334 காம்ப்ட்டன், ஆர்தர் ஹோலி
334 காம்ப்ட்டன், ஆர்தர் ஹோலி காம்ப்ட்டன், ஆர்தர் ஹோலி க இவர் ஓர் அமெரிக்க அறிவியலார் இவர் பெயரால் வழங்கும் காம்ப்ட்டன் விளைவு என்னும் கண்டு பிடிப்பு, குவாண்ட்டம் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் ஓர் அழுத்தமான சான்றாக உள்ளது. அதற்காக இயற்பியலுக்கான 1927 ஆம் ஆண்டு நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மாக்ஸ் பிளாங்க் என்னும் ஜெர்மானிய இயற்பிய லார். பொருள், ஒளியையும் வெப்பத்தையும் தொடர்ச்சியாக உமிழ்வதில்லையென்றும், தனித் தனித் துணுக்குகளாக (குவாண்ட்டங்களாக) வீசி வெளிப்படுத்துகிறது என்றும் விளக்கும் ஒரு கோட் பாட்டை 1900 ஆம் ஆண்டு உருவாக்கினார். 1911 ல் எர்னஸ்ட் ரூதர் போர்டு என்னும் பிரிட்டானிய இயற்பியலார் ஓர் அணுப்படிமத்தை அறிமுகப்படுத்தி னார். சூரியனைச் சுற்றியவாறு கோள்கள் இயங்கிக் கொண்டிருப்பது போன்று, நேர்மின்னேற்றங் கொண்ட சுமை மிக்க புரோட்டானைச் சுற்றி எதிர் மின்னேற்றங்கொண்ட எலெக்ட்ரான்கள் தமக்கென வகுத்துக் கொண்ட வழிகளில் இயங்கிக் கொண் டுள்ளன எனக் கொள்ளப்பட்டது. ஆனால். அக்கோட் பாட்டைப் பழமை அறிவியலின் அடிப்படையில் அமைந்த மின்னியக்கவியலால் (electrodynamic theory) விளக்க முடியவில்லை. நீல்ஸ் போர் என்னும் டென்மார்க் நாட்டு இயற்பியலார் 1913 ஆம் ஆண்டில் பிளாங்க்கின் குவாண்ட்டம் கோட்பாட்டின் அடிப்படையில் ரூதர் போர்டின் அணுப்படிமத்தை விளக்குவதில் வெற்றி கண்டார். ஆனாலும், நீல்ஸ் போர் தம் கொள்கை யில் பல்வேறு கருத்துகளையும் கருதுகோள்களையும் படைத்துக் கொண்டு பேசுவது அறிவியலாருக்குக் குழப்பத்தைத் தந்தது. குவாண்ட்டம் உண்மையிலேயே ஒன்று உள்ளதா அல்லது யற்பியலார்தம் கற்பனைக்கு வாய்ப்பாகக் கொடுக் ன்று அது கப்பட்ட உருவமா என்பன போன்ற கேள்விகளுக்குக் காம்ப்ட்டனின் முதல் ஆய்வுகளின் பெரும் பகுதி தொடர்புடையதாகத் தெரியவில்லை. காம்ப்ட்டன் விளைவு, ஒளியின் துகள் தன்மையைக் குவாண்ட்டம் கோட்பாட்டியியலாக நிறுவுவதற்கான இன்றியமை யாத ஒன்றாகக் கொள்ளப்பட்டது. காம்ப்ட்டன் 1920 இல் குறைந்த அணு எடை கொண்ட பொருள்களில் எக்ஸ் கதிரைச் செலுத்திய போது அது வியத்தகு முறையில் நடந்து கொள் வதைக் கண்டார். அப்பொருள்களில் சென்று படும் கதிர்களில் பெரும்பகுதி சிதறுவதோடு அமைந்தன. ஆனால் பொருளிலிருந்து வெளிப்படும் இரண்டாம் நிலைக் கதிர்கள் (secondary radiation) பொருளில் பட்ட கதிரிலிருந்து (primary radiation) பெரிதும் மாறுபட்டிருந்தன. மிகு நீளமான அலைகளைக் கொண்டிருந்தன. இதை எக்ஸ் கதிர் ஃபோட்டான் ஒவ்வொன்றும் பொருளிலிலுள்ள ஓர் எலெக்ட்ரா னுடன் மோதி, தன் ஆற்றலின் ஒரு பகுதியை அதற்கு மாற்றிப் பின் எஞ்சியுள்ள குறைந்த ஆற்றலுடன் மிகு அளவு அலை நீளங்கொண்ட கதிராகச் சிதறுகிறது எனவும், மோதுண்ட எலெக்ட்ரான் பின்னுதைந்து இயங்குகிறது எனவும் காம்ப்ட்டன் விளக்கினார். இங்கிலாந்தைச் சேர்ந்த வில்சன் பின்னுதைந்து இயங்கும் இந்த எலெக்ட்ரான்களைக் கண்டுபிடித்தார். காம்ப்ட்டனின் விளக்கம் உண்மை யென நிறுவப்பட்டது. குவாண்ட்டம் கோட்பாட் டிற்கு ஓர் உறுதியான மெய்ப்புக் கிடைத்தது. எக்ஸ் கதிரைப் பயன்படுத்திப் பின்னாளில் காம்ப்ட்டன் அணுவில் எலெக்ட்ரான்கள் விரவப் பெற்றிருக்கும் நிலையைக் கண்டுபிடிக்க ஒரு முறையையும் உருவாக்கினார். 1930 ல் அண்டக் கதிர்கள் பற்றிச் சிறப்பாக ஆய்ந்தார். காம்ப்ட்டன் அமெரிக்க நாட்டு ஓகியோ மாநிலத்தில் வூஸ்டன் என்னும் இடத்தில் பிறந்தார். அவர்தம் வீட்டுச்சூழல் அறிவியலாருக்கு வேண்டிய பின்னணியை உருவாக்கித் தந்தது. அவர் தந்தையார் பிரிஸ்பிடீரியன் கோவில் பாதிரியராகப் பணிபுரிந்து வந்தார். காம்ப்ட்டன் வூஸ்டர் கல்லூரியில் பயின்று 1916இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதன் முதலாக அணுக்கருத் தொடர் வினையை உண்டாக்குவதிலும் முதல் அணுகுண்டை உருவாக்கிய மான்ஹாட்டன் திட்டத்திலும் சிறந்த முறையில் செயல்பட்டார். அதன் பின்னர் அமெரிக்க அரசின் பரிந்துரையாளராகத் (1945-53) தூய லூயி வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பணிபுரிந்தார். காம்ப்ட்டன் 1962 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாள் பெர்க்லி என்னு மிடத்தில் இறந்தார். சு.மகாதேவன்