316 காப்பணை
3/6 காப்பணை (phosphoresence) அல்லது மும்மை நிலைக்குக் (triplet state) கிளர்வுறச் செய்கின்றன். இவ்வாறு கிளர்வுறச் செய்யும்போது தனி எலெக்ட்ரான்கள் தோன்றி, பாரா காந்தத்தன்மையைப் பெறச் செய்கின்றன. ஃபெர்ரோ மற்றும் ஃபெர்ரோ காந்த எதிர்த் தன்மை. குறைவான செறிவுடைய காந்தப்புலத்திலேயே மிகுதி யான காந்த ஏற்புத் திறனைப் பெற்றிருப்பதிலிருந்தும் நியம காந்தத் தன்மை (standard magnetisation) பயன்படுத்தப்படும் தொடர்பைப் பெற்றிருப்பதி லிருந்தும் ஒரு பொருள் ஃபெர்ரோ காந்தத்தன்மை யைப் பெற்றிருப்பதை அறியலாம். கியூரி புள்ளி என்னும் புள்ளிக்கு மேல் வெப்பநிலையை உயர்த்தும் போது அனைத்து ஃபெர்ரோ காந்தப் பொருள்களும், காந்தத் தன்மையை இழந்து நிலைத்த காந்த ஈர்ப்புத் தன்மையைப் பெற்றுவிடும். ஃபெர்ரோ காந்த எதிர்த்தன்மை உள்ள பொருள் களும் இவ்வகையான மாற்றத்திற்கு உட்படும். இவ் வெப்பநிலை ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும். இவ்வெப்பநிலை நீல் புள்ளி எனப்படும். ஃபெர்ரோ காந்த எதிர்த் தன்மைப்பொருள்களின் காந்த ஏற்புத் திறன் பயன்படுத்தப்படும் காந்தப் புலத்தைச் சார்ந்து நிற்கும்; ஆனால் இது நீல் புள்ளிக்கு மேல் பெறப் படும் மதிப்பைவிடக் குறைவானது. கோபால்ட், நிக்கல், கடோலினியம், யுரேனியம் ஹைட்ரைடு, நிக்கல் டை சல்ஃபைடு போன்றவை சில் ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் ஆகும். மாங்கனீஸ், டைட்டேனியம் ட்ரைகுளோரைடு. யுரேனியம் ட்ரைகுளோரைடு, நெப்டுனியம் ஆக்சைடு போன்றவை ஃபெர்ரோ காந்த எதிர்த் தன்மைப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டாகும். பி.ஈ.எம்.லியாகத் அலிகான் 4 டை நூலோதி. James E. Huheey, Inorganic Chemistry, Third Edition, Harper and Row. Philadelphia, 1983. காப்பணை இது தற்காலிகமாகக் கட்டப்பட்ட சுவர் போன்ற அமைப்பாகும். காப்பணை (cofferdam) அடிமானங் கள் கட்டுவதற்கும், பாலத்தின் குத்துத் தூண்கள் அணைகள், செயற்கைத் துறைமுகம் ஆகிய கட்டு மானங்களுக்கும் பயன்படும். மேலும் இது கட்டு மானங்கள் கட்டும்போது அவ்விடத்திற்கு நீர் செல்லாதவாறு தடுத்து நிறுத்துகிறது. அதன் வேலை. கட்டுமானம், ஆழம், மணற்பரப்பின் தன்மை, நீர் மட்டத்தின் அளவு, பொருள்கள் கிடைக்கும் அளவு. நீரிலோ நிலத்திலோ அதன் அமைவிடம் ஆகிய வற்றைப் பொறுத்துக் காப்பணை வகைப்படுத்தப் படுகிறது. நீர்புகா இடம் காப்பணைக் கட்டுமானத் தாலோ, காப்பணை மற்றும் இயற்கையில் காணப் படும் மண்மேடுகளாலோசூழப்படலாம். ஓடை மற்றும் ஆறுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் அரிப்பு, கசிவு ஆகியவற்றிற்குச் செய்யப்படும் நீர்மவியல் பகுப் பாய்வு, காப்பணை வடிவமைப்பில் ஒரு குறிப்பிடத் தக்க ஆய்வாகும். நீர் உட்புகமுடியாத மண் படிவுகளில் கட்டப்பட்டால் அவ்விடத்திலுள்ள பணை முழுதுமாக அடைக்கப்படும். மண் காப் நீர் ஆனால் உட்புகும் கட்டப்பட்டால் காப்பணை படிவுகளில் அவ்விடத்திலுள்ள நீரை முடியாது. தொடர்ந்தோ, நேர விட்டோ நீர் எக்கிகளால் வெளியேற்றப்படுகிறது. முழுதுமாகத் தடுக்க இடைவெளி வகை, நீள் சதுர வடிவமைப்பிலுள்ள அ.ஆ.இ ஈ காப்பணைகள் சிறு பகுதிகளை மட்டும் சூழ்கின்றன. எஃகு, மரம், கற்காரை உத்திரங்கள், முட்டுகள் (struts) போன்ற குறுக்குச் சட்டங்கள் அமைந்த cross bracing) தனியாக அமையும் பாலங்களுக்கு இக்காப்பணைகள் பொருந்தும். ஏனைய காப்பணை கள் அணைகள், ஆறுகள், பெரிய கட்டடங்கள் போன்ற பெருமளவிலான டங்களுக்குப் பயன் படுகின்றன. எஃகு மரம், கற்காரை போன்ற பொருள் களால் தகடுகள் செய்யப்பட்டுச் செங்குத்தாகவோ கிடைநிலையாகவோ வைக்கப்பட்டு, தகட்டு வடிவக் காப்பணைகள் (sheeted cofferdam ) அமைக்கப்படு கின்றன. சல்லி மற்றும் கற்பாளங்களில் (boulders) தேவையான ஆழத்திற்குத் தகடுகளைச் (sheeting) செலுத்த முடியாவிடின் H - வடிவமுடைய எஃகு குத்துத்தூண்கள் செங்குத்தாக நிலத்தில் செலுத்தப் படுகின்றன. செங்குத்தான குத்துத்தூண்களுக்கு இடையே தேக்குந்தகடுகள் கிடைநிலையில் வைக்கப் டுகின்றன. எடுத்துக்காட்டு (ஈ) வகைக் காப்பணை. நிலத்தின் அழுத்தம் மற்றும் முழு நிலநீர் அழுத் தத்திற்கு ஏற்றவாறு நீர் உட்புகாக் காப்பணைகள் வடிவமைக்கப்படுகின்றன. நீர் உட்புகும் காப்பணை களின் கசிவால் குறைந்த நிலநீர் அழுத்தம் ஏற்படு கிறது. கற்பாளம் மற்றும் சல்லிகளில் பொருத்தமான மற்றொரு வகைக் காப்பணை கற்காரையால் அவ் விடத்தில் வார்க்கப்படுகிறது. இவ்வகைக் காப்பணை படம் ( ல் உருளை வடிவத்தில் காட்டப்பட் டுள்ளது. கூடு வகைக் காப்பணை தவிர மிகுதியான காப்பணைகளில் அவற்றின் சுவர்களுக்கு வலிமை தருவதற்காகத் தகடுகளை உள்ளே நுழைப்பதற்கு மண் தேவைப்படுகிறது. (படம் ஐ) கூடு வகைக் காப்பணை (cellular cofferdam) ஒன்றோடொன்று ணைந்த எஃகு தகட்டுக் குத்துத்தூண்களால்