களிமண் 11
களிமண் களிப்பாறைகள் மீடு என்பாரால் கெட்டிப்புக் களிப் பாறை (compaction shale) எனவும், ஒட்டிப்புக் களிப்பாறை (cementation shale) எனவும் ரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. களிப்பாறைகள் ஒருவகைப் படிவுப் பாறை களாகும். புவியின் புறப்பகுதியில் காணப்படும் படிவுப் பாறைகளில் 70%-80% களிப்பாறைகள் காணப்படுகின்றன. களிப்பாறைகள் பல வகைகளில் பயன்படுகின்றன. இவை பீங்கான், செங்கல், ஓடுகள், சிமெண்ட், கழிவுநீர்க் குழாய்கள் முதலியன தயாரிப்பதில் பயன்படுகின்றன. களிப்பாறைகள் வலிமையற்றவை. ஆகையால் இப்பாறைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளை அமைக்க இயலாது. இப்பாறைகளின் மேல் உயர மான கட்டடங்களும் அணைகளும் கட்டக்கூடாது. இந்தியாவில் கடப்பா, கர்நூல் மாவட்டங்களின் பல இடங்களில் களிப்பாளப் பாறைகள் கின் ன்றன. காணப்படு இல.வைத்திலிங்கம் நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, John Wiley & Sons, New york, 1955. களிமண் . மிக மண் பாறை அல்லது படிவுகளில் உள்ள நுண்ணிய மணித்துகள்கள் களிமண் (clay) எனப் படும். இது வண்டல் (silt) மண்ணைவிட நுண்ணிய தாகும். மேலும், பெருமளவு களிமண் உட்கூறுகளா வான பாறை அல்லது படிவுகளையும் களிமண் குறிக்கும். அலோஃபேன், குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், ஸியோலைட், இரும்பு ஹைட்ராக்சைடு போன்ற மிக நுண்ணிய கனிமப் பொருள்களைக் களிமண் கொண் டுள்ளது. பெரும்பாலான களிமண்கள், களிமண் கனி மங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. நுண்ணிய துகளுடன் கூடியுள்ள களிமண் ஈரமாக உள்ளபோது குழைமப் பண்பு, நீரில் கரையும் கூழ் நிலைப் பண்பு, ஒன்றாக இணையும் திறன், நீரின் அடியில் தங்கும் தன்மை ஆகியவற்றைப் பெற் றுள்ளது. தோற்றமும், இருப்பிடமும். மண், படிவுகள், படிவுப் பாறைகள், நீர்ம வெப்பப் படிவுகள் ஆகியவற்றில் மிகு அளவில் களிமண் இயற்கையாகக் கிடைக்கிறது. கனிமப்பொருள், நீர், காற்று ஆகியவற்றுடன் களி மண்ணும் மண்ணின் மிக முக்கியமான நான்கு கூறுகளில் ஒன்றாகும். களிமண், மண்ணின் நேரடிக் உட் படம் 1. களிமண் புவியிலிருந்து வெட்டியெடுக்கப்படுகிறது