த விசைக் கோடுகள் நெருங்கியும், செறிவு குறைவாயுள்ள பகுதிகளில் விலகியும் அமையும். எனவே காந்த விசைக் கோடுகள் மூலம் ஒரு புள்ளியி லுள்ள காந்தப் புலச் செறிவைக் குறிக்கலாம். N காந்தப் பாயம் ஒரு சட்டக் காந்தம் தன்னைச் சுற்றி ஒரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும். இந்தக் காந்தப் புலத் தைக் காந்த விசைக் கோடுகளால் (magnetic lines of force) குறிக்கலாம் என்னும் கருத்தை மைக்கேல் ஃபாரடே என்பார் முதன் முதலில் எடுத்துரைத்தார். காந்த விசைக் கோடுகள் காந்த வடமுனையிலிருந்து புறப்பட்டுக் காந்தத் தென்முனையை கின்றன. சட்டக் காந்தத்தின் உள்ளே வ்விசைக் கோடுகள் தென்முனையிலிருந்து வடமுனையை நோக்கிச் செல்கின்றன. ஒரு காந்தப் புலக் காந்தப் பாயத்தை (magnetic flux) விசைக்கோடுகளின் எண்ணிக்கையால் குறிக்கலாம். வந்தடை ஒரு சட்டக் காந்தத்தைச் சுற்றியுள்ள காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் தனித்த வடமுனை ஒன்றை வைத்தால், அது ஒரு விசையை உணர்வதோடு அவ்விசையின் திசையிலும் நகரும். இவ்விசையின் அளவும் திசையும் ஒவ்வொரு புள்ளியிலும் மாறு படுவதால், அதற்கேற்ப வடமுனை ஒரு வளை கோட்டில் இயங்கக் கூடும். இக்கோடு காந்த விசைக் கோடு எனப்படும். காந்த விசைக் கோடுகள் என்பவை கற்பனைக் கோடுகள் ஆகும். புறமும் ஒரு சட்டக் காந்தத்தின் உள்ளும் விசைக் கோடுகளைப் படத்தில் அமையக்கூடிய படம் 1. சட்டக் காந்தத்தில் விசைக்கோடுகள் விசைக் கோடுகளுக்கு நேர்குத்தாக அமைந்த ஒரு பரப்பின் வழியாகச் செல்லும் அவற்றின் மாத்த எண்ணிக்கை அந்தப் பரப்பின் வழியே உள்ள காந்தப் பாயம் எனப்படுகிறது. இது p8 என்னும் குறியீட்டால். வெபர் (weber) என்னும் அலகால் குறிப்பிடப்படுகிறது. காந்த விசைக் கோடுகளின் அடிப்படையில் குறிப்பிட்டால் ஒரு பரப்பில் காந்தப் பாயம் ஒரு வெபர் எனில் அந்தப் பரப்பின் வழியே ஒரு விசைக்கோடு செல்வதாகக் கொள்ளப்படுகிறது. காந்தப் பாயத்தைப் பாய அளவி (flux meter) என்னும் கருவியால் அளவிடலாம். காந்தப் புலத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காந்தப் பாயத்திற்கு நேர்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பின் வழியே செல்லும் விசைக் கோடுகளின் எண்ணிக்கை அப்புள்ளியில் காந்தப்பாய அடர்த்தியைக் குறிக்கும். இது காந்தத் தூண்டல் (magnetic induc- tion) என்றும் குறிப்பிடப்படும். B என்னும் குறியீட் டால் குறிப்பிடப்படுகிறது. ஒரு புள்ளியில் காந்தத் தூண்டல் B எனில் அப்புள்ளியைச் சுற்றி அமைந்த ஓரலகு பரப்பின் வழியே செல்லும் விசைக் கோடு களின் எண்ணிக்கை B ஆகும். காந்தப் பாய அடர்த்தி