காந்த மீட்சி நிகழ்வு 301
வகை பொருளில் அதிர்வு சமமாக காந்த modulii) பெரிதும் தாக்கும். அதே சமயத்தில் திண்மப் பொருள்களுக்குள் மீட்சி அலைகள் (elastic waves) பரவுவதையும் உட்கவரப்படுவதையும்கூட அது மாற்றியமைக்கும். ஒரு திண்மப் காந்த அதிர்வு வகை (mode), மீள் திறன் ஆகியவற்றின் அதிர்வெண்கள் இருக்கும்போது ஒத்ததிர்வுள்ள (resonant) மீள் திறன் கூட்டிணைப்புத் தோன்றுகிறது. காந்த மீள்திறன் உரிமைப்படிகளின் கூட்டிணைப்பைப் பொறுத்தே ஒரு காந்தத் திண்மப் பொருளில் வெப்பச் சமநிலை (thermal equilibrium) நிறுவப்படுகிறது. காந்தத்தன்மையுள்ள பொருள்களுக்கு மட்டுமன்றிப் பாரா காந்தப் பொருள்களுக்கும் அணுக்கருப் பாரா காந்தத்தன்மைக்கும் காந்த மீள்திறன் கூட்டிணைப்பு ன்றியமையாததாக உள்ளது. என நுணுக்கமாகக் காணும்போது பொருளின் காந்த வியல் நடத்தைகளைத் தாக்கும் பல பரிமாற்று வினைகளின் திரிபு சார்ந்த பண்புகளின் காரணமாகக் காந்த மீள்திறன் கூட்டிணைப்பு ஏற்படுகிறது லாம். அடிக்கடி படிகப் பொருள்களில் காணப்படும் மின்புலம் திரிபைச் சார்ந்திருப்பது, காந்த மீள்திறன் பரிமாற்று வினைகளுக்கு மேம்பட்ட பங்களிப்பைத் தருவதாக அமைகிறது. இடைநிலை உலோக (transi- tion metal) அயனிகளுக்கு இந்தப் படிக மீன்புலம் எலெக்ட்ரான்களின் ஓடு பாதை இயக்கத்தைத் தாக்கும். எலெக்ட்ரான்களின் ஓடு பாதை இயக்கம். தற்சுழற்சிக்கும் ஓடுபாதை இயக்கத்திற்கு மிடையிலான இடை வினைகள் மூலமாகத் தற் சுழற்சிக் காந்தத் திருப்புத்திறன்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. அருமண் அயனிகளில் தற்சுழற்சி ஒடு பாதை இடை வினைகள் மிக வலிவானவை யாக இருப்பதால் தற்சுழற்சித் திருப்புத்திறனையும். ஓடுபாதைத் திருப்புத்திறனையும் தனித்தனியாகக் கவனிக்க மின்புலம் அயனியின் முடியாது. படிக மொத்தக் கோண உந்தத்துடன் கலந்திருக்கும் திருப்புத் திறன்களின் மேல் செயல்படுகிறது.இவ்வா றான ஒற்றை அயனி காந்த மீள்திறன் கூட்டிணைப்பு கள், அயக்காந்தப் பொருள்கள், ஃபெர்ரி காந்தப் பொருள்கள். எதிர் ஃபெர்ரி காந்தப் பொருள்கள் (antiferrimagnetic) ஆகியவற்றுக்கு மட்டுமல்லாமல் டயாகாந்தப் படிகங்களின் அணிக்கோவைகளில் (lattice) மாசாகக் கலந்துள்ள பாரா காந்த களுக்கும் பொருந்தும். அணுக் காந்த அயனிகளின் செறிவு மிகும்போது காந்த மீள்திறன் கூட்டிணைப்புக்கு இரட்டை அயனிகளின் பங்களிப்புச் சிறப்பானதாக இருக்கும். இரு காந்த அயனிகளைக் கூட்டிணைக்கிற இருமுனை டை வினைகள், பரிமாற்ற இடை வினைகள் ஆகியவற்றின் திரிபு சார்பு இப்பங்களிப்பில் அடங்கும். காந்தவியல் பொருள்களில் உள்ள ஒற்றை அயனி மற்றும் இரட்டை அயனி காந்த மீள் திறன் காந்த மீட்சி நிகழ்வு 301 இடை வினைகளை ஆய்வுகளின் மூலம் பிரித்துக் காண்பது சில சமயங்களில் மட்டுமே இயலும். இவற்றில் எது மேம்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க, தத்துவ அடிப்படையில் அவற்றின் ஒப்புமை எண் மதிப்புகளைக் கணக்கிட வேண்டியுள்ளது. குறைந்த காந்தச் செறிவுள்ள பொருள்களில் ஒற்றை அயனி காந்த மீள்திறன் கூட்டிணைப்பே சிறப்புப் பெற்றுள்ளது. . அணுக்கருத் தற்சுழற்சியுடன் தொடர்பு காண்ட காந்தத் திருப்புத் திறன்கள், பலவகையான டை வினைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாக அணிக்கோவைத் திரிபுடன் கூட்டிணைக்கப்பட் டுள்ளன. காந்தவியல்பு பொருள்களில் திரிபு முதலில் எலெக்ட்ரான்களின் திருப்புத் திறன்களுடன் கூட்டிணைப்புப் பெறக் கூடும். எலெக்ட்ரான்களின் திருப்புத்திறன் மிகு நுண் (hyperfine) பரிமாற்று வினை களின் மூலமாக அணுக்கரு இருமுனைத் திருப்புத் திறன்களுடன் கூட்டிணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மறைமுகமாக அணுக்கருத் தற்சுழற்சி - காந்தமீள்திறன் கூட்டிணைப்பு விளையும். உலோகப் பொருள்களில் கடத்தல் எலெக்ட்ரான்களுக்கும் திரிபுக்கும் இடையில் ஏற்படுகிற இயக்கவியல் இடை வினைகள், உள்ளிடக் காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கக்கூடும். அந்தக் காந்தப் புலம் அணுக்கருக் காந்த இருமுனை களுடன் கூட்டிணைப்புச் செய்யும். இறுதியாக மின் நான்முனைத் திருப்புத்திறனைப் (quadrapole moment) பெற்றுள்ளன. அணுக்கருத் தற்சுழற்சிகள் மீளதிறன் திரிபுடன் கூட்டிணைப்பைப் பெற்றிருக்கலாம். இது சுற்றியுள்ள அணிக்கோவையின் காரணமாக அணுக் சுருவில் உள்ள மின் புலச் சரிவில் (electric field gradient) திரிபு காரணமாக உண்டாக்கப்படும் மாற்றங் களின் மூலம் நிகழும். ஓர் மீள்திறன் திரிபு. காந்த அயணி அல்லது அணுக் கருவைச் சுற்றியுள்ள அமைப்பு, இடை, வினைகள் ஆகியவற்றின் சமச்சீர்மைப் பண்புகளை (symmetry properties) வைத்தே காந்த மீள்திறன் நிகழ்வுகளை விளக்க முடிகிறது. இந்தச் சமச்சீர்மைப் பண்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், காந்த மீள்திறன் அமைப் பைக் காட்டத் தேவையான கூட்டிணைப்பு மாறிலி களின் (coupling constants) எண்ணிக்கை சிறுமமாகக் குறைந்துவிடுகிறது. ஒரு காந்த மீள்திறனியல்புள்ள திண்மப் பொருளின் மொத்தப் டை வினை ஹாமில்டோனியன் சார்பின் (function) தெளிவான அமைப்பைக் கண்டுபிடித்து விட்டால், கூட்டிணைக்கப் பட்ட அமைப்பின் நிலையியல் மற்றும் இயக்கவியல் பண்புகளைப் பெறலாம். ஹாமில்டோனியன் சார்பிலிருந்து பெறப்படுகிற வெப்ப இயக்கவியல் கட்டற்ற ஆற்றலிலிருந்து (free energy) அமைப்பின் நிலையியல் தன்மைகள் கணக்கிடப்படுகின்றன. இத்தன்மைகளில், அணிக் கோவையில் ஏற்படும் காந்தப் பரிமாணமாற்ற உருக்