பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 காஃபி செடி

330 காஃபி செடி என்பர். பொதுவாக 60 சிற்றினங்கள் உண்டு. அவற்றில் பெரும்பான்மையானவை ஆஃப்ரிக்காவில் (33 சிற்றினங்கள்) காணப்படுகின்றன என்று தெரி கிறது. காஃபியா பேரினத்தில் வணிக முறையில் அமைந்த 2 சிற்றினங்களில் அரேபியன் அல்லது அரேபிகா காஃபி என்பது கா. அரேபிகாவைக் (Carabica) குறிப்பதாகும். மற்றது.கா. கேனிஃ போரா (C.canephora) எனப்படும் ரொபஸ்டா காஃபியைக் குறிக்கிறது. உலகக் காஃபித் தயாரிப்பில் அரேபிகா சிற்றினத்தின் பங்கு 90% ஆகும். காஃபியிள் சிற்றினங்கள் கா. கேனிஃபோரா. இதை ரொபஸ்டா அல்லது காங்கோ காஃபி என்பர். இதன் தாயகம் ஆஃப்ரிக்கா காங்கோ சமவெளியும், உகாண்டாவும் ஆகும். து ஈர மிதவெப்பக்காடுகளில் தன்னிச்சையாக வளரும், காங்கோ காஃபி உயர் விளைச்சலைத் தருவது மட்டுமின்றி நோய் எதிர்ப்புத் தன்மையும் பெற்றதாகும். ஆனால் தரத்தில் அரேபிகாவைவிடச் சற்றுக் குறைந்தது. இவ்வகை ஆஃப்ரிக்கா. மலேசியா, ஸ்ரீலங்கா, இந்தியா ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது. கா. சைபீரிகா (C. siberica). இதன் தாயகம் சைபீரியா ஆகும். இது மலை அடிவாரப் பகுதியில் வெப்ப ஈரக் காடுகளில் நன்றாக வளரும். இது தரக்குறைவானதாகையால் அராபிகா வகையோடு கலந்து பயன்படுத்துவர். கா.எக்ஸெல்சா (C. excelsa). மேற்கு ஆஃப்ரிக்கா வைச் சேர்ந்த இந்தச் சிற்றினம் மரம் போல் மித வறட்சி நிலங்களில் வளரும். மேற்கு ஆஃப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், ஜாவா, வியட்நாம் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது, கா. பெங்காலன்ஸில் (C. bengalensis). வங்காளம் பர்மா, சுமத்ரா போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்கிறது. இந்தியாவில் சில இடங்களில் பயிரிடப் படுவதுண்டு. கா. கான்ஜென்சிஸ் (C. Congensis). இது காங் கோவைத் தாயகமாகக் கொண்டது. இதை கா. கேனிஃபோராவுடன் கலப்புச் செய்து ஜாவாவில் கன்ஜெஸ்டா காஃபி தோற்றுவிக்கப்பட்டது. உலகின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்படும் கா.அராபிகா என்பது ஒரு நான்மய (tetraphoid) னமாகும். இதில் பல வகைகள் ருவகைகள் மிகவும் முக்கியமானவை. இருந்தாலும் அவை கா. அ. வகை அராபிகா (C.a.var arabica). கா.அ வகை பார்பன் (C. a. var bourbon) என்பன. வளரியல்பு. அராபிகா காஃபி 4.5 9 மீ வரை வளரக்கூடிய சிறு மரமாகும். ஆனால் பயிரிடும்போது பூக்கும் கிளை காய்க்கும்கிளை காய் குறுக்குவெட்டுத்தோற்றம் கனிமலர் காஃபியா அராபிகா