பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 காஃபி செடி

332 காஃபி செடி பொருளான கேஃபின் (caffein) எனப்படும் அல்கலாய்டு, காஃபியோட்டானிக் அமிலத்திலிருந்து வறுக்கும்போது பிரியும் வேதிப் பொருளாகும். காஃபிக் கொட்டைகளைத் தக்க கரிமக் கரைப்பாளி. லிட்டுக் கேஃபின் நீக்கிய காஃபி தயாரிக்கப்படுகிறது. உட்கூட்டுப்பொருள். உலர்ந்த காஃபி விதையி பொருள்களாவன: லுள்ள ஈரப்பசை 12% புரோட்டீன் 13% கொழுப்பு 12% சர்க்கரை 9% கேஃபின் 1-1.5% காஃபியோட்டானிக் அமிலம் 9% நார் 35% சாம்பல் சத்து 4%. பிற பொருள்கள் 5%, விதையிலும் இலையிலும் அடினைன், சாந்தைன், குயினின் போன்ற முக்கிய கரிமப் பொருள்களுண்டு. பயன்கள். இந்தோனேஷியா, மலேசியா முதலிய நாடுகளில் காய வைத்த காஃபி லைகளிலிருந்தும்' அரேபியாவில் காஃபி கஷாயம் தயாரிப்பதுண்டு. காயவைத்த காஃபி கூழிலிருந்து சாராயம் தயாரிக்கப் படுகிறது. இந்தியாவில் காஃபியின் தோல் உள்தோல் முதலியவற்றை உரமாகவும், கால்நடைத் தீவனமாக வும் பயன்படுத்துவர். காஃபிக்கொட்டையிலிருந்து காஃபிலைட் எனப்படும் நெகிழி (plastic) தயாரிக்கப் படுகிறது. காஃபி சாகுபடி நிலமண் - தட்ப வெப்பநிலை. இப்பயிருக்கு நிலமண் சற்று அமிலத்தன்மை (pH 6-6.5) வாய்ந்த வளமான நைட்ர அதிகமான ஈரத்தைத் தேக்கி வைக்கும் தன்மை வாய்ந்த காட்டுமண் சிறந்தது. இதன் விளைவிற்கு ஆண்டுக்கு 1500-2000 மி மீ. வரை மழை கிடைக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் வரை ரோபஸ்டா வகையும், 800-1800 மீட்டர் வரையில் அராபிக்கா வகையும் பயிரிடப்படு கின்றன. செடிகளின் வளர்ச்சிக்கு நிலச்சரிவின் கிழக்குச்சரிவும் வடக்குச் சரிவும் ஏற்றவை. காஃபி செடிக்குப் போதிய நிழல் வேண்டுமாதலால் கலியாண முருங்கை மரங்களையும், சில்வர் மரங்களையும் 12 மீட்டர் இடைவெளியில் காஃபித் தோட்டங்களில் நடவேண்டும். ஒக் நாற்றங்கால். பூச்சி, பூசண நோய்களால் தாக்கப் படாத தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து நில மட்டத்திலிருந்து 15-20 செ.மீ. உயரத்தில், 6XL மீட்டர் பாத்திகள் தயாரித்து விதைக்க வேண்டும். பாத்திகளில் கானல் மண், மட்கிய தொழுஉரம் சமமாகக்கலந்து ட வேண்டும். இவ்வாறு அமைத்த பாத்திகள் ஒவ்வொன்றிலும் 7500 விதைகள் 2.5 செ.மீ. இடைவெளியில் நடலாம். பாத்திகளில் மணல் இடுவதால் வடிகால் வசதி கிடை டைக்கும். விதைத்த விதைகளை இலேசாக மணலால் பின்பு 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் பரப்பி, பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்தவுடன் வைக்கோலை அகற்றவேண்டும். கானல்மண், மட்கிய தொழு உரம், மணல் ஆகி ஆகிய வற்றை 6:2:1 என்னும் விகிதத்தில் கலந்து சிறிய மூடி பாலித்தீன் பைகளில் கெட்டியாக நிரப்பிக்கொள்ள வேண்டும். முளைத்த விதைகளின் ஆணிவேரைக் கிள்ளி, பாலித்தீன் பைகளில் நடவேண்டும். இவ்வாறு நடப்பட்ட பைகளை 11×1 மீ உள்ள படுக்கை களில் அடுக்கித் தேவையான இடத்தில் வைத்தல் வேண்டும். தேவைக்கேற்பப் பூவாளியால் செடி களுக்கு நீர் ஊற்ற வேண்டும். கள L 1500 நாற்று நடுதல். மழை கிடைத்தவுடன் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் 45 × 45 × 45 செ.மீ. அளவுள்ள குழிகளைத் தோண்டி ஆறவிட வேண்டும். செடிகளுக்கு இடையே உள்ள தொலைவு, செடியின் வகை, மண் நிலத்தின் சரிவு ஆகிய வற்றைப் பொறுத்து அமையும். அராபிக்கா வலக யானால் ஹெக்டேருக்கு 2500 செடிகளும், ரோபஸ்டா வகையானால் ஹெக்டேருக்கு செடிகளும் நடுதல் வேண்டும். ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு குழியிலும் 250 கிராம் ராக் பாஸ்ஃபேட் உரம் உள்ள போட்டு, சுற்றிலும் மண்ணைக் கொண்டு நிலமட்டத்திற்கு மேல் கோபுர மூடி வைக்க வேண்டும். ஆகஸ்ட் அல்லது மாதத்தில் போதிய மழை கிடைத்த வுடன் செடிகளைக் குழிகளில் நடவு செய்தல் மாசு செப்டம்பர் 500 வேண்டும். செடிகள் நடவு செய்வதற்குமுன் 1% போர்டோ கலவையை அவற்றின் மீது தெளிப்பதால் துரு நோய்த் தடுப்பு ஏற்படுகிறது. செடிகளை நட்ட பின் இளஞ்செடிகளைச் சுற்றிக் காய்ந்த இலைச் சருகுகளால் மூட வேண்டும். நிழல் அமைத்தல். இளஞ் செடிகளைப் பாது காக்க 180 செ.மீ. உயரமுள்ள முருங்கைப்போத்து களை 15×30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். தை ஜூன் மாதத்தில் ஹெட்டேருக்கு 500-750 வரை நடலாம். பிப்ரவரி மாதத்தில் கலியாண முருங்கைக் கட்டைகளுக்குச் சுண்ணாம்புப் பூச வேண்டும். மேலும் நன்றாக வளர்ந்த மரங்களைக் கவாத்துச் செய்ய வேண்டும். கலியாண முருங்கை வளராத நிலங்களில் சவுக்குக் கன்றுகளை 3×36. டைவெளியில் நடுதல் வேண்டும். இளஞ்செடிகள் நட்ட ஒரு மாதத்தில் புதிய கொழுந்துவிட்ட பிறகு அவற்றைச் சுற்றி மண்ணைக் கிளறிவிட்டுச் செடி ஒன்றுக்கு 30 கிராம் வீதம் அம்மோனியம் பாஸ்ஃ பேட் உரம் இட வேண்டும். கோடைக் காலத்தில் இளஞ்செடிகளுக்கு மிகுதியான நிழல் அமைத்தல் வேண்டும். ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை உரமிட வேண்டும். முதல் ஆண்டு நைட்ரஜன், பொட் டாசியம், பாஸ்ஃபரஸ் சத்துகள் 50:50:50 என்னும் அளவிலும், இரண்டு மூன்றாம் ஆண்டுகளில் என்னும் அளவிலும், நான்காம் ஆண்டு 90:90:90 என்னும் அளவிலும் உரமிடுதல் வேண்டும். 67.5:67.5:67.5 மட்டம் போடுதல். அராபிக்கா செடிகளை நட்ட ஓர் ஆண்டில் 75 செ.மீ. உயரத்தில் கணுவின் மத்தி