294 காந்தம் (எந்திரப் பொறியியல்)
294 காந்தம் (எந்திரப் பொறியியல்) யெண்ணுக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். இதைக் கீழ்க்காணும் சமன்பாடாக எழுதலாம். P (B,f) = Ph + Pa = Bofa = மாறிலி X f + மாறிலி × P கொண்ட இழப்பைக் குறைந்த பின்தங்கல் இழப்புக் பொருளைப் பயன்படுத்திப் பின்தங்கல் குறைக்கலாம். சுழல் மின்னோட்ட இழப்பைத் தவிர்க்க, பொருள் இடையில் வெட்டப்பட்ட தகடு களாகப் பயன்படுகிறது. கேள் ஒலி அதிர்வெண் கருவிகளில் மெல்லிய தகடுகளாலான காந்தப் பொருள்கள் அல்லது பசையால் சேர்க்கப்பட்ட உலோகக் கலவைத் துகள்கள் பயன்படுகின்றன. உயர் மின்தடை எண் கொண்டுள்ளமையால் (1-10 ஓம்-செ.மீ.) பெரைட்கள் மிகு அதிர்வெண்களின் மின்மாற்றிகளின் மையங்களாகப் பயன்படுகின்றன. வன்காந்தப் பொருள்கள் (Hard magnetic materials). நிலைக் காந்தங்கள் அல்லது வன்காந்தப் பொருள்கள் ஒருமுறை காந்தமாக்கப்பட்டபின் காந்த நீக்கலைப் பெரிதும் எதிர்க்கின்றன. (அட்டவணை-2). அவை எடுத்துக்காட்டாக மின்னோடிகள், ஒலிப்பான்கள், அளவை மானிகள் போன்றவற்றில் பயன்படுகின்றன. அவற்றின் காந்த நீக்கல் புலம் (H.) மிகுதி (10 முதல் 100 கி.ஆ/மீ). வழக்கில் உள்ள நிலைக் காந்தங்கள் பெரும்பாலும் செராமிக் வகைகள். அதற்கடுத்துச் சிறப்பு வாய்ந்தவை ஆல்னிகோ, கோபால்ட்-சமா ரியம் கலவை, இரும்பு - குரோமியம் -கோபால்ட் கலவை நீண்ட மண்டல ஒற்றை வகைகள் elongated single domain) போன்றவை. ஒரு நிலைக் காந்தத்தின் சிறப்பியல்பு உயர்ந்த ஆற்றல் பெருக்குத் தொகையால் BH)m குறிப்பிடப்படுகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப மிகு H, மிகுதி மீதத் தூண்டல் B. (residual induction) (H-பூஜ்யமாகும்போது Bஇன் மதிப்பு, காந்த உட்புகுதிறனின் பின்மாற்றமும் reversible) தன்மையும் ஆகியவை கணக்கில் . கொள்ளப்படுகின்றன. பதிவு செய்யப் பயன்படும் காந்தப் பொருள்கள். பதிவு செய்யப்படும் நாடாக்களும், தட்டுகளும் பெரும்பாலும் S-Fe, O, எனும் காந்தப் பொருளால் ஆனவை. ஆனாலும் பல புதிய காந்தப் பொருள் களும் தற்போது பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு: உலோகத்துகள், குரோம் ஆக்ஸைடு, உலோகக் கலவை நாடாக்கள் ஆகியவை. ஒரே சீராக ஒரே திசைப் பண்போடு இப்பொருள்களை வளைந்து கொடுக்கும் நாடாக்களிலும், வளையாத தகடுகளி லும் பூசுதல் மிகவும் கடினமான, தயாரிப்புச் சிக்கல் உடையதாகும். வெ. ஜோசப் . நூலோதி. Edward M. Purcell Electricity and Magnetism, Volume 2, McGraw-Hill Book Company. New York. 1965; M. Nelkon, P. Parker, Advanced Level physics, Fifth Edition, Arnold Heinemann Publishers Ltd, New Delhi, 1982. காந்தம் (எந்திரப் பொறியியல்) ஒரு ஃபெர்ரோ காந்தப் பொருளைச் சுற்றிலும் ஏற் படுகின்ற காந்தப்புலம், மற்றொரு காந்தப் புலத்தை எதிர் கொள்ளும்போது சுழற்சி விசை பெறப்படு கிறது. ஆல்னிகோ - 5 என்னும் ஃபெர்ரோ காந்தப் பொருளின் காந்தப் புலத்தின் அளவை மின்முறை மூலம் அதிகரிக்கச் செய்து பின்னர் மின்சாரம் நீக்கப் படும்போது, அதன் காந்தப் புலம் பெரிதும் குறைக்கப்படுகிறது. நவீன அணுக் கொள்கைப்படி, காந்தப் பொருள் களின் காந்தப் புலம் எலெக்ட்ரான் மண்டலங்களில் எலெக்ட்ரான்களின் சுழற்சி காரணமாக உண்டாகின் றது. எலெக்ட்ரான்கள் அவ்வாறு கழலும்போது சிறிய மின்னோட்டங்களைத் தருகின்றன. இம்மின்னோட் டங்களைச் சுற்றிக் காந்தப் புலமும் உண்டாகிறது. மேற்காணும் மின்னோட்டத்தால் விளைகின்ற காந் தத் திருப்புத் திறனைப் பின்வரும் சமன்பாட்டால் அறியலாம். காந்தத் திருப்புத்திறன் = மின்னோட்டத்தின் அளவு (ஆம்பியரில்) மின்னோட்டம் பாய்கின்ற பரப்பளவு (சதுர மீட்டரில்) ஓர் அணுவின்காந்தத் திருப்புத் திறன் அவ்வணு விலுள்ள அனைத்து மின்அணுக்களின் (எலெக்ட்ரான் களின்) கூடுதல் சுழற்சியைப் பொறுத்து அமையும். ஃபெர்ரோ காந்தப் பொருள்களிலுள்ள ஒவ்வோர் அணுவிற்கும் ஒரு காந்தத் திருப்புத்திறன் உள்ளது. மேலும் அணுக்களின் அனைத்துக் காந்தத் திருப்புத் திறன்களும் ஒரே திசையை நோக்கி மையம் கொண் டுள்ளன. இவ்வாறு இருப்பதால் ஃபெர்ரோ காந்தப் பொருள்களுக்கு ஒருகுறிப்பிடத்தக்க காந்தத் திருப்புத் திறன் உண்டாகிறது. இந்தக் கூடுதல் திருப்புத்திறன் அப்பொருள்களுக்குரிய காந்தப் புலத்தைத் தருகிறது. இக்காந்தப் புலம் ஒரே திசையில் செயல்படுவதால் மற்றொரு காந்தப் புலத்தை எதிர்கொள்ளும்போது சுழற்சி விசையைத் தருகிறது. ஒரு நீள்சதுரக் காந்தத்தைப் புவியின் காந்தப் புலத்தில் சுழல வைக்கும்போது அக்காந்தம் வட தென் திசைகளை நோக்கி நிற்கிறது. வடதிசையை நோக்கி நிற்கும் முனையை வடதுருவம் எனவும்