296 காந்தமாக்கல்
296 காந்தமாக்கல் மிகுதியான காந்த மண்டலங்கள் உள்ளன. அவற்றின் நிகர காந்தத் திருப்புத்திறன்கள் பல திசை களிலும் அமைந்திருக்கும். இதன் காரணமாக அவற் றின் மொத்த விளைவு பூஜ்யமாகி விடுகிறது. ணையாகக் உள்ள ஒரு ஃபெர்ரோ காந்தப் பொருளை H என்னும் காந்தமாக்கும் புலத்தில் வைத்தால், அப்புலத்திற்கு காந்தத் திருப்புத்திறன்கள் மண்டலங்கள் விரிவடைகின்றன. அடுத்து, காந்த மாக்கலின் திசை சுழன்று திசையொவ்வாப் பண்புகள் (anisotropic) மறைகின்றன அல்லது குறைகின் ன்றன. காந்தமாக்கும் புலம் நீங்கிய பிறகும் பொருளில் ஓரளவு காந்தமாக்கல் தங்கிவிடுகிறது. இதற்குக் காந்தத் தேக்கம் (remanence) என்று பெயர். வ காந்தமாக்கல் வரைபடங்கள். இவ்வரைபடங்கள் காந்தவியல் பொருள்களை விளக்க உதவுகின்றன. அவற்றை B-H வரைபடங்கள் எனவும் கூறுவதுண்டு. கிடை ஆயத்தில் H மதிப்புகளையும், குத்தாயத்தில் M அல்லது B மதிப்புகளையும் அமைத்து இக்கோடுகள் வரையப்படுகின்றன. இத்தகைய வரைபடத்தில் B, என்பது தேங்கிவிட்ட காந்தத் திருப்புத்திறன் B =4r M. இங்கு M, என்பது காந்தத் தேக்கம். H, என்பது காந்த நீக்க விசை. இது B மதிப்பைப் பூஜ்யமாக்க எதிர்த் திசையில் செலுத்த வேண்டிய காந்தப் புலத்தின் அளவுக்குச் சமம்.M' என்பது தெவிட்டல் நிலைக் காந்தமாக்கல். இது அனைத்து மண்டலங் களும் ஒரே திசையில் அமையும்போது இருக்கக் கூடிய பெரும் காந்தமாக்கல் ஆகும். தெவிட்டல் காந்தமாக்கல் என்பது, பொருள் முழுதும் ஒற்றை மண்டலமாக இருக்கும்போது அதன் தன்மயக் காந்த மாக்கலுக்குச் சமமாக இருப்பது. மிகப்பெரிய காந்த மாக்கும் ஒரு புலத்தைச் செலுத்தினால் காந்த மாக்கலை மேலும் சிறிதளவு மிகுதியாக்க முடியும். தெவிட்டல் காந்தமாக்கல் என்பது வெப்பநிலையைப் பொறுத்தது. கியூரி வெப்பநிலைக்கு மேல் அது முழுமையாக மறைந்து, ஃபெர்ரோ காந்தப் பொருள் பாரா காந்தப் பொருளாக மாறிவிடுகிறது. . ஒரு பொருளின் தொடக்க உட்புகுதிறன், காந்த மாக்கல் கோட்டில் H=O என்னும் புள்ளிக்கு நேரான சரிவு ஆகும். தொடக்க உட்புகுதிறனுக்கும் காந்த நீக்க விசைக்கும் இடையில் ஓர் உறுதியான உற வுண்டு. தொடக்க உட்புகுதிறன் மிகுதியாயிருக்கும் பொருள்களுக்குக் காந்த நீக்க விசை குறைவாகவும் தொடக்க உட்புகுதிறன் குறைவாயிருக்கும் பொருள் களுக்குக் காந்த நீக்க விசை மிகுதியாகவும் இருக்கும். ஒரு பொருளின் B, H ஆகியவற்றுக்கிடையிலான உறவை ரௌலண்ட் வளையம் அல்லது கம்பிச்சுருள் வளையத்திற்குள் அப்பொருளாலான உள்ளகத்தை அமை மைத்து ஆய்வு செய்யலாம். 1 என்னும் சராசரிச் சுற்றளவும் N சுற்றுகள் உள்ளதுமான ஒரு சுருள் வளையத்தில் I என்னும் மின்னோட்டம் செல்லும் H, B 4nM, = B, H+4M² படம்1. காந்தமாக்கல் வரைபடம் H போது H=NI. வளையத்தின் ஆரம், ஒரு சுற்றின் ஆரத்தைவிடப் பன்மடங்கு மிகுதியாக இருக்கு மானால் பாய அடர்த்தி ஏறக்குறைய சீராக அமையும். பாய அடர்த்தி B, காந்தமாக்கும் புலம் H ஐப் பொறுத்த ஒரு நேர்கோட்டுச் சார்பெண் அன்று. மேலும் அதன் மதிப்பு H ஐப் பொறுத்திருப்ப துடன், பொருளின் கடந்த காலக் காந்தவியல் வரலாற்றையும் சார்ந்துள்ளது. ரௌலண்ட் வளையத்தின் ஃபெர்ரோ காந்த உள்ளகத்திலிருந்து காந்தத்தன்மையை நீக்கச் சுருளில் ஒரு பெரும் வலிலிலிருந்து தொடங்கிப் படிப் படியாகக் குறையும் மின்னோட்டங்களை எதிர் எதிர்த் திசைகளில் மாற்றிச் செலுத்த வேண்டும். வளையச் சுருளின் மேல் தேடு சுருள்களை (search coil) சுற்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அலைவு காட்டும் கால்வனா மீட்டரில் உண்டாகிற துடிப்பை (throw) அளப்பதன் மூலம், B இல் ஏற் படும் மாற்றங்களை அளக்கலாம். ஆனால் B இன் மதிப்பை இம்முறையில் கண்டுபிடிக்க இயலாது. இயல்புகாந்தமாக்கல். ரௌலண்டு வளையத்தின் உள்ளகத்தைத் தொடக்கத்தில் காந்த நீக்கம் செய்து விட்டால் H=O, B=O. வளையச் சுருளில் செல்லும் மின்னோட்டத்தை விரைவாக உயர்த்திக் காந்த மாக்கும் புலம் H, என்னும் மதிப்பை எட்டுமாறு