பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 காப்பு நடவடிக்கை, அறுவைக்குப் பின்‌

326 காப்பு நடவடிக்கை. அறுவைக்குப்பின் வலிவூட்டப்பட்ட கற்காரை மற்றும் நிலக்கீல் - கற்காரை (asphalt-concrete) பொருள்களினாலான முன்வார்ப்புக் கட்டமைப்புகள் (precast structures) தற்காலத்தில் எப்போதையும்விட அதிகப்பயன்களைப் பெற்றிருக்கின்றன. அவை காலம், பணம் மற்றும் பயன் ஆகியவற்றைச்சேமிக்கின்றன. கொம்பணைகள் சிறிய தடுப்பணைகளாகும். அவை கிட்டத்தட்ட கரைக்குச் செங்குத்தாக இருக்கும்; அவை சில நேரங் களில் காப்புத் தளங்களுக்குப் பதிலாக, சிறப்பாக படுகை நிலையானதாக இருக்கும் இடங்களில் பயன் படுத்தப்படுகின்றன. அவை பொதுவாக, திடமான கட்டுமானங்களாக இருக்கும். இரும்புத் தகடுகளினா லான பலகைக் குத்துத் தூளாகவோ (sheet piles) குவிக்கப்பட்ட பொருள்களாலானதாகவோ இருக்கும். மு. புகழேந்தி நாலோதி.S.K. Garg, Irrigation Engineering And Hydraulic Structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987. காப்பு நடவடிக்கை, அறுவைக்குப்பின் மனித உடலில் அறுவை மருத்துவம் செய்வதன் மூலம் பல நோய்கள் விரைவில் குணம் அடைவதாலும், குணம் அடைவதற்கான அறிகுறிகள் காணப்படுவ தாலும் உலகம் முழுதும் இன்று அறுவை முறையை நோயுற்றோர் பலரும் நாடுகிறார்கள். அறுவைக்கு முன்னுள்ள முறைகள், அறுவை நேரத்தில் மேற் கொள்ளப்படும் முறைகள், அறுவை முடிந்ததும் மேற்கொள்ள வேண்டிய முறைகள் இவை அனைத் தும், சீராகவும், செம்மையாகவும் மேற்கொள்ளப் படுவதால் நோயுற்றோர் முழுதும் குணம் அடைந்து விடுகின்றனர். இம்மூன்று மருத்துவ முறைகளும் ன்றியமையாதவை. மருத்துவரோடு அவரைச் சார்ந்தோர், நோயுற்றோர் ஆகியோர் ஒத்துழைத் தால் நோய் குணம் அடைவது விரைவாகவும் வெற்றிகரமாகவும் அமையும். இந்த அறுவை முறை அறுவை மருத்துவம் (surgical operation) என்றும், இம்மருத்துவத்திற்குப் பின்னர் உள்ளது காப்புமுறை (post operative care) என்றும் கூறப்படும். அறுவையில் வலிநீக்கி மருந்துகள் (general anaesthetics) நரம்பு மருந்துகள் (regional anaesthetics ) உடலில் செலுத்தப்படுவதால் நோயாளியின் உடல் மயங்கிய நிலையில் இருக்கும். மேலும் மயக்கம் தெளி வடையும் நேரத்தில் மயக்க வாந்தியும், உடல் உலுக் கலும், காயம் மூலமாக இரத்த இழப்பும், காயத்தில் பெரும் வலியும் சேர்ந்து ஏற்படுத்தும் உடல் களைப் பாலும் மயங்கிய நிலையில் நோயாளி இருக்க நேரிடும். காய மருத்துவம் செய்த கட்டத்தில் மட்டு மின்றி, இயற்கை விபத்துகள், ஆபத்துக்கள் மூலம் அடையும் காயங்கள் கூட இம்மயக்க நிலையை ஏற் படுத்தும். இவ்வாறு உடலில் ஏற்பட்டு இருக்கும் மயங்கிய நிலையைக் கவனிப்பது விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய முதல் பணி ஆகும். அறுவை முடிந்து நோயுற்றவர் கொண்டு வரப் பட்டதும் படுக்கையின் தலைப்பக்கம் சிறிது தாழ் வாகவும், கால் பகுதி முக்கால் அல்லது ஓர் அடி உயரமாகவும் இருக்குமாறு படுக்கையை அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மயக்க வாந்தி, இரைப்பை வாய், வாய், தொண்டை, மூக்குப் பகுதி களிலிருந்து சுரக்கும் நீர், கோழை ஆகியவை மூச்சுக் குழாயையும், மூச்சு இழுக்கும் நுரையீரல் பகுதியை யும் அடைத்து விடாமல் வெளியேறும். தூய்மையான காற்றைச் சீராக மூச்சுவிடும்படிச் செய்வதால் தெளிவு ஏற்படுகிறது. இதே நேரத்தில் இரத்தக் குழாய் வழியாக உடலுக்குத் தேவையான உணவும், சத்துப் பொருள் களும் தூய்மையான முறையில் கண்ணாடிப் புட்டி, குழாய் அமைப்புகள், ஊசி மூலமாக, உடலின் இரத்த ஓட்டத்துடன் சீராகத் தேவைக்கேற்றாற் போல் செலுத்தப்படும். பெரும் காய மருத்துவத்தில் இரத்த இழப்பு ஓரளவு ஏற்படுவதால் இரத்ததான முறையில் பொருத்தமான இரத்தத்தை ஆய்வு செய்து கொடுக்க வேண்டும். தூய காற்றும், இரத்த ஓட்டமும் பெறுமாறு செய்து நாடிந்pulse) கண்காணிப்பு, இரத்த ஓட்டம். அழுத்தம், மூச்சு விடும் பக்குவம் ஆகிய அனைத்தை யும் கவனிக்கும்போது நோயாளி மயக்கம் தெளிந்து நினைவாற்றலும் பெறுகிறார். இந்த அறுவைக் காயங்கள் முற்றிலும் ஆறி மீண்டும் அந்த உறுப்பை அன்றாடப் பணிக்கு ஏற்றவாறு செயல்படச்செய்வதே அறுவை மருத்துவக் கண்காணிப்பின் குறிப்பிடத்தக்க பணி ஆகும். அறுவை அடைந்துள்ள உடல் பகுதிக்கு ஓய்வு அளிக்கப்படும். கண் என்றால் செந்தூய்மை கட்டுப் போடப்பட்டுப் பார்வை நிறுத்தப்படும். மென்மை யான பஞ்சுக் கட்டுக்குள் கண் ஓய்வாக இருக்கும். பிற பகுதியானால் தையல் போட்டுச் சீரான அழுத் தத்தில் இருக்கும் வகையில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் காய வீக்கம் பெருகாமல் சுட்டுப் படுத்த முடிகிறது. முதல் 24-48 மணி வரையான காலத்தில் இரத்தக் கசிவால் நனைந்த கட்டு செந் தூய்மை முறைப்படி அகற்றப்பட்டு மறுகட்டு இடப் படும். தொடர்ந்து புண் நன்றாக ஆறி மூட்டம்: அகற்றும் வரை இச்சீரிய கவனிப்பு மேற்கொள்ளப் படும். ஏறத்தாழ 5 -10 நாள் வரை இந்நிலை தொட ரும். இதை இரண்டாம் நிலை வெற்றியாகக் (second phase success, of the operation) கொள்ளலாம்.