காப்பி 317
(A) (ஏ) .(GT) section. plan (9) காப்பி 317 படம் 1. காப்பணைகள் (அ-ஈ) - நிலத்தில் பயன்படுபவை. (அ) குறுக்கு - அணைச்சட்டத் தகட்டுக் குத்துத்தூண் கள்; (ஆ) கட்டப்படும் இடத்திலேயே வார்க்கப்பட்ட கற்காரை உருளை; (இ) நங்கூரமிடப்பட்ட தகட்டுக் குத்துத் தூண்கள். (ஈ) செங்குத்து அணைச்சட்டக் குத்துத்தூண்கள். (உ-எ) நீரில் பயன்படுபவை. (உ) குறுக்கு - அணைச் சட்டத் தகட்டுக் குத்துத்தூண்கள். (ஊ) மண் அணை (எ) கட்டப்பட்ட தகட்டுக் குத்துத் தூண்கள் (ஏ) மண் யுடன் நங்கூரமிடப்பட்ட தகட்டுக் குத்துத்தூண்கள் (ஐ) எஃகு தகட்டுக் குத்துத்தூணுடைய கூடு காப்பணை (ஓ) பாறையால் நிரப்பப்பட்ட தொட்டி. பாறை அல்லது மண் மீது கட்டப்படுகிறது. வட்ட வகைக் காப்பணைக் கூடுகள் தனித்தனியே நிரப்பப் படுகின்றன. தேக்கு, முன்வார்ப்புக் கற்காரை, எஃகு தகடுகள் முதலியவற்றாலான திறந்த பெட்டி போன்ற தொட்டி சரியான பொருளால் நிரப்பப்பட்டிருக்கும். விரைவாக ஓடும் நீரிலும், பாறைகளுள்ள பகுதியிலும் கட்டுமான வேலைக்குப் பாறையாலான தொட்டிகள் பயன்படுகின்றன. மண் அல்லது பாறையால் மண் அணைகள் (படம் ஐ) கட்டப்படுகின்றன. ஆனால் நீர் ஊடுருவல் ஏற்பட்டால், அக் கசிவைத் தடுக்கக் குறுக்குக் கால்வாய் அமைக்கப்படுகிறது. பயன்கள். ஆண்டு முழுதும் நீர் வழங்கும் கட்டு மானங்களில் ஏற்படும் வெள்ளத்தை நீக்குவதற்குக் காப்பணைகள் போதுமான உயரத்தில் கட்டப்படு கின்றன. சுரங்கப்பாதைக் கட்டுமானத்தில் (subway construction) காப்பணைகள் பயன்படுகின்றன. இரா. சரசவாணி கரை நூலோதி.S.C. Ranguwala, Engineering Materials Charotar Book Stall, ANAND. காப்பி மின்னோட்டத்தைத் தன்னூடாகப் பரவவிடாத ஒரு பொருளைக் காப்பி அல்லது மின் கடவாப் பொருள் (dielectric) என வரையறுக்கலாம். ஆனால் இதுவரை தெரிய வந்துள்ள அனைத்துப் பொருள்களுமே ஓரளவுக்காவது மின்சாரத்தைக் கடத்தவே செய் கின்றன. ஆயினும் பகுதி கடத்திகளிலிருந்தும், மின் கடத்திகளிலிருந்தும் காப்பிகளை எளிதாக வேறு படுத்திக் காட்டலாம். அறை வெப்பநிலைகளில் ஒரு சிறந்த காப்பியின் மின் கடத்துத்திறன் ஒரு சிறந்த மின் கடத்தியின் மின் கடத்துந் திறனில் மாதிரித் தளமாக 20 இல் ஒரு பங்கு முதல் 200 இல் ஒரு பங்கு வரையில் இருக்கும். வெப்பநிலை குறையக்