302 காந்த முறை உலோக ஆய்வு முறை
302 காந்த முறை உலோக ஆய்வு முறை குலைவுகளும், காந்தத் திசையொவ்வாப் பண்புகளில் (magnetic anisotropy) காந்த மீள்திறன் நிகழ்வுகளின் பங்களிப்புகளும், மீள்திறன் விறைப்புக் குணகங்களில் காந்த மீள்திறன் நிகழ்வுகளின் பங்களிப்பும் அடங் கும். பெரும்பாலான நிகழ்வுகளில் மீள்திறன் குண கங்களுக்குத் தரப்படும் பங்களிப்புச் சிறிதே. ஆனா லும் கூட்டிணைப்பு முழுதுமாக மீள்திறன் பண்பு களைத் தன் ஆளுகையில் வைத்திருப்பதும், அணிக் கோவையில் நிலையாமையையும், கட்டமைப்புக் கட்ட மாற்றங்களையும் (structural phase transi tions) உண்டாக்கி அணிக்கோவையின் சமச்சீர்மை யைக் குலைப்பதும் சில இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஹாமில்டோனியன் சார்பிலிருந்து பெறப்படும் கூட்டிணைப்பு இயக்கச் சமன்பாடுகளின் உதவியால், ஓர் அமைப்பின் இயக்கவியல் பண்புகள் கணக்கிடப் படுகின்றன. அமைப்பின் காந்த வகை மற்றும் மீள் திறன் வகை அதிர்வுகளின் இயக்கவியல் கூட்டிணைப் பின் காரணமாக, காந்தவியல் அமைப்பையும், காந்த மீள்திறன் பரிமாற்று வினைகளையும் ஆய்வு செய்யும் கருவியாக மீள்திறன் அலைகளைப் பயன்படுத்த முடிகிறது. பொருள்களில் மீள்திறன் அலைகள் உட்கவரப்படுவதையும், பரவுவதையும் நுட்பமாக அளக்கக்கூடிய நுண்ணுணர்வு முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. அணிக்கோவை மற்றும் காந்தவியல் உரிமைப்படிகளுக்கு இடையிலுள்ள கூட்டிணைப்பைப் பற்றியும் இந்தக் கூட்டிணைப்பு எவ்வாறு திண்மப் பொருளில் வெப்பச் சமநிலையை நிறுவ உதவுகிறது என்பதைப் பற்றியும் மதிப்பு மிக்க தகவல்களை இந்த அளவீடுகள் அளிக்கின்றன. உயர் அதிர்வெண் மின்காந்தக் கதிர்வீச்சுகளை, மீள்திறன் அலைவுகளாக மாற்றுகிற காந்தப் பரி மாண மாற்ற ஆற்றல் மாற்றிகள் (transducers), ஒரு சார்பு (biasing) காந்தப் புலத்தை மாற்றுவதன் மூலம் நீட்டிப்பு நேரத்தை (delay time) மாற்றியமைக்கக் கூடிய காந்த மீள்திறன் நீட்டிப்புச் சுற்றுகள் (delay lines) ஆகியவை யவை காந்த மீள்திறன் பரிமாற்று வினை களைப் பயன்படுத்தும் தொழில்துறைப் பயன் களாகும். கே.என். ராமச்சந்திரன் . நூலோதி. Arthur F. Kip, Fundamentals of Electricity and Magnetism, Mc-Graw Hill Koga kusha Ltd, Tokyo, 1969. காந்த முறை உலோக ஆய்வு முறை உலோகங்களை ருக்குலையாமல் ஆய்வு செய்தல் அதன் காந்த பண்புகளைப் பொறுத்து அமைகிறது. காந்த முறை ஆய்வில் (magnetic inspection) இரு முறைகள் உள்ளன. இம்முறையைப் காந்தத் துகள்கள் ஆய்வு முறை. பயன்படுத்திச் சிறு பிளவு மற்றும் வெடிப்புகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். இம்முறையில் இரும்புத் துகள்கள், ஆய்வு செய்ய வேண்டிய பகுதியின் மீது தூவப்படுகின்றன. வெடிப்புகளில் இந்தத் துகள்கள் படிவதால் ஒரு வரப்புப் போன்ற அமைப்பு உண்டா கிறது. துகள்கள் எளிதாக ஒட்டிக் கொள்ள இரும்பு ஆக்சைடு துகள்கள் நீர் அல்லது எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும். மேலும் ஒளிரும் துகள் சுளைச் சேர்ப்பதன் மூலம் மிகச் சிறிய வெடிப்பு களையும் கண்டறியலாம். எஃகு உலோகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மகிழுந்து மற்றும் வானூர்தி உறுப்புகள் தேவையான கடினத்தன்மை பெற வெப்பப்பதனிடல் (heat treat- mient) செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது வெடிப்புகள் ஏற்படக்கூடும். இவ்வெடிப்புகளைக் கண்டறியக் காந்தத் துகள் ஆய்வு முறை பயன் படுத்தப்படுகிறது. சுழிப்பு மின்னோட்ட (eddy current) ஆய்வு முறை. ம்முறையைப் பயன்படுத்தி உலோகக்கலவை, மின் அளவு, உறுதித் தன்மை, லெப்பப்பதப்படுத்தல் முறை. உள் இறுக்கு விசை, முலாம் பூச்சு, தடிமன் போன்றவற்றைக் கண்டறியலாம். மின் காந்தத் தூண்டுதல் முறை. ஓர் உலோகத் தின் உள் வடிவ அமைப்பு, அதிர்வெண் ஏற்கும் ஆற்றலைப் பாதிக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு ஓர் உலோகத்தின் துகள் அளவு, கலவை போன்றவற்றை எளிதில் கண்டறியலாம். மின் காந்தத் தூண்டுதல் முறையில் ஆய்வு செய்ய வேண்டிய பொருள் மின்னணு முறையில் அதிர்வூட்டப்படுகிற சுருளுக்குள் வைக்கப்படுகிறது. காந்தத் தேக்கத் தாலும், சுழிப்பு மின்னோட்டம் மூலமாகவும் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருளில் ஆற்றல் இழப்பு நிகழ்த்தப்படுகிறது. இந்த அதிர்வெண் வெளிப்பாட் டைக் (output) குறைக்கிறது. அதிர்வெண் வெளிப் பாட்டு அளவிலிருந்து உலோகத் தன்மைகளைக் கண்டறியலாம். காந்தத் தேக்கத்தால் ஆற்றல் ஏற்பு ஓர் உலோ கத்தின் மூலக்கூறு வடிவமைப்பு மற்றும் உள் இறுக்கு விசை போன்றவற்றைப் பொறுத்து அமைகிறது. சுழிப்பு மின்னோட்ட இழப்பு உலோகத்தின் மின் கடத்தும் தன்மையைப் பொறுத்து அமைகிறது. இவற்றில் மாற்றம் இருந்தால் அலை இயற்றியின் (oscillator; வெளிப்பாடு பாதிக்கப்படுகிறது. குறைந்த அதிர்வெண் (2-10 KHZ) உள்ள அலைகள் உலோகத்தில் மிகு ஆழத்திற்கு ஊடுருவிச் செல் கின்றன. இதைக் கொண்டு உள் அமைப்பு, கலவை, வெளிப்புற அமைப்புப் போன்றவற்றை அறியலாம்.