பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 காந்த மீட்சி நிகழ்வு

300 காந்த மீட்சி நிகழ்வு காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி (magneto hydro dynamic generator) எனப்படும் மின்னாக்கியே காந்த மின்னாக்கி (magnetic generator) எனப்படு கிறது. இதில் அலுமினியம் அல்லது செம்புக் கம்பி களுக்குப் பதிலாக நிலக்கரி ஆவியே கடத்தியாகும். உயர்ந்த அளவு சாம்பல் கொண்ட நிலக்கரி எளிதில் ஆவியாக மாற்றப்பட்டுப் பின்னர் எரி அறைகளில் செலுத்தப்படுகிறது. அங்கு உயர் வெப்பக் காற்றும் அளிக்கப்படுகிறது. எரிதலின் மூலம் உற்பத்தியாகும் உயர் வெப்பநிலைப் பொருள காந்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. வெப்பக் கடத்தலை அதி கரிக்க ஓர் உலோகத்தையும் சேர்த்து அனுப்புவது ஆய்வுக் கட்டத்தில் உள்ளது. அந்த ஆய்வு நடை முறைப்படுத்தப்படும் வரை நிலக்கரி தூய எரிபொரு ளாக மாற்றப்பட்டு இந்த அமைப்பில் பயன்படுத்தப் படும். இந்த வளிமம் 2800K வெப்பநிலைக்குச் சென்று விரிவடைகிறது. இது வலிமைமிக்க காந்தப் புலத்தில் பாய்வதால் மின்சாரம் நேரடியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உற்பத்தி செய்யப் பின்னர் படும் நேர்மின்சாரம் மாறுமின்சாரமாக மாற்றப்படுகிறது. கரி வளிமக் குழாய்களின் வழியாக வரும் உயர் வெப்ப வளிமக் காற்றைச் சூடா சூடாக்கவும். நீராவியை உருவாக்கி மின்சாரத்தை ணையாக உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. ஆகிய அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் வெப்பம் நீராவிக்குத் தரப்படும்போது மிகுதியும் வீணாகிறது. மேலும் சுழலிகளிலும் குறிப்பிடத்தக்க வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. இது காந்த மின்னாக்கிகளில் தவிர்க்கப்படுகிறது. சுழலி. மின்னாக்கி இரண்டும் ஒன்றான சிறிய அமைப்பாகக் காந்த மின்னாக்கி விளங்குகிறது. இதற்கு மிகுதியான இடம் தேவையில்லை. உயர் வெப்பத்தைத் தாங்கும்தன்மை யுள்ளது. செயல்படத் தொடங்கிச் சிறிது நேரத்தி லேயே முழு ஆற்றலையும் உற்பத்தி செய்யவல்லது. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. நைட்ரஜன் கொண்ட துணைப்பொருள்கள் பலவற்றை விளை விக்கிறது. சோவியத் ஒன்றியக் குடியரசில் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கிகளின் துணையோடு மின் சாரம் உற்பத்தி செய்தல் நன்கு முன்னேறியுள்ளது. காந்த மின்னாக்கிகளால் மின்சாரம் உற்பத்தி செய் ப்படும்போது அம்முறையில் 50% உம் வழக்கமாக நீராவி முறையில் 50 உ ம் ஓர் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்படும். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட மின் நிலையம் மொத் தத்தில் 50% திறம் பெற்றதாக அமையும். பெரும்பாலும் காந்த மின்னாக்கியின் நிறை வான செயல்பாட்டை ஒட்டியே மின்நிலையத்தின் செயல்பாடு சார்ந்திருக்கும். ஆகவே அதன் வடி வமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மின்காப்புச் சுவர்கள் உயர் அலுமினா மின் துரு அல்லது மக்னீசியா சிமெண்டாலானவை. வங்களாகத் துளையற்ற பல் படிகச் சிலிகான் (poly- crystalline silicon) நன்கு செயல்படுகிறது. வழக்க மான இரும்பு உள்ளகக் காந்தத்திற்குப் பதிலாக உயர் கடத்தும் காந்தம் பயன்படுகிறது. காண்க, காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி. எஸ். சுந்தரசீனிவாசன் நூலோதி. Edward M. Purcell, Electricity and Magnetism, Volume 2, McGraw-Hill Book Company. New York, 1965., Nelkon Parker, Advanced Level Physics, Fifth Edition, Arnold-Heinemann Publishers Ltd, New Delhi, 1982. காந்த மீட்சி நிகழ்வு படிக உருவுள்ளவை, படிக உருவில்லாதவை என்னும் திண்மப் பொருள்களிலுமே காந்தத் இருவகைத் தன்மைகளும், மீள்திறன் தன்மைகளும் காந்த மீட்சிப் பரிமாற்ற வினைகளின் மூலம் ணைக்கப்படு கின்றன. திண்மப் திண்மப் பொருள்களிலுள்ள அயனிகள் அல்லது அணுக்கருக்களில் சேர்ந்துள்ள தனித்தனி யான காந்தத் திருப்புத் திறன்களால் (magnetic mo- ments) உணரப்படுகிற பரிமாற்று வினைகள் மீள்திறன் திரிபுகளைச் (elastic strains) சார்ந்தவையாக இருப்ப தால் இந்தக் கூட்டிணைப்பு உருவாகிறது. இத் தசைய திரிபு சார்ந்த பரிமாற்று வினைகளின் மூலமாகத் திண்மப்பொருளின் மேல் செலுத்தப்படும் ஒரு தகைவு (stress) விசை அப்பொருளின் காந்த வியல் நடத்தைகளை மாற்றி அமைத்துவிட முடியும். இதற்கு மாறாகத் திண்மப்பொருளின் காந்தத் தன்மையில் ஏற்படுகிற மாற்றம் காரணமாக, பொருளின் மீள்திறன் பண்புகளில் மாற்றம் ஏற்படக் கூடும். இத்தகைய காந்த மீள்திறன் கூட்டிணைப் பின் விளைவுகளாக நிலையியல் (static), இயக்கவிய லான (dynamic) பல இயற்பியல் நிகழ்வுகள் தோன்று கின்றன. அவற்றை ஆய்வு செய்வதற்காகப் பல ஆய்வுமுறைத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அப் காந்தப் பரிமாண மாற்றம் (magnetostriction) என்னும் நிகழ்வு இத்தகைய காந்த மீள்திறன் கூட் டிணைப்பின் விளைவாக ஏற்படுகிற ஒரு வழக்கமான நிகழ்ச்சி ஆகும். ஒரு திண்மப் பொருளைச் சுற்றி ஒரு காந்தமாக்கும் புலத்தை அமைப்பதால், அந்தப் பொருளின் காந்தப் பண்புகள் மாற்றமடையும்போது அதன் பரிமாணத்திலும், வடிவத்திலும் ஏற்படும் மாற்றத்திற்குக் காந்தப் பரிமாண மாற்றம் என்று பெயர். காந்த மீள்திறன் கூட்டிணைப்பு. திண்மப் பொருள்களின் மீள்திறன் குணகங்களைப் (elastic