பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 காந்த வட்டாரங்களும்‌ குமிழ்களும்‌

310 காந்த வட்டாரங்களும் குமிழ்களும் னால் பொருள் காந்தப் பண்பைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை மிகுதியாகப் பெறுகிறது. இப்பொருள்களே நிலைக்காந்தங்களுக்குப் பயனுள் ளவை. அதனால்தான் நிலைக்காந்தங்களுக்குக் கலப்பு உலோகங்களைப் பயன்படுத்துகின்றனர். காந்த வட்டாரக் கட்டமைப்புகளுக்கான ஆய்வுச் சான்றுகள். காந்தத்தூள் பாங்கம் (magnetic powder pattern) என்னும் ஆய்வு மூலம் 1931 இல் பீட்டர் என்பார் காந்த வட்டாரங்கள் இருப்பதை நிறுவி னார். காந்த வட்டார அமைப்பு, ஃபெரோ காந்தப் படிகத்தின் புறப் பரப்புகளில் உள்ள புலச் செறிவில் சீரிசை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிறிய காந்த இருமுனைகளைக் (magnetic dipole) கூழ்மக் (colloi- dal) கரைசலிலிருந்து படிகத்தின் புறப் பரப்பு களில் படிய வைக்கின்றனர். காந்த வட்டாரத் தின் வட்டாரப் புலத்தால் அவை தாக்கமுறுவ தால் படியும்போது ஒரு பாங்கத்தை ஏற்படுத்து கின் ன்றன. படிகப் பரப்பு மற்றும் படியும் துகள் களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந் தால், படியும் துகள்கள் விரவி இருக்கும் பாங் கத்தை நுட்பமான நுண்ணோக்கி மூலம் எளிதாகப் படம்பிடித்துக் கண்டுணர முடியும். குறைந்த பாகு நிலைக் குணகமுடைய ஆல்ஹகால் போன்ற நீர்மங் களில் கூழ்மமாக உள்ள இரும்பு அல்லது இரும்பு ஆக்சைடு கரைசல்களைப் பயன்படுத்தும்போது. ஆல்ஹகால் உடன் உலர்ந்து விடுவதால், படிகத்தின் புறப்பரப்பில் கூழ்மத் துகள்கள் விரைந்து படிந்து விடுகின்றன. அவ்வாறு படியும்போது காந்த வட்டா ரங்களின் வலிமையான காந்தப் புலத்தால் தாக்கமுறு வதால் அவை காந்த வட்டாரச் சுவர்களில் செறி வாகப் படிந்துவிடுகின்றன். இதனால் காந்த வட்டா ரத்தின் வடிவமைப்பை அறிய இயலும். ஃபௌலர் மற்றும் ஃபிரையர் என்போர் காந்த வட்டாரங்களை அறியப் புதிய வழிமுறை ஒன்றைக் கண்டறிந்தனர். இம்முறை தள முனைவாக்கம் செய்யப்பட்ட ஒளியைக் காந்த வட்டாரங்களால் எதி ரொளிக்கச் செய்து பகுப்பான் (analyser) மூலம் பதிவு செய்வதாகும். கெர் காந்த ஒளியியல் விளைவு காரண மாகத் தளவாக்க ஒளியின் தளம், எதிரொளிப்பின் போது, எதிரொளிப்புத் தளத்தின் காந்தமாக்கத் தரத்திற்கு ஏற்றவாறு சுழற்சிக்கு உள்ளாகிறது. இச்சுழற்சியைப் பகுப்பான் மூலம் அளவிட்டறிந்து காந்த வட்டாரங்களை இனங்காண முடியும். படிகத்தின் புறப்பரப்பில் ஒரு கண்ணாடி இழை யைக் கொண்டு ஒரு மெல்லிய கீறலை ஏற்படுத்தி, காந்த வட்டாரத்தில் காந்தமாக்கத் திசையை அறிய முடியும். கீறல், காந்தமாக்கத்திசைக்கு இணையாக இருக்கும்போது, முனைகளில் தனித்த காந்த முறை எதுவுமில்லா த அது ஒரு குறுகலான உட்புழை யாகி (cavity) விடுகிறது. அதனால் காந்தத்துகளின் பாங்கம் மாறுவதில்லை. ஆனால் கீறல் செங்குத்தாக இருக்கும்போது அதன் பக்க விளிம்போரங்கள், தூண்டல் காரணமாகக் காந்த முனைகளைப் பெறு கின்றன. இது பாங்கத்தின் அமைப்பை ஓரளவு சீர்குலைத்து விடுகிறது. காந்த வட்டாரங்களின் தோற்றம். சமநிலையில் இருக்கும் எப்போதும் சிறுமமாக இருக்கும் என்னும் வெப்ப இயக்கவியல் நெறியிலிருந்து காந்த வட்டாரங்களின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு ஃபெரோ காந்தப் பொருள், பரிமாற்ற ஆற்றல், காந்தப்புல ஆற்றல், திசையொவ்வாப் பண்பாற்றல் (anisotropy energy) என்று மூன்று வகையான ஆற்றல்களைப் பெற முடியும். ஓர் அமைப்பின் மொத்த ஆற்றல், பாலியின் தவிர்க்கை விதிக்கு (Pauli's exclusion principle) உட்பட்டுப் பங்கீட்டைப் பெற்றிருக்கும் அணு எலெக்ட்ரான்கள், அவற்றின் சார்புச் சுழற்சி காரணமாக ஓர் டையீட்டுச் செயலை ஏற்படுத்து கின்றன. தன் விளைவாகப் பரிமாற்று ஆற்றல் விளைகிறது. இரு அணுக்களின் தற்சுழற்சி இணையாக இருக்கும்போது, இவ்வாற்றலின்மதிப்புக் குறைவாக உள்ளது. இது பொருள்களின் ஓரினக் காந்த வட்டாரம் (single domain) அமைவதற்கு மிகுதியான வாய்ப்பைப் பெற்றுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. பொருள் காந்தமாக்கப்படும்போது அதன் இரு முனைகளில் தனித்த காந்த முனைகள் ஏற்படு கின்றன. இது புறவெளியில் ஒரு காந்தப் புலத்தை ஏற்படுத்தவல்லது. இப்புலத்தின் ஆற்றலே பொரு ளின் காந்தப்புல ஆற்றலாகும். இது பொருளின் ஆற்றலில் பெரும்பங்கு பெறும். பொருளின் பருமன் படம் 3 முதன்மை வட்டாரம் காந்த மூடு வட்டாரம்