பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 காந்த வட்டாரங்களும்‌ குமிழ்களும்‌

308 காந்த வட்டாரங்களும் குமிழ்களும் செலுத்தப்பட்டு இடப்பக்கமும் வலப்பக்கமும் வட்ட முனைவாக்கம் செய்யப்பட்ட வட்ட கதிர்களாகப் ஒரு பண் காந்தப் பேற்றம் செய்யப்படுகிறது. இவை புலத்தில் வைக்கப்பட்டுள்ள மாதிரி ஊடசுத்தின் வழி யாகச் சென்று ஒரு துலக்கியை அடைகின்றன. மாதிரி ஊடகம் காந்த இரு நிறமைத் தன்மை பதிவாகும் கொண்டதாக இருந்தால் துலக்கியில் செறிவில் ஒளிப் பண்பேற்றம் செய்யப்படும் அதிர் வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணுடன் அதிர்வு செய்கிற ஓர் ஆக்கக் கூறு காணப்படும். (phase) உணரும் துலக்கி உத்திகளைப் பயன்படுத்தி ஏற்ற நுண்ணுணர்வுடன் அந்த ஆக்கக்கூறு கண்டு பிடிக்கப்படுகிறது. இம்முறையில் 10-5 அளவுக்குச் சிறிய AA மதிப்புகளை அளவிட முடியும். கட்டம் ஒரு காந்தப் பருப்பொருளின்மேல் உண்டாக் கும் ஒரு விளைவின் காரணமாகக் காந்த இரு நிறமை தோன்றுகிறது. அதற்கும் பிற காந்த நிகழ்வுகளுக்கும் குறிப்பாக, சீமென் விளைவு, காந்த ஏற்புத் திறன் ஆகியவற்றுக்கும் இடையில் நெருக்கமான தொடர் புள்ளது. காந்தப் புலத்தைச் செலுத்தும்போது நிற மாலை வரிகள்பிளவுபடுவது சீமென் விளைவு (Zeeman effect) எனப்படுகிறது. சீமென் விளைவிலிருந்து காந்த வட்ட நிறமை தோன்றுவதைப் பின்வரும் எடுத்துக்காட்டால் விளக்கலாம். IS என்னும் சிறு ஆற்றல் மட்டத்திலுள்ள ஓர் அணுவையும், எலெக்ட்ரான் மாற்றத்தால் ஏற் பட்ட 'P என்னும் கிளர்வுற்ற மட்டத்தையும் எடுத் துக் கொள்ளலாம். காந்தப் புலத்தைச் செலுத்தினால் கிளர்வுற்ற மட்டம் மூன்று ஆக்கக் கூறுகளாகப் பிரியும். வட்ட முனைவாக்கம் அடைந்த ஒளிக்கு இவற்றில் இரண்டு ஆக்கக் கூறுகளுக்கு மட்டுமே எலெக்ட்ரான் மாற்றம் அனுமதிக்கப்படுகிறது. இடப் பக்கமான வட்ட முனைவாக்கத்திற்கு ஒன்றும் வலப் பக்கமான வட்ட முனைவாக்கத்திற்கு ஒன்றுமாக இரண்டு மாற்றங்கள் மட்டுமே நடைபெற முடியும். சீமென் விளைவின் காரணமாக இம்மாற்றங்கள் வெவ் வேறு அதிர்வெண்களில் நடைபெறுகின்றன. எனவே ட, வல வட்ட முனைவாக்கம் கொண்ட ஒளிகள் இருக்கும். உட்கவரப்படுவது வெவ்வேறு அளவில் துவே காந்த வட்ட இரு நிறமை ஆகும். காந்த வட்ட இரு நிறமை எலெக்ட்ரான் ஆற்றல் மட்டங்கள், மூலக்கூறுகளின் ஆற்றல் மட்ட மாற்றங் கள், படிகங்களிலுள்ள உலோக அயனிகள், நிற மையங்கள் போன்ற மாசுகள், காந்தத் திண்மங்கள், புரதம், நூக்ளிக் அமிலம் போன்ற உயிரியல் அமைப்பு கள் ஆகியவற்றை ஆராயப் பயன்படுகிறது. -கே.என். ராமச்சந்திரன் நூலோதி B.D. Cullity, Introduction to Magnetic Materials, Addison-Wesley Company, California, 1972. காந்த வட்டாரங்களும் குமிழ்களும் நூற்றுக்கணக்கான உலோகக் கலவைகளும்,உலோக ஆக்சைடுகளும் ஃபெரோ காந்தப் பண்புடையன காணப்பட்டாலும், தனிமங்களில் இரும்பு, வாகக் www (அ) காந்த வட்டாரங்களும் பொருளின் காந்தமற்ற நிலையும் (ஆ) காந்தமாக்கமும் காந்த வட்டார வளர்ச்சியும் (இ) காந்தமாக்கமும் காந்த வட்டாரச் சுழற்சியும்