324 காப்புத் தளம்
324 காப்புத் தனம் வங் 0.75 மி.மீ. வரை பருமன் உள்ள நெகிழித் தகடுகள் பயன்படுகின்றன. மேலும் கப்பல்கள், வானூர்திகள், இருப்புப் பாதை ஊர்திகள், இருப்புப் பாதை நீராவித் தொடர்வண்டிகள் (locomotives), பாதுகாப்பு மூக்குக் கண்ணாடிகள் (safety goggles), நோக்கு காலதர்கள் (viewing windows) முதலிய அமைப்புகளில் காப்புக் கண்ணாடிகள் பயன்படுகின்றன. விறைப்பாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகளை நெகிழித் தகடுகளுடன் சேர்த்துப் பல அடுக்குகளாகச் செய்யும்போது குண்டு துளைக்காத கண்ணாடிகள் கிடைக்கின்றன. களிலும், நகைக் காட்சியகங்களிலும், போர் ஊர்தி களிலும், ஆய்வுக்கூடக் காலதர்களிலும் பயன்படு கின்றன. காப்புக் கண்ணாடிகளில் உள்ள நெகிழியையோ மங்கலாக்குவதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை வடிகட்ட இவை பயன்படும். காப்புக்கண்ணாடிகள் நொறுங்கா மல் இருப்பதற்குக் கண்ணாடித் தகடுகளுக்கிடையே நெகிழித் தகடுகளோ கம்பி வலைகளோ படுகின்றன. யையோ ணாடியை கண் வைக்கப் கி.மு. மோகன் நூலேசதி. A.G.H. Diet, Engineering Laminates 1949; W.L. Mc Cabe, J.C. Smith, Peter Harriott, Unit operations of Chemical Engineering, Fourth Edition. McGraw-Hill Book Co.. New York, 1985. காப்புத் தளம் ஆற்றின் கரைகளை அரிப்பிலிருந்து தடுக்கும் ஓர் அமைப்பு, காப்புத்தளம் (revetment) ஆகும். சில டங்களில் இது உறுதியான தடுப்பாகச் செயல் படும்; இருந்தபோதும், அடிப்படைக் கோட்பாடாக, அச்சுறுத்தும் அல்லது பாதிக்கப்படும் பகுதியிலிருந்து அதிக விரைவு கொண்ட நீரோட்டத்தை விலகிச் செல்லுமாறு து அமையும் காப்புத் தளம் பொதுவாக 11-1 அல்லது 2-1 என்னும் பக்கச் சரிவுடன் சாதாரண மண்களிலும் மணல் கலந்தமண் களில் 3-1 என்னும் சரிவுடனும் கட்டப்படுகின்றது'. காப்புத் தளத்தின் தடிமன் பொதுவாக 0.45-0.75 மீ வரை உயரத்திற்குத் தக்கவாறு மாறுபடும். இது மேல் பக்கப் பாய்வு பகுதியில் தாக்கும் இடத்தி லிருந்து நீரோட்டத்திற்கு 15° கோணத்திற்கு மிகா மல் காப்புத் தளத்தினை அமைக்கத் தொடங்கு வதன் மூலமும் மற்றும் காப்புத் தளத்தின் மேற் பரப்பு கரடுமுரடானதாக இருக்கும் போதும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது. இந்தக் கரடு முரடான மேற்பரப்பு ஒரு கொந் தளிப்புப் பகுதியை (zone of turbulence) உருவாக்கி, அதன் மூலம் மெத்தை போன்று செயல்பட்டு மிகு விரைவு கொண்ட நீரோட்டத்தைக் கரையிலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது. இந்த விலகிச் செல்லும் எல்லை, சுமாராக 15 மீ வரை இருப்பதாக அறியப் பட்டுள்ளது. எண்ணற்ற நிலைமைகளில் சாதாரண மாகக் குறைந்த நீர் மட்டத்தை விடக் (low-water level) காப்புத் தளத்தின் முடிவானது 5 மீட்டருக்குக் குறைவாகத் தாழ்வாக இருக்கும் இடங்களில் காப்புத் தளத்தைப் பாதிக்காமல் அரிப்பு ஆழம் (scour depth ) 9-12 மீட்டர் வரை அமைகிறது. ஆழமான நீரில் அல்லது தாக்கும் கோணம் 300 மேல் இருக்கும் இடங்களில் இந்தக் கரடுமுரடான மேற்பரப்பினால் ஏற்படும் நன்மை குறைகிறது. இவ்விடங்களில் காப்புத் தளத்தை, பரப்பு நீரோட்டப் (thalweg) வரை நீட்ட வேண்டும். பாதை காப்புத்தளங்களின் ஒருங்கமைப்பு (alignment) மிருதுவாகவும், துளைகள் மற்றும் புடைப்புகளின்றி யும் இருத்தல் வேண்டும்; ஒருங்கமைப்பில் கூர்மையான திருப்பங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை திடீரெனக் கடந்து நீரோட்டம் எதிர்க்கரையைத் தாக்குமாறு செய்துவிடும்; அல்லது கரைகளில் நீர்ச்சுழலை உண்டாக்கி அதன் மூலம் காப்புத்தளத்தைப் பாழாக் கவோ அரிக்கவோ செய்யும். காப்புத் தளங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் படும்; வலுவான பாறைகளைக் கொண்டு பதித்தல், பாறை, தார் அல்லது கற்காரையுடன் நீரில் மூழ்கி யுள்ள பகுதிகளுக்குக் கற்காரைமெத்தை அமைத்தல். குத்துத்தூண் அணை (கடலைத் தடுக்கும் அணை) அல்லது மற்ற நீர் ஊடுருவிப் பரவும் வேலி அடைப்பு கள், மரத்தூரிகையினாலான மெத்தைகள், தொட்டி வேலை காப்புத்தளம், முன் வார்ப்புக்கட்டமைப்புகள். எளிய மராமத்து வேலைகளுக்கும் கரை உடைப்புகளைச் சீரமைப்பதற்கும், பாறை பதித்தல் சிறப்பாக இருந்தாலும் ஒரு சிறந்த வடிப்பான் (filter) அமைக்கப்பட வேண்டும். இவ்வடிப்பானானது கூழாங்கல்லாலான போர்வையாகவோ சரியான முறையில் குவிக்கப்பட்ட (பாறை தோண்டும் இடத்தி லிருந்து எடுக்கப்பட்ட) பாறை கொண்டதாகவோ. கீழ்படிந்துள்ள கரைப் பொருள்களை அரிப்பிலிருந்து தடுக்கும் வண்ணமாகவோ இருத்தல் வேண்டும். சிறிய உடைப்புகளைச் சேர்த்து பெரிய கரை உடைப் பாகும் வரை வளர்ச்சியடைய உதவுவது திண்மப் பதித்தலில் உள்ள குறையாகும். அதோடு, அடிக்கடி, ஒரு முறை உடைக்கப்பட்டவுடன் அந்த இடத்தி லிருந்து பெரிய தகடு தகடாக உரித்துக் கொண்டு வரும் குறைபாடும் இதற்கு உண்டு. மிசௌரி மற்றும் அர்க்கான்சாஸ் ஆறுகளைப் போன்ற நீரோட்டங்களில், நீரின் ஆழம் குறைந்த நீர் மட்டங்கள் 5-8மீ வரை அரிதாக அதிகரிக்கும்