322 காப்புக் கட்டுப்பாட்டிதழ்
322 காப்புக் கட்டுப்பாட்டிதழ் >Ne* = =, + m + iof/m (5) f/m<w எனில் e- இன் அதிர்வெண் சார்ந்திருப்பு. ஒரு தணிக்கப்பட்ட சை அலைவியின் ஒத்ததிர்வு நிரலாக விவரிக்கப்படுகிறது. fm> > அதிர்வெண் சார்ந்திருப்பு ஓர் ஓய்வுச் சார்ந்திருப்பை ஒத்திருக்க முனைகிறது. எனில் சுற்றின் மின் கடவா மாறிலி, அனுமதிப்பு ஆகியவற்றின் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிர்வெண் சார்ந்திருப்புகளை ஒத்ததிர்வு மற்றும் ஓய்வுச் செயல் முறைகளின் மூலம் நன்கு விளக்க முடியும். ஒத்ததிர்வுப் பிரிகை, மூலக்கூறுகளின் எலெக்ட்ரான் ஆற்றல் அல்லது அதிர்வு ஆற்றல்களில் ஏற்படும் மாற்றங்களுடன் சேர்ந்து வருவதாகும், வழக்கமாக 10 ஹெர்ட்ஸுக்கு மேற்பட்ட அதிர்வெண்களி லேயே ஒத்ததிர்வு அதிர்வெண்கள் உள்ளன. பாகியல் தன்மை மிகுந்த ஊடகங்களில் உள்ள முனைவுடை மூலக்கூறுகளுக்கும், முகவிடைப் பரப்பு முனைவாக்கம் காட்டுகிற திண்மங்களுக்கும் ஓய்வு நிரல் தோன்று கிறது. J = f/ma ' என்னும் நேர மாறிலி வழக்கமாக 10-11 நொடிக்கு மேற்பட்டுள்ளது. அது மேலும் நீண்ட நேரத்திற்குக்கூட நீடிக்கலாம். மிக நீண்ட ஓய்வு நேரத்தைப் (I) பண்பாகக் கொண்டிருக்கும் கடத்தல் நிகழ்வு இருப்பது மின் கடவாத் தயக்கம் ஏற்படுவதற்கும் மின் கடவா உட்கவர்பு தோன்றுவதற்கும் வழி வகுக்கிறது. மின் கடவாத் தயக்கம் காந்தத் தயக்கத்திற்கு ஒப்பானது. ஒரு மாதிரிப் பொருளின் கடந்த கால மின் வரலாறு அதாவது முன்னர் செலுத்தப்பட்ட மின் புலங்களைப் பொறுத்து மின் கூடவா முனைவாக்கம் மாறுவது மின் கடவாத் தயக்கம் (dielectric hysterisis) ஆகும். . 1/J என இருக்கும் வகையில் E = E, exp (int) என்னும் மின் புலத்தைச் செலுத்தினால், P-E வரைபடம் ஒரு நீள் வட்ட மாக அமைகிறது. < <ljJ என உள்ளபோது P=X E, E, என்னும் ஒற்றை மதிப்புள்ள சார்பெண்ணை அணுகுகிறது. இதில் X என்பது மின் ஏற்புத் திறன் (suscepti- bility) ஆகும். இரும்பு மின் பொருள்கள் தானாகத் தோன்றும் முனைவாக்கம் உள்ளவை. ஏறத்தாழ மாறிலியான புலங்களிலும் அவை மின் கடவாத் தயக்கம் கொண்டுள்ளன. மின் கடவா உட்கவர்பு அல்லது மின் கடவாப் பின் விளைவு என்பது, ஒரு மின் கடவாப் பொருளின் மேல் செலுத்தப்படும் புலம் மாறும்போது வளர்ச்சி பெறுகிற அல்லது மெல்லத் தேய்கிற மின்னேற்ற மின்னோட்டம் அல்லது முனைவாக்கம் ஆகும். வழக்கமாக து மின்முனைவாக்கத்தால் உண்டாகிறது. சில வழக்கத்தை மீறிய பொருள் களில் இது மாதக் கணக்கில் அல்லது ஆண்டுக் கணக்கில் கூட நீடிக்கும். செலுத்தப்படும் புலத் துடன் நேர் போக்கற்ற வகையில் மாற்றம் அடைகிற முனைவாக்கத்தைக் கொண்டுள்ள மின் கடவாப் பொருள்களின் மேல் சைன் கோட்டு வடிவ மின் புலங்களைச் செலுத்தினால் அவை சை அலைகளை உண்டாக்கும். இந்த விளைவின் உதவியால் அதிர் வெண் பெருக்கம் செய்யவும், பாராமெட்ரிக் பெருக்கிகளிலும், லேசர் இசை அதிர்வியற்றிகளிலும் பயன்படுத்தப்படும் தன்னிச்சையான அலைகளைக் குறிப்புக் கலப்புச் செய்யவும் முடிகிறது. மின் கடவாப் பொருள்கள். வெற்றிடமும். காற்றைத் தவிர்த்த மற்ற வளிம நிலை மின் கடவாப் பொருள்களும் எலெக்ட்ரான் குழல் கருவிகளிலும். மின்னழுத்த நிலைப்படுத்திகளிலும், இடி தாங்கிக் கருவிகளிலும் பயன்படுகின்றன. மின் கடவா நீர் மங்கள் உயர் மின்னழுத்தக் கம்பிவடங்களிலும் மின் தேக்கிகளிலும் பொருத்தப்படுகிற நுண்துளைக் காப்பிகளின் நுண் துளைகளுக்குள் புகுத்தவும், மின் மாற்றிகள் மின் சுற்று முறிப்பான்கள் ஆகியவற்றில் மின் காப்பு ஊடகமாகவும் பயன்படுகின்றன. மின் மாற்றிகளிலும், சுற்று முறிப்பான்களிலும் பயன் படுத்தப்படுகிற நீர்மங்களின் வெப்பம் கடத்தும் தன்மைகள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கனிம எண்ணெய்கள், ஹாலோஜனேற்றம் செய்யப் பட்ட ஹைட்ரோகார்பன்கள், சிலிகோன் எண் ணெய்கள் ஆகியவை மிகு அளவில் பயன்படுத்தப் படும் மின் கடவா நீர்மங்கள் ஆகும். கண்ணாடி, பீங்கான், நெகிழி, ரப்பர், குவார்ட்ஸ். மைக்கா, மக்னீசியா, கல்நார், காகிதம், நார்ப் பொருள் ஆகியவை பரவலாக மின் காப்புப் பொருள்களாகப் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான மின் கடவாப் பொருளைத் தேர்வு செய்யும்போது அதன் எந்திரவியல் பண்புகள், வெப்பம் கடத்தும் பண்புகள் ஆகியவற்றுடன் அது மின்சாரத்திற்குக் காட்டும் மறு விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உயர் அதிர்வெண் உள்ள கருவிகளில் பாலிஎத்திலீன், பாலிஸ்டைரீன் பான்ற இழப்புக்குறைவான, முனைவாக்கம் அடை யாத மின் கடவாப் பொருள்களைப் பயன்படுத்து கின்றனர். சிலிக்கான், ஜெர்மேனியம் போன்ற பகுதி கடத்திகளும், இரும்பு மின் பீங்கான்களும் உயர் நிறை உலோக டைட்னேட்டுகள், சிர்க்கோ னேட்டுகள், நியோபேட்டுகள் ஆகியவையும் ஓரளவு பயன்படும் மின் கடவாப் பொருள்கள் ஆகும். கே. என். ராமச்சந்திரன் நூலோதி. F. Bueche, Principles of Physics, Fourth Edition, McGraw-Hill International Book Company, Singapore. 1984. காப்புக் கட்டுப்பாட்டிதழ் கொதிகலன்கள், காற்றழுத்திகள் (air compressors ) போன்றவற்றில் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு