பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிமம்‌ 15

களிமம் i5 ஜெலேட்டின் களிமங்கள் இவ்விதம் தயாரிக்கப்படு கின்றன. ஒரு மீன் களிமத்தைப் பகுதி அளவு நீர் நீக்கம் செய்தால் மீள் திண்மம் கிடைக்கிறது. அதனுடன் நீர் சேர்க்கப்படும்போது மீண்டும் அக்களிமம் கிடைக்கிறது. மீளாக் களிமங்கள் (non-elastic gels). mar இவை நிலையான களிமங்கள் (rigid gels) எனப்படும். சிலிகா களிமம் இதற்குச் சான்றாகும். அதை உலர்த்தும்போது கண்ணாடி போன்ற தன்மையைப் பெறுகிறது அல்லது தூளாகிறது. இவ்வுலர்ந்த பொருளுடன் நீரைச் சேர்க்கும்போது மீண்டும் அப் பொருள் கிடைப்பதில்லை. கூழ்மக் கரைசல்களைக் குளிர்வித்தல். அகர் - அகர், ஜெலேட்டின் முதலிய பொருள்கள் சூடான நீரில் கரைபவை. அக்கரைசல்கள் குளிர்விக்கப்படும்போது அப்பொருள்களின் களிமங்கள் உண்டாகின்றன. இத் தகைய முறையில் களிமமாகும் தன்மை வெப்பம், நேரம், ஊடகத்தின் பாகுத்தன்மை, களிமமாவதற் கேற்ற பொருளின் குறைந்த அளவு அடர்வு ஆகிய காரணிகளைப் பொறுத்தமையும். சல்ஃபேட்டுகள், டார்ட்ரேட்டுகள், அசெட் டேட்டுகள், சிட்ரேட்டுகள் ஆகிய பொருள்கள் களிமமாகும் தன்மையை விரைவுபடுத்துகின்றன. ஆனால் குளோரைடுகள், நைட்ரேட்டுகள் முதலியவை களிமமாகும் தன்மையின் வேகத்தைக் குறைக் கின்றன. புரோட்டீன்களின் களிமமாகும் தன்மை அமில காரங்களால் தடைப்படுகிறது. இரட்டைச் சிதைவு முறை. சோடியம் சிலிகேட்டின் நீர்க்கரைசலுடன் ஓர் அமிலத்தைச் சேர்க்கும்போது சிலிசிக் அமிலம் விடுபட்டு விரைவில் களிமமாக மாறுகிறது. கரைப்பாள்கள் பரிமாற்ற முறை. ஒரு பொருளின் கரைசலுடன் அப்பொருள் கரையாத ஒரு கரைப் பானை விரைவில் சேர்க்கும்போது களிமம் உண்டா கிறது. காட்டாக, கால்சியம் அசெட்டேட்டின் அடர் நீர்க் கரைசலுடன் தூய ஆல்கஹாலை விரைவாகச் சேர்க்கும்போது அப்பொருள் கரைசலிலிருந்து விடுபட்டுக் கூழ்மத் துகள்களாக மாறுகிறது. பின்னர் அத்துகள்கள் களிம நிலையை அடைகின்றன. வேதி வினைகள். இரண்டு பொருள்களின் அடர் கரைசல்களைச் சேர்க்கும்போது ஏற்படும் வேதி வினையால் தோன்றும் பொருள்களுள் ஒன்று கரையாததாகவும் அப்பொருளின் துகள்கள் ஒருங் கிணைந்து களிமம் அளிக்கக்கூடியவாகவும் இருப்பின் இம்முறை பயன்படும். சான்றாக, பேரியம் தயோசய னேட் மற்றும் மாங்கனீஸ் சல்ஃபேட் ஆகியவற்றின் அடர் கரைசல்களைச் சேர்த்துக் குலுக்கினால் பேரியம் சல்ஃபேட் களிமம் உண்டாகிறது. இவ்வாறே அலுமினிய உப்பின் அடர் கரைசலும் அம்மோனியம் ஹைட்ராக்சைடும் கலக்கப்படும்போது அலுமினியம் ஹைட்ராக்சைடு களிமம் உண்டாகிறது. திரட்சியடையச் செய்தல் அல்லது கரைதிறனைக் குறைத்தல். கூழ்மக் கரைசல்களைத் திரட்சியடையச் செய்வதன் மூலம் பல களிமங்கள் தயாரிக்கப்படு கின்றன. இத்தகைய மாற்றத்தை விளைலிக்சுத் துகள்களின் வடிவம், சால் கரைசலின் அடர்வு, கரைப்பானேற்ற வீதம் (degree of solvation) ஆகிய காரணிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாகப் போதிய அடர்வுகொண்டுள்ள சிலிசிக் அமிலத்தின் கூழ்மம் ஒரு மின் பகுளியை அதனுடன் சேர்க்கும்போது திரட்சி அடைந்து களிம மாக மாறுகிறது. இதேபோல் அலுமினியம் ை ஹைட் ராக்சைடு அல்லது ஃபெர்ரிக் ஹைட்ராக்சைடு ஆகியவற்றின் சால்களும் அவற்றின் போதிய அளவு அடர்வுடைய கரைசல்களுடன் மின்பகுளிகள்சேர்க்கப் படும்போது களிமங்களாகின்றன. உயர் சீரற்ற வடிவ முடைய கூழ்மப் பொருள்கள் களிமமாக மாறு வதற்குக் குறைந்த அடர்வுடைய கூழ்மக் கரைசலே போதும். . கூழ்மங்கள் உண்டாவதைப் பாதிக்கும் காரணிகள். இதற்குப் பல காரணிகள் இருப்பினும் அவற்றுள் குறிப்பிடத்தக்க காரணிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாக சில பயன்படுத்தப்படும் திண்மத்தின் தன்மை. பொது நீர் - விரும்பும் கூழ்மங்கள் (hydrophilic colloids) களிமங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன. நீர் - வெறுக்கும் கூழ்மங்களுடன் (hydrophobic colloids) மின்பகுளிகள் சேர்ப்பதால் சில களிமங்கள் பெறப் பட்டாலும் அத்தகைய களிமங்கள் உண்மையான களிமங்கள் அல்ல. அடர்வு. சாவின் அடர்வு மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ இருத்தல் கூடாது. ஏனெனில் மிகக் குறைந்த அடர்வாக இருப்பின் இழை அமைப்பு, தொடர்ச்சிய யாக இராது. மிகு அடர்வாக இருப்பின் முதலில் மெல்லிய ஜெல்லி உண்டாகும். பின்னர் அடர்விற்கேற்ப அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். வெப்பம். வெப்பமும் ஒரு முக்கிய காரணியாகும். ஏனெனில் ஒரு களிமம் படியாதிருப்பின் அது குளிர் வித்துப் படிய வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு கரைசல் மிகவும் அடர்வு குறைந்ததாக இருப்பின் குளிர்வித்தல் பயன்படாது. பல நிலைகளில் வெப் பத்தை அதிகரித்தல், களிமமாகும் வேசு வீதத்தை அதிகரிக்கிறது. ஒத்த வீழ்படிவாகும் வேகம். வீழ்படிவாகும் வேகம் மிகுதியாக இருந்தால் ஜெலேட்டினை வீழ்படிவு (களிமம்) கிடைக்கும்.