298 காந்த மிகைப்பி
298 காந்த மிகைப்பி மின்னோட்டங்களும்(eddy currents)ஆற்றல் இழப்பை உண்டாக்குகின்றன. மின் கடத்தாத ஃபொரைட்டு களில் சுழல் மின்னோட்டங்கள் தோன்றா. உலோக உறுப்புகளைத் தகடு அடுக்குகளால் உருவாக்குவதன் மூலம் சுழல் மின்னோட்டங்களைக் குறைக்கலாம். காந்த நீக்கப்புலங்கள். ஒரு பொருளின் மேல் H என்னும் காந்தமாக்கும் புலம் ஏற்படுத்தும் விளைவு, அப்பொருளின் பரப்பில் உருவாகிற முனைகளிலிருந்து வெளிப்படும் ஒரு காந்த நீக்கப் புலத்தின் காரணமாகக் குறைந்து விடுகிறது. இந்தக் காந்த நீக்கப் புலத்தின் அளவு Nm ஆகும். இதில் N என்பது காந்த நீக்கக் காரணி (demagietizing factor) எனப்படும். அது H ஐப் பொறுத்துப் பொருள் அமைந்துள்ள திசை யையும் அதன் வடிவத்தையும் பொறுத்துள்ளது. H திசையில் நீண்ட கம்பி போன்ற ஒரு மெல்லிய பொருளுக்கு அதன் மதிப்பு பூஜ்யமாகவும். H க்குச் செங்குத்தான திசையில் பரந்த தடித்த பொருளுக்குச் (எகா. H திசைக்கு } செங்குத் தான தளத்திலமைந்த ஒரு வட்டத் தகட்டுக்கு 4 ஈ ஆகவும் அமையும். காந்தமாக்கல் வரைபடங்களை உருவாக்கும்போது, காந்த நீக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கம்பிகளே பயன்படுகின்றன. ஃபெர்ரோ காந்த ஒத்ததிர்வின்போது காந்த நீக்ஸ விளைவுகள் பெரும் சிறப்புப் பெற்றுவிடுகின்றன. ஒரு கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Arthur F. kip, Fundamentals of Electricity and Magnetism, Second Edition, McGraw Hill Kogakusha Ltd, Tokyo, 1969 ; Edward M.Pur cell, Electricity and Magnetism, Volume 2, McGraw Hill Book Campany. New York. 1970. காந்த மிகைப்பி தெவிட்டு நிலை வினைக்கலனில் (saturable reactor) குறை ஆற்றல் நிலையிலுள்ள நேர்திசை மின்னோட்ட உள்ளீட்டுக் குறிப்பலைகளை (dc input signal) மேம் படுத்திப் பளுவிற்குப் (load) பாயும் மாறுதிசை மின் னோட்டத் திறனை (ac electric power) மிகுதியாக்கும் அமைப்பே காந்த மிகைப்பி (magnetic amplifier) எனப்படும். காந்த மிகைப்பிகள் திறன் பெருக்கிகள் (power amplifiers) போன்றவை. ஏனெனில் மின்னோடிகளைச் (electric motor) செலுத்துவதிலும், பிற வெளியீட்டு அமைப்புகளிலும் இவை பயன்படுகின்றன. தற்போது காந்த மிகைப்பி பெருமளவில் திண்ம நிலை அமைப்பு களால் (solid state devices) பதிலீடு செய்யப்பட்டா லும், இத்தகைய அமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்பில் இன்றும் பயன்பட்டு வருகின்றது. . தெவிட்டு நிலை வினைக்கலனின் விளக்கப்படம் படம் (1) இல் காட்டப் பட்டுள்ளது. தெவிட்டு நிலை வினைக் கலன் சாதாரண மின்மாற்றி (transformer) போன்றதே. ஆனால் இதன் சுருணைகளில் (windings) மின்னோட்டம் பாயும்போது, இதன் உள்ளகப் பொருள்கள் (core materials) தெவிட்டு நிலையை அடைகின்றன. இத்தகைய உள்ளகம் மின்மாற்றி உள்ளகத்தில் பயன்படும் இரும்பு போன்றில்லாமல், பல சிறப்பான காந்தப் பொருள்களால் ஆனது. எனவேதான் தெவிட்டுநிலைப் பண்புகளின் குறி அளவைப் பெறமுடிகிறது. இத்தகைய உள்ளகப் பொருள்களில் பெரிதும் பயன்படுவ டெல்டா மேக்ஸ் delta max) என்பதாகும். இது சீரிய (sharp) தெவிட்டிய பண்பினையும், மிகு உட்புகு திறனையும் (permeability) காந்தமாக்கல் விசைப் பண்பிற் கெதிரான செவ்வகப் பாய அடர்த்தியையும் (rectan - gular flux density) கொண்டது. Bm . V.0- வினைக் கலன் Ve Z. பளு Z IL படம் 1. ஒற்றை உள்ளகத் தெவிட்டு நிலை வினைக்கலன் சுற்று படம் (!) இல் நேர்திசைக்கட்டுப்பாட்டுக் குறிப்பு மின்னழுத்தம் (dc control signal voltage) V. சுழி யாக இருக்கும்போது தெவிட்டுநிலை வினைக்கலன் தெவிட்டு நிலையை அடையாததோடு பளுச்சுற்றில் (load circuit) ஒருமின்தூண்டமாகவும் செயல்படுகிறது. இதனால் அமைப்பு செயல்பட அளிக்கப்படும் மாறு திசை மின்னழுத்தம் V, க்குச் சமமானதும், 180° கட்ட வேறுபாடு உடையதுமான பின் மின்னியக்கு விசை (back electromotive force ) தோற்றுவிக்கப்படு கிறது. இதையே, தெவிட்டாநிலை வினைக்கலனின் (unsaturated reactor) மின்னெதிர்ப்பு Z என்பது பளுவின் மின்னெதிர்ப்பு Zடஐ விட மிகுதியாக இருப்ப தோடு, அமைப்பிற்கு அளிக்கப்படும் மாறுதிசை மின் னோட்டம் பளுச்சுற்று (load circuit) வழியே பாய்வ தைத் தடுக்கிறது என்றும் கூறலாம். நேர்திசைக் குறிப் பலை மின்னழுத்தம் மிகும்போது, ஒவ்வொரு சுற்றின்