பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த வட்டாரங்களும்‌ குமிழ்களும்‌ 309

நிக்கல், கோபால்ட், கடோலினியம், டிஸ்புரோசியம் என்பவையே அப்பண்பைக் கொண்டுள்ளன. டயா. பாரா காந்தங்களைப் போலல்லாமல் ஃபெரோ காந் தங்கள் வலிமையான காந்த ஏற்புத்திறனுடன் உள்ளன. ஃபெரோ கியூரி வெப்பநிலை எனப்படும் ஒரு சிறப்பு வெப்பநிலைக்கு மேல் ஃபெரோ காந்தம், பாரா காந்தமாக மாறிவிடுகிறது. ஃபெரோ காந்தப் பொருள்களின் காந்தப் பண்புகளை விளக்க, 1907 இல் வெயிஸ் என்பார் காந்த வட்டாரம் (magnetic domain) என்னும் கருத்தை வெளியிட்டார். இதன் படி ஃபெரோ காந்தப் பொருள்களில் உள்ள அணு அல்லது துகள்களால் உண்டாக்கப்படும் வலிமையான மூலக்கூற்றின் புலத்தால் (molecular field) அவை முனைவாக்கம் செய்யப்படுகின்றன என்றும், புறத் தூண்டலற்ற நிலையில் பொருள் முழுதும் இந்த முனைவாக்கம் சீராக இருப்பதில்லை என்றும்,சிறு சிறு வட்டாரங்களாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் முனை வாக்கம் முழுமையாக இருக்கும் என்றும் கூறலாம். இவ்வாறு ஃபெரோ காந்தப் பொருள்களில் அணு அல்லது துகள்கள் முனைவாக்கம் செய்யப்படு வது தன்னியல் காந்தமாக்கம் (spontaneous magneti- zation) எனப்படுகிறது. பொருளின் காந்தமற்ற நிலையை, வெவ்வேறு திசைகளில் முழுமையாக முனைவாக்கம் பெற்ற காந்த வட்டாரங்களின் கூடுதல் காந்தமாக்கம் (total magnetization). பொருளின் காந்தமற்ற நிலையில் பூஜ்யமாகும் என்பதால் விளக்க முடியும் (படம் 1 அ). ஒரு புறக் காந்தப்புலத்தால் ஃபெரோ காந்தப் பொருள் காந்தமாக்கப்படும் போது, அது ஒரு காந்த வட்டாரத்தின் அழிவால் மற் றொரு காந்த வட்டாரம் வளர்ச்சி பெறுவதன் மூல மாகவோ (படம் 1 ஆ) காந்த வட்டாரத்தின் சுழற்சி மூலமாகவோ (படம் 1 இ) ஏற்பட முடியும். பொது வாக முன்னது வலிமை குறைந்த புலத்திலும், பின்னது வலிமை மிகுந்த புலத்திலும் நிகழ்கின்றன என்று கூறலாம். தயக்கக் கண்ணி (hysteresis loop) வரைபடத்தி லிருந்து (படம் 2) காந்த வட்டாரத்தின் கட்டமைப்பு ஒரு ஃபெரோ காந்தப் பொருளின் பண்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறியலாம். தாழ்ந்த புலச்செறிவில், புலத் திசையிலேயே முனைவாக்கம் பெற்றுள்ள காந்த வட்டாரம், அவ் வாறில்லாத காந்த வட்டாரங்களை அழித்து வளர்ச்சி பெறுகிறது. வாய்ப்பான காந்த வட்டா ரத்தின் எல்லை மட்டும் வளர்ச்சி பெறுவதால் சிறி தளவே காந்தமாக்கச்செறிவு அதிகரிக்கிறது. இது தயக்கக் கண்ணியின் தொடக்க நிலையில் குறிப் பிடப்படுகிறது. எல்லைப் பெயர்ச்சி குறைவாக இருப் பதால், இயல்நிலை வட்டார அமைப்பை மீளப் பெறக்கூடியதாக உள்ளது. சற்றுக் கூடுதலான காந் தப் புலச் செறிவில், பல்வேறு வட்டாரங்களும் காந்த . காந்த வட்டாரங்களும் குமிழ்களும் 309 மாக்கலுக்கு உட்படுகின்றன. அதனால் காந்தமாக்கச் செறிவு, புலச் செறிவு அதிகரிக்க விரைந்து அதிகரிக் கிறது. உயர் புலச் செறிவில், எல்லைப் பெயர்ச்சியும் கூடுதலாக இருப்பதால், இயல்நிலை அமைப்பை மீளப் பெற முடியாது போகிறது. காந்தப் புலத்தால் காந்த வட்டாரங்கள் அனைத்தும் புலத் திசையில் முனைவாக்கம் செய்யப்படும்போது. எளிதாக அணு கத்தக்க நிலையோடு அவை நின்று விடுகின்றன. மேலும் கூடுதலான புறக் காந்தப் புலம்,, காந்த வட்டாரங்களை முறுக்கி, அவற்றை முழுமையாகப் புலத்திசையிலேயே முனைவாக்கம் செய்கிறது. தெவிட்டிய நிலை காந்தமாக்கச் செறிவு காந்த நீக்கக் கோடு காந்தமாக்கக்| கோடு காந்தப்புலம் படம் 2. (1) காந்த வட்டார வளர்ச்சியால் காந்தமாக்கம் (மீள்வுறு எல்லைப் பெயர்ச்சி) (2) காந்த வட்டார வளர்ச்சியால் காந்தமாக்கம் (மீள்வுறா எல்லைப் பெயர்ச்சி (3) காந்த வட்டாரச் சுழற்சியால் காந்தமாக்கம் 3 ஒரு பொருள் தூய்மையானதாகவும், ஒரு படித் தானதாகவும் (homogeneous) இருக்கும்போது, எல்லைப் பெயர்ச்சி நிகழும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. எனவே இப்பொருள்கள் உயரளவு காந்த உட்புகுதிறன் (permeability) கொண்டனவாக விளங் கும். இப்பொருள்களே மின் மாற்றிகளின் (transfor- mer) உள்ளகங்களுக்கு (core) ஏற்ற பொருள்களா கும். பலபடித்தானதாகவும் (heterogeneous) நுண் துகள்களால் ஆனதாகவும் பொருள் இருக்கும்போது, எல்லைப் பெயர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.