பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 காப்ரியேல்‌ தொகுப்பு முறை

318 காப்ரியேல் தொகுப்பு முறை காப்புறை எனும் முறை பயன்படுகிறது. பழங்காலத் தில் நகைகள் செய்யக் கையாளப்பட்ட இக்கலை தற்போது தொழிற்சாலை அளவில் மேற்கொள்ளப் படுகிறது. மூல உலோகத்தின் மேல் வேண்டிய பண்புடைய லோகத்தை ஒட்டுதல் (bonding) அல்லது பற்ற வைத்தல் (welding) மூலம் உறை அமைப்பதே உலோகக் காப்புறை (metal cladding). இவ்வாறு காப்புறை இடப்பட்ட உலோகம் பின்பு தேவையான தடிமன் அளவிற்கு உருட்டப்படுகிறது. காப்புறையின் தடிமன் மூல உலோகத் தடிமனின் சதவீதமாகக் குறிக்கப்படுகிறது. இது பொதுவாக 10% ஆகும். டப் உலோகக் காப்புறையின் பண்புகள் நகைகள் பழங் காலத்தில் இம்முறையிலேயே செய்யப்பட்டு வந்தன. நகையின் மூல உலோகம் செம்பு அல்லது பித்தளை யால் ஆனது. அதன்மேல் தங்கக் காப்புறை படும். சில உறுதியான ஆனால் குறைந்த வெப்பம் கடத்தும் திறன், குறைந்த மின்சாரம் கடத்தும் திறன் கொண்ட உலோகங்களுக்கு அவற்றின் வெப்பம் மற் றும் மின்கடத்தும் திறனை அதிகரிக்க இம்முறை பயன்படுகிறது. 1930 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இம்முறையில் நிக்கல் காப்புறை இடப்பட்ட எஃகு உலோகத்தைத் தயாரித்தனர். இவ்வுலோகம் எரிசோடா ஏற்றிச் செல்லும் தொடர் வண்டிகள் செய்யப் பயன்பட்டது. ம் முறையில் தயாரிக்கப் பட்ட துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் உணவு தயாரிக்கப் பயன்படும். நவீன தொழில்நுட்பத்தில் தாரை செலுத்து பொறியின் (jet engine) பகுதிகளைத் தயாரிக்க உதவும் டைட்டேனியம் காப்புறை இடப்பட்ட எஃகு இம் முறையிலேயே உருவாக்கப்படுகிறது.தற் போது நாணயங்களும் காப்புறை உலோகங்களின் மூலம் குறைந்த செலவில் தயாரிக்கப்படுகின்றன. உலோகக் காப்புறை (cladding) முறையில் எந்த ஒரு தனிப்பட்ட உலோகத்திற்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த பண்புகள் கொண்ட உலோகத்தை வாக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஓர் உறுதி மிக்க உலோகம், மின்கடத்தும் திறன் குறைவாகக் கொண்டிருக்கலாம் அல்லது எளிதில் அரிப்புத்தன்மை கொண்டதாக இருக்கலாம். ஆனால் உலோகக் காப் புறை மூலம் இம்மூன்று பண்புகளைக் கொண்ட ஓர் உலோகத்தைப் பெற இயலும். பொதுவாகப் பயன்படும் சில காப்புறை உலோகங் கள். துருபிடிக்காத எஃகு, அரிமானம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இது கவர்ச்சியான மேற்பரப்பும் குறைந்த செலவும் கொண்டதாகும். சமையல் கருவிகள், அலங்கார வளைவுகள் இவ்வுலோகத்தால் செய்யப் படுகின்றன. துருபிடிக்காத எஃகின் மேல் இடப்படும் தாமிரம் அதன் வெப்பங் கடத்தும் திறனை அதிகரிக் கிறது. அலுமினியத்தின் மேல் இடப்படும் தாமிரம் மின்கடத்தும் திறனை அதிகரிக்கிறது. செலவீடும் குறைகிறது. எஃகின் மேல் டைட்டேனியம் இடுவ தால் உயர் வெப்பம் தாங்கும் திறன் பெறப்படுகிறது. தாமிரத்தின் மேல் இடப்படும் வெள்ளி, ஆக்சிஜனேற் றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. . காப்புறை உலோகங்களை உருவாக்கும் முறைகள் உலோகக் காப்புறை செவ்வக வடிவ மூல உலோகத் தின் இருபக்கங்களிவோ, ஒரு பக்கத்தில் மட்டுமோ செய்யப்படுகிறது. இதுபோல மூல உலோகம் குழாய் வடிவாக இருந்தால் காப்புறை குழாயின் புறமோ, வெளிப்புறமோ செய்யப்படுகிறது. உட் மற்றொரு வகைக் காப்பு உலோகம் வெப்ப நிலைப்பு இரட்டை உலோகமாகும் (thermostatic bimetal). சம அளவுகளில் அதிக அளவில் விரிவடை யும் உலோசுமும் பற்ற வைக்கப்பட்டுக் காப்புறை (cladding by welding) செய்யப்படும். இக் கலப்பு உலோகம் தானியங்கிகளில் (automobiles) பயன் படும் கட்டுப்பாட்டிதழ் அல்லது வால்வுகளில் பயன்படுகிறது. வெப்பம் வேறுபடும்போது இந்தக் காப்பு உலோகத்தில் உள்ள உலோகங்கள் வெவ்வேறு அளவுகளில் விரிவடைகின்றன. இதனால் மூல உலோகம் வளைந்து அடைப்பிதழ்களை மூடவோ திறக்கவோ செய்கின்றன. கிடைக்கும் உலோகக் காப்புறையின் மூலம் உலோகத்தைக் கொண்டு வளைத்தல், இழுத்தல், சுழற்றுதல் போன்ற முறைகள் மூலம் வேண்டிய வடி வங்களில் பொருள்களைப் பெறலாம். பொ. கு.பழனி நூலோதி. Baumeister, A. Avallone, Baumei- ster III, Marks Standard Hand Book for Mechani- cal Engineers, Eighth Edition, McGraw-Hill Book Company. 1978. காப்ரியேல் தொகுப்பு முறை இத்தொகுப்பு முறையால் அல்க்கைல் ஹாலைடுகளி லிருந்து ஓரிணைய அமீன்களைத் தயாரிக்கலாம். இம்முறையில் ஈரிணைய அமீன், மூவிணைய அமீன், கலக்காத தூய ஓரிணைய அமீன்களைப் பெறலாம். . காப்ரியேல் தொகுப்பு முறையில் (Gabriel synthesis)முதலில் தாலிமைடு பொட்டாசியம் ஹைட் ராக்சைடுடன் வினைப்படுத்தப்படுகிறது. இவ்வினை யில் பொட்டாசியம் தாலிமைடு உண்டாகிறது. இந்தப் பொட்டாசியம் உப்பை அல்க்கைல் ஹாலை டுடன் சேர்க்கும்போது N - அல்க்கைல் தாலிமைடாக மாறுகிறது. N - அல்க்கைல் தாலிமைடு 20% ஹைட் ரோகுளோரிக் அமிலத்தாலோ பொட்டாசியம்