காந்த வட்டாரங்களும் குமிழ்களும் 311
எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு குறைவாக இவ்வாற்றலும் இருக்கும். காந்தப் புல ஆற்றலைத் தாழ்த்திக் கொள்ள, ஒரு காந்த வட்டாரம் சிறப்பு வடிவமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் பரந்த ஓரின வட்டாரம் சிறு சிறு பல்லின வட்டாரங்களாக வகுக்கப்படுகின்றன. இவற்றை முதன்மை வட்டாரம் (prominant domain) என்பர். மேலும் படிகத்தின் இரு முனைகளிலும் முப்பட்டக வடிவக் காந்த வட்டாரங்கள் ஏற்படுகின்றன. இ சிறப்புக் காந்த வட்டாரத்தைக் காந்த வட்டாரம் (closure domain) என்பர் (படம் 3). காந்த மூடு வட்டாரத்தை ஏற்படுத்தத் தேவையான ஆற்றல், படிசுத்தின் திசையொவ்வாப் பண்பைப் பொறுத்தது. மூடு தயக்கக் கண்ணியின் அமைப்பு, எடுத்துக் கொள்ளப்படும் படிகத்தின் அச்சைப் பொறுத்து அமைகிறது. இரும்பு ஓரினப் படிகத்தில் (single crysta] of iron) காந்தத் தெவிட்டுதலை (saturation) ஏற்படுத்த (111) திசையில் (100) திசையை விடக் கூடுதலான புறக் காந்தப் புலம் தேவைப் படுகிறது. இதனால் இரும்பின் (100) திசையை எளிதில் அணுகத்தக்க மென்திசை (easy direction (111) திசையை எளிதில் அணுகவொண்ணா வன்திசை {hard direction) என்றும் கூறுவர். நிக்கலில் (111) திசை, மென் திசையாகவும்,(100) திசை, வன் திசையாகவும் உள்ளன. கோபால்ட்டில் அறுமுகப் படிக அச்சு (hexagonal crystal axis) மென் திசையாக உள்ளது. இரும்பும் நிக்கலும் கன சதுர வடிவப் படிகங்கள் என்றாலும் இரும்பில் படிக விளிம்புகள் மென் திசைகளாகவும், நிக்கலில் மூலை விட்டங்கள் மென் திசைகளாகவும் விளங்குகின்றன. இரும்பிலும் நிக்கலிலும், மென் திசைகளில் காந்தமாக்கப்பட்ட முதன்மைக் காந்த வட்டாரங்களும், காந்த மூடு வட்டாரங்களும் இருக்கும். கோபால்ட்டில் காந்த மாக்கப்பட்ட முத ன் மை வட்டாரங்கள் மென் திசையிலும், காந்த மூடு வட்டாரங்கள் வன் சை யிலும் அமைந்திருக்கும். மென் மற்றும் வன் திசைகளில் காந்தமாக்கத்தை ஏற்படுத்தும்போது, வன் திசையில் காந்தமாக்கத்தை ஏற்படுத்தத் தேவைப்படும் கூடுதல் ஆற்றல். திசையொவ்வாப் பண்பாற்றல் எனப்படும். ஓரினப் படிகம் பல காந்த வட்டாரங்களாக வகுக்கப்படுவதால், அதன் மொத்த ஆற்றல் தாழ்வுறு கிறது என்றாலும் வரம்பெதுவுமின்றிக் காந்த வட்டாரங்களாகத் தொடர்ந்து வகுக்கப்படுவது யலாததாகும். ஏனெனில் ஒருகாந்த வட்டாரத்தைப் புதிதாக ஏற்படுத்தும்போது, ஓர் எல்லைச் சுவரை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த எல்லைச் சுவரைப் ப்ளோச் சுவர் என்பர். இருவேறு காந்த வட்டாரங்களைப் பிரிக்கும் சுவரின் தடிப்பு ஏறக் குறைய 1000 A அளவு இருக்கும் என மதிப்பிட்டுள்ள னர். எல்லைச் சுவரை ஏற்படுத்தத் தேவைப்படும் காந்த வட்டாரங்களும் குமிழ்களும் 31| ஆற்றல், வகுக்கப்படுவதால் ஏற்படும் ஆற்றல் குறைவைவிட மிகுதியாக இருக்கும் வரையே, புதிய காந்த வட்டாரங்களை ஏற்படுத்த முடியும். ஒரு காந்தப் பொருளில் இருக்கக்கூடிய காந்த வட்டாரங் களின் எண்ணிக்கையும் வடிவமைப்பும் பெரிதும் படிசு அமைப்பைப் பொறுத்தன. ஒரு காந்த வட்டா ரத்தின் பருமன் 10-5 முதல் 10 -9 m என்னும் நெடுக்கையில் காணப்படுகிறது. காந்தக் குமிழ், சிறிய உருளை வடிவக் காந்த வட்டாரத்தை ஓரச்சுக் காந்தப் பொருளால் ஆன (uniaxial magnetic material) ஒரு சிறிய படிசுத் தட்டில் ஏற்படுத்தி நிலைப்படுத்த முடியும் (படம் 4). இதைக் காந்தக் குமிழ் (magnetic bubble) என்று புலத்திசை 11 காந்தக் குமிழ் மென்திசை படம் 4 J வன் திசை கூறுவர். புள்ளி விவரங்களைத் தொகுத்து நினைவு கூரும் திறன் இவ்வமைப்பிற்கு மிகுதி என்பதால். கணிப்பொறிகளில் இது பயனுள்ளதாக உள்ளது. பொதுவாகக் குமிழின் ஆரம் ஏறக்குறைய 10 m ஆக இருக்கும். படிகத் தட்டின் பயன் தரு தடிப்பும் ஏறக் குறைய இவ்வளவினதாக இருக்கும். குமிழ்நிலைப் படுத்தப்படுவது. படிகத் தட்டின் தடிப்பு, குமிழின் ஆரம், குமிழின் காந்தப்புல ஆற்றல். திசை யொவ்வாப் பண்பாற்றல் இவற்றைப் பொறுத்தது. YFeO, போன்ற அருமண் ஆர்த்தோ இரும்புக் கலப்பு உலோகங்கள் காந்தக் குமிழ்களுக்குத் தகுந்த பொருள் களாக விளங்குகின்றன. இதில் குமிழின் ஆரம்