காஃபி செடி 331
ளைகளை வெட்டிக் கவாத்துச் செய்வது வழக்கம். இலைக்கோணத்தில் 2 வகை மொட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாகத் தோன்றி இருவகைக் கிளைகளைத் தோற்றுவிக்கும். இலைக் கோண மேல் மொட்டாக வளர்ந்து பக்கக் கிளைகளை உண்டாக்கும். நுனி மொட்டுகள் வெட்டப்பட்டால் உறங்கு நிலையி லுள்ள. கீழ்க்கோணமொட்டு துளிர்த்துத் தழைக் கிளைகளை உண்டாக்கும். பூக்கும் கிளைகளின் ஒவ்வோர் இலைக்கோணத்திலும் 6 மொட்டுகள் காணப்படும். இவை ஆறு அல்லது அவற்றுள் சில மஞ்சரிகளைத் தோற்றுவிக்கும். இலைகள் தனியிலை கள், எதிரிலையடுக்கு அமைப்பு, இலையடிச் செதில் கள் கொண்டவை. இலைப்பரப்பு கோளவடிவத் துடன், பளபளப்பாக, ஓரம் அலைவடிவில் காணப் படும். மலர்கள். உறக்க நிலையிலுள்ள மொட்டுகள் மழைநீரால் நனைக்கப்பட்டுப் பெருக்கத் தொடங் கும். மழைபொழிந்து 8-12 நாள் கழித்து மொட்டு கள் மலரும். காலையில் மலர்ந்த பூக்கள் நடுப் பகலில் வாடிவிடும். இரண்டு நாளுக்குப்பின் சூலகத் தைத் தவிர பிற பகுதிகள் உதிர்ந்துவிடும். மலர்கள். பனிபோல் வெண்மையான மல்லிகைப் பூ மணத்துடன் காணப்படும். காஃபிச் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை பூப்பதுண்டு. செடி அல்லி. இணைந்தவை. நீண்ட சூழலுடன் கூடியவை. 5 அல்லி மடல்கள் கொண்டவை. மகரந்தத்தாள்கள். 5, அல்லி ஒட்டியவை. சூலகம். இரு சூலிலைகள், இரு சூலறைகள், ஒவ்வொன்றிலும் ஒரு சூல் கொண்டது. சூலகத் தண்டு. நீண்டது. சூலகமுடி இரண்டாகக் கிளைத்தது. காஃபிச்செடிகள் பாதகமான சூழ் நிலையில் நட்சத்திரப் பூக்கள் என்னும் மாறுபட்ட பூக்களை உண்டாக்குகின்றன. அவற்றின் அல்லி சிறியதாக, சதைப்பற்றுடன், கெட்டியாகக் காணப் படும்; மேலும் மகரந்தத்தாள்கள் கொண்டது. அவை காய்ப்பதில்லை. பொதுவாக மொத்தப் பூக்களில் 40% காயாக் மாறும். பூக்கள் கனியாக மாற 7-9 மாதங்களாகின்றன. களி உள் ஒட்டுச்சதைக்கனி (drupe) வகை யாகும். இருந்தபோதும் அவற்றைக் காஃபி பெர்ரி அல்லது செர்ரி என்று குறிப்பதுண்டு. இளம் காய் பச்சையாக இருந்து நாளடைவில் மஞ்சளாகிச் சிவப் பாக மாறிவிடும். காய்ந்த கனிகள் கருப்பாயிருக்கும். காஃபியின் மேல் தோல் (exocarp) சிவப்பு நிறத் துடனும், நடுத்தோல் (mesocarp) மஞ்சள் நிறத் துடனும்,சதைப்பற்றுடனும், உள்தோல் (endocarp) மெல்லியதாகவும் கடினமாகவுமிருக்கும். உள்தோலைப் பார்ச்மென்ட் (parchment) என்று கூறுவதுண்டு. ஒவ்வொரு களியிலும் 8 பச்சை காஃபி செடி 331 நிறப் பழுப்பு விதைகளுண்டு. ஆனால் பீபெர்ரி (pea - berry) வகையில் ஒரே விதை காணப்படும். இதற்குக் காரணம் சூல் கருத்தரிக்காமல் போவதே யாகும். ஒவ்வொரு விதையையும் மூடியபடி ஒரு மெல்லிய விதையுறையுண்டு. இதை வெள்ளித்தோல் (silver skin) என்பர். விதையின் பெரும்பகுதி முளை சூழ் திசுவைக் கொண்டிருக்கும். ஏறக்குறைய ஆயிரம் உலர்ந்த விதைகள் 0.5 கி.கி எடையிருக்கும். 5-6 கி.கி காஃபி பழத்திலிருந்து 1கி.கி விதை கிடைக்கும். பதப்படுத்துதல் பழுத்த கனிகளிலிருந்து தூய காஃபி விதைகளை உலர்முறை ஈரம் அல்லது கழுவுமுறை ஆகிய இருமுறைகளால் பிரித்தெடுக்கலாம். உலர்முறை. இது பழமையான, எளிய ஆனால் நீண்டகாலம் தேவைப்படும் முறையாகும். இது ஆஃப்ரிக்கா போன்ற நீர் பற்றாக்குறையுள்ள நாடுகளில் கையாளப்படுகிறது. கனிகள் சிமென்ட் தரையில் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கப்படு கின்றன. நன்றாகக் காய்ந்தவுடன் காய்களை மூட்டைகளில் கட்டிக் கிடங்குகளில் வைப்பர். சில சமயங்களில் கைகளாலோ எந்திரங்கள் மூலமோ தோலுரிக்கப்படும். ஈரவகை. காஃபி செர்ரிகளை, நீரோடு கூடிய பெரிய தொட்டிகளில் ஊற வைப்பர். நன்றாக விளைந்த தரமான பழங்கள் நீரில் மூழ்க, தரக் குறைவான பழங்கள், குச்சிகள், இலைகள், குப்பை முதலியவை நீரின் மேல் மிதக்கும். அவற்றை நீக்கி விட்டுப் பழங்களைத் தோலுரித்தல், புளித்தல்,காய வைத்தல் போன்ற நேர்த்திகளுக்கு உட்படுத்துவர். கனி மேல் தோலை எந்திரங்கள் மூலம் நீக்குவர். அதன் பிறகும் விதைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தோலை நீரில் 12-24 மணி நேரம் புளிக்க வைத்து நீக்குவர். நொதிகள் அல்லது 2% சோடியம் ஹைட்ராக்சைடு போன்ற பொருள்களைச் சேர்த்துத் தோலுரித்தலை விரைவுபடுத்துவதுமுண்டு. விதைகள், பாய்கள் அல்லது தட்டுகளில் காயவைக்கப்படும். பார்ச்மென்ட்டும் எந்திரங்கள் மூலம் வெள்ளித் தோலும் நீக்கப்பட்டு விதைகள் மெருகேற்றப்படும். விதைகளில் 12% ஈரப்பசை இருக்கவேண்டும்.பார்ச் மண்டால் மூடப்பட்ட விதைகளை மித காஃபி (mild coffee) அல்லது பார்ச்மெண்ட் காஃபி என்பர். இதுவே சிறந்த வகைக் காஃபி ஆகும். மெருகேற்றப்பட்ட காஃபி விதைகள் 260° வெப்பத்தில் ஐந்து நிமிடம் வறுக்கப்படுவதால் காஃபிக்குரிய மணம் பெருகுகிறது. இம்மணத்திற்குக் காரணம் காஃபியால் (caffieol) எனப்படும் ஆவியாக மாறும் எண்ணெயேயாகும். புத்துணர்வூட்டும்