பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 காமமூட்டி

340 காமமூட்டி வூ என்பார் வெவ்வேறு சிதறவைக்கும் பொருள் களைப் பயன்படுத்தி, அலைநீள மாற்றம் சிதற வைக்கும் பொருளின் தன்மையைப் பொறுத்திருக்க வில்லை எனக் காட்டினார். ஆனால் சிதறவைக்கும் பொருளின் அணு எண் மிகும்போது அலை நீள மாற்றமடைந்த கதிர்களின் செறிவு குறைந்து அவை நீள மாற்றமடையாத கதிர்களின் செறிவு அதி கரித்தது. எடுத்துக்காட்டாக லிதியத்தால் சிதறிய கதிர்கள் முழுதும் அலை நீள மாற்றமடைந்திருந்தன. வெள்ளியால் சிதறிய கதிர்களில் அலைநீள மாற்றமே காணப்படவில்லை. காம்ப்ட்டன் தன் கொள்கையை அறிவித்த உடனேயே வில்சன் தன் முகிற் கலத்தின் மூலம் காம்ப்ட்டன் எலெக்ட்ரான்கள் இருப்பதை மெய்ப் பித்துக் காட்டினார். அவை பெரும்பாலும் படு கதிரின் திசையிலேயே பின்னிட்டிருந்தன. படுகதிரின் அலை நீளம் குறைந்தபோது அவற்றின் தடங்களின் நீளம் மிகுதியாயிருந்தது; அவற்றின் எண்ணிக்கையும் மிகுதி யாயிற்று. படுகதிரின் திசையிலிருந்து மிகு அளவு விலகியிருந்த பின்னிடு எலெக்ட்ரான்களின் தடங்கள் குறைந்த நீளமுள்ளவையாயிருந்தன. இவற்றைக் காம்ப்ட்டன் கொள்கை ஊகித்துக் கூறியுள்ளது. போதே, கெய்கர் ஆகியோர் சிதறல் ஃபோட் டானும், பின்னிடு எலெக்ட்ரானும் ஒரே சமயத்தில் தோன்றுவதை மெய்ப்பித்தனர். காம்ப்ட்டன் சைமன் ஆகியோர் 0. p ஆகியவற்றுக்கிடையிலான உறவு காம்ப்ட்டன் கொள்கையின்படியே அமைந்திருப்பதை மெய்ப்பித்தனர். வில்சன், காம்ப்ட்டன் போதே ஆகியோரும் வேறு பலரும் எலெக்ட்ரானின் ஆற்றலைக் கணக்கிட்டு அது காம்ப்ட்டன் கொள்கையின்படியே உள்ளதைக் கண்டனர். சைமன், பின்னிடு கே.என். ராமச்சந்திரன் நூலோதி, F. Bueche, Principles of Physics, Fourth Edition, Mc-Graw Hill International Book Company. Singapore, 1984. காமமூட்டி காம உணர்வைத் தட்டி எழுப்பிப் பாலுறுப்புகளின் இயக்கத்தை ஊக்குவித்துக் காமச் செயலை வேகப் படுத்தும் பொருள்களைக் காமமூட்டிகள் எனலாம். கிரேக்கர்களின் காதல் தெய்வமகளான அஃப்ரோ டைட்டின் (aphrodite) பெயரைத்தழுவி இதை அஃப் ரோடியாசிக் (aphrodiasic) எனக் குறிப்பிடுவர். இனப் பெருக்கத்துக்கு அடிப்படையான காமம் வாழ்வின் ஒரு முக்கிய கூறாகும். இளமையில் காமத் துடன் அலைந்து திரிந்து நடுத்தர வயதில் காம உணர்வு குன்றிப் போவதால் காமமூட்டிகளைப் பலர் நாடுகின்றனர். காம் உணர்வின் அடிப்படை. பாலுறுப்புகளை மூளை தண்டுவடம் -நரம்புகள் அடங்கிய நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பிகள் சிலவற்றி லிருந்து வரும் ஹார்மோன்களும் கட்டுப்படுத்து கின்றன. பாலுறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை விரித்து, அவற்றுள் பாயும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதும் அப்பகுதிகளில் சுரக்கும் சில திரவங்களைப் பெருக்குவதும் காமச் செயலுக்கு அடிப்படையான நிகழ்ச்சிகளாகும். இவ்வுண்மை களின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான மூட்டி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. காம நலிவு காமமூட்டும் பொருளாகப் பரவலாகக் கையாளப் பெறும் கள், சாராய வகை மனக்கட்டுப்பாட்டைத் தளர்த்தி, உள்ளக் கிளர்ச்சியை எழுப்பிக் காம ணர்வை மிகச் செய்தாலும் காமச் செயலைத் தளர்த்தி விடும். LSD போன்ற போதைப் பொருள் களும் காமமூட்ட வல்லவையாயிருப்பினும் நாள் டைவில் மருந்தடிமைப் பழக்கம், நரம்பு போன்ற வேண்டா விளைவுகளைப் பெருக்கி வாழ் வையே அழித்து விடும். ஆம்ஃபிட்டமின், கோகெய்ன் போன்ற மருந்துகளும் காமமூட்டிகளாகப் பயன்படு கின்றன. குறிப்பாகக் கோகெய்ன் மகளிரிடையே காமவுணர்வை எழுப்பவல்லதாகக் கருதப்படுகிறது. அபின் முதலான அல்க்கலாய்டுகளும் இவ்வகையைச் சார்வனவே. இரத்தக் குழாய்களை விரிய வைக்கும் அமைல் நைட்ரேட் எனும் மருந்தும் காமமூட்டியாகப் பயன் படுகிறது. ஆனால் இம்மருந்து பாலுறுப்புகளுக்கும் மூளைப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை மிகச் செய்வதால் தலைவலி ஏற்பட காம உணர்வே அடங் கிவிடக் கூடும். வெங்காயம், பூண்டு, முருங்கைக் காய் ஆகியவை காமமூட்டிகளாகக் கருதப்படுகின்றன. ஆஃப்ரிக்காவில் வளரும் யோகிம்பின் மரத்திலிருந்து கிடைக்கும் யோகிம்பின் எனும் மருந்து காமமூட்டி களிலேயே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இம்மருந்துகளால் காமவுணர்வைப் பெருக்க முயல்வதைவிடச் சில நாள் வரையாவது காமச் செயல்களில் ஈடுபடாமல் பாலுறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, மன அமைதி தரும் மருந்துகளையும் அளவோடு உட்கொண்டு அமைதி காத்தால் காம வுணர்வு மீண்டும் பெருகுவதோடு பாலுறுப்புகளும் மீண்டும் பணியாற்றும் திறன் பெற்றுக் காமச் செயல் வலிமை பெற வாய்ப்புண்டு. எக்குறையுமில்லாத, நல்ல காமமூட்டி மருந்துகளைக் கண்டுபிடிப்பதற் கான ஆய்வு மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே நடந்து வந்தாலும் இத்தகைய மருந்து எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. -கா.லோக முத்துக்கிருஷ்ணன்