பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புக்‌ கண்ணாடிகள்‌ 323

மிகுந்தால் அவற்றைத் தாமாகவே வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் காப்புக் கட்டுப்பாட்டிதழ் (safety valve) அமைக்கப்படுகிறது. இதில் ஒரு வட்டத் தட்டு ஓர் இடத்தில் பொருந்தி அதன் மீது சுருள்வில் அழுத்திக் கொண்டு இருக்கும், அழுத்தம் திட்டமிடப் பட்ட அளவைவிட மிகுதியாகச் செல்லும்போது வட்டத் தட்டைத் திறந்து கொண்டு அழுத்தம் வெளியேற்றப்படும். அழுத்தம் குறைந்த பிறகு சுருள் வில் அழுத்தத்தால் தானாகவே மூடிக்கொள்ளும். தனால் கொதிகலன் அல்லது காற்றழுத்தி உள்ளே எந்த அளவு வரை அழுத்தம் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து அவ்வழுத்தத்தை மாற்றி அமைக்க இயலும். சுருள்வில் அடை வளையம் சுருள்வில் வெளியீடு இருப்பிட உள் தருகை தட்டு சரிசெய்யக் கூடிய வளையம் வளைய ஊசி வடிகால் படம் 1. காப்புக் கட்டுப் பாட்டிதழ் அழுத்தம் செலுத்தப்படும் அடைப்பிதழ்கள், முறையைக் கொண்டு வகைப்படுத்தப்படும். அவற்றுள் சுருள்வில் வகை (spring loaded safety valve), நிலை யான எடை வகை (dead weight safety valve). நெம்பு கோல் வகை (lever safety valve) என்பன குறிப்பிடத் தக்கவை. மிகு அழுத்தத்தால் கொதிகலன் விபத்திற் குள்ளாகா வண்ணம் பாதுகாக்சு, காப்பு அடைப் பிதழ்கள் பயன்படுகின்றன. வை தானியங்கி அமைப்புக்கொண்டவை. வை. இலக்குமிநாராயணன் நூலோதி. Baumeister, A. Avallone, Baumeister III, Marks' Standard Hand book for Mechanical அ. க. 8 21 அ காப்புக் கண்ணாடிகள் 323 Engineers, Eighth Edition, McGraw - Hill Book Company, 1978. காப்புக் கண்ணாடிகள் ஒரு இரண்டு கண்ணாடித் தகடுகளுக்கிடையே நெகிழித் (plastic) தகடு வைத்து ஒட்டிய ஒரே அமைப்பிற்கு காப்புக் கண்ணாடி (safety glass) என்று பெயர். காப்புக் கண்ணாடிகளின் உற்பத்தியின்போது முதலில் இரு கண்ணாடித் தகடுகளும், அவற்றிற் கிடையே நெகிழித் தகடும் லேசான அழுத்தத்தில் வைக்கப்படும் போது அவற்றிற்கிடையே இடை வெளியில்லாப் பிணைப்பு ஏற்படுகிறது. பிறகு இந்த அழுத்தத் தகடு (laminate, 75-225 psi வரை அழுத் தத்திலும் 115-150° வெப்பநிலையிலும் அழுத்தப்படு கிறது. இம்முறையில் இவற்றிற்கிடையே நிலையான பிணைப்பு ஏற்படுகிறது. இவற்றின் பருமன் பயன் பாட்டிற்கேற்ப வேறுபடுகிறது. 6 மி.மீ. பருமன் உள்ள காப்புக் கண்ணாடிகள் தரை ஊர்திகளிலும் இதைவிடப் பருமன் மிகுந்த கண்ணாடிகள் வான வூர்திகளிலும் பயன்படுகின்றன. காப்புக் கண்ணாடிகள் இயல்பான கண்ணாடி யைவிடப் பாதுகாப்பானவை. இந்தக் காப்புத் தன்மைக்குக் காரணம் இவ்வகைக் கண்ணாடியினுள் உள்ள நெகிழித் தகடாகும். நெகிழித் மிகு சுமைகளைத் தாங்கும்போது உடையாமல் தகடு நிற்கிறது.மேலும் கண்ணாடித் தகடுகளுக்கிடையே யுள்ள குழைமத் தகட்டுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால், பல காரணங்களுக்காக அவை உடைய நேரிட்டாலும் பறந்து பிரிந்து சென்றாலும் தீங்கு விளைவிப்பதில்லை. இதற்கு மாறாக வேதி முறை யில் தன்மையாக்கப்பட்ட (tempered) கண்ணாடி கள் மழுங்கிய முனையுள்ள துகள்களாக உடை கின்றன. இந்தக் காரணத்திற்காகவே வ்வகைக் கண்ணாடிகள் காப்புக் கண்ணாடிகள் எனப் படுகின்றன. இக்கண்ணாடிகளில் உள்ள நெகிழித் தகடு, காப்புக் கண்ணாடியின் முறிவெண்ணை (modulus of rupture), அறை வெப்பநிலையில் இயல் கண்ணாடி முறிவெண்ணின் அளவில் 60% வரை குறைக்கிறது. மேலும் இக்கண்ணாடிகளிலுள்ள வெப்பம், இளகு குழைம (thermoplastic) கண்ணாடி யின் பிற பண்புகளையும் வெப்பம் சார்ந்தவையாக (temperature dependent) மாற்றுகிறது. காப்புக் வகைக் கண்ணாடிகளின் ஒளிப்பண்பு அவை எந்த கண்ணாடிகளிலிருந்து செய்யப்பட்டவையோ அவற் றின் பண்புகளையே கொண்டிருக்கும். இருப்பினும் 70 க்குமேல் கரிம நெகிழி சிதைந்து போகலாம். பெரும்பாலான காப்புக் கண்ணாடிகள் ஊர்தி களில் பயன்படுகின்றன. இக்காப்புக் கண்ணாடிகளில் பான