காமாக் கதிர்கள் 341
காமன் சிறுகோள் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்திற்குள் பயணம் செய்யும் சிறிய கோளே காமன் (pros) ஆகும். சூரியனைச் சுற்றி வரும்போது சில நேரங்களில் இது புவிக்கு அருகில் 23 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வருகிறது. இது புவிக்கு அருகில் வரும் செயல் 31 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இறுதியாக 1975 ஆம் ஆண்டு புவிக்கு அருகில் கில் வந்தது. அடுத்து 2006 ஆம் ஆண்டு புவியின் அருகி தோன்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், பெரும் கோள்களின் இயக்கத்தால் ஏற்படும் தடுமாற்றத்தால் புவிக்கு அருகில் வரும் காலம் 15 ஆண்டு வரை தாமதமடைகிறது. இக் கோள் 1898 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நாள் கார்ல் கஸ்டவு விட் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்டது. 13ஆம் இச்சிறுகோள் ஒரு கால்பந்து போன்ற அமைப்பு டையதாகும். தனுடைய ஆரம் 7 கிலோ மீட்டர் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருவதற்கு 642 நாளாகிறது. இதனுடைய சுற்று வட்டப் பாதையில் சூரியனுக்கு அண்மையில் உள்ள புள்ளி 171 மில்லியன் கி.மீ. தொலைவிலும், சேய்மையில் உள்ள புள்ளி 206 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன. இதன் சுற்றுவட்டப்பாதை ஒரு தட்டை யான நீள்வட்டமானது (ellipse) ஆகும். இது புவியின் சுற்று வட்டப் பாதையை 108 கோண அளவில் வெட்டுகிறது. ரேடார் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு இச்சிறுகோளைப் பயன்படுத்தி வானியல் அலகைக் (புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு) கணக்கிட்டனர். காமாக்கதிர்கள் முறை பெ. வடிவேல் அணு எடை 206க்கு மேற்கொண்ட கனிமங்கள் தன்னிச்சையாக வெளிவிடும் மூவகைக் கதிர்களுள் ஒன்று காமாக் கதிராகும். ஹென்றி பெக்கொரல் என்பார் 1896 இல் இவ்வகைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக 1899 ஆம் ஆண்டில் யுரேனியத் திலிருந்து வரும் கதிர்வீச்சுகளில், காற்றில் மட்டும் சில செ. மீ செல்லக்கூடிய ஆல்ஃபாக்கதிர்கள் மற்றும் பல மில்லி மீட்டர் தடிமனான அலுமினியத்தை ஊடுருவும் அளவுக்கு ஆற்றல் உள்ள பீட்டாக் கதிர் கள் என்னும் இரு வகைக் கதிர்கள் இருப்பதை ரூதர் ஃபோர்டு கண்டுபிடித்தார். பின்பு 1900 ஆம் ஆண்டில் வில்லார்டு ( P. Villard) என்னும் ஃபிரெஞ்சு அறிஞர் மிகுந்த ஊடுருவும் ஆற்றல் பெற்ற மூன்றாம் வகைக் காமக்கதிர்கள் 341 கதிர்வீச்சு ஒன்று ரேடியத்திலிருந்து வருவதைக் கண்டுபிடித்தார். இக்கதிர்கள் காமாக் கதிர்கள் எனப் பெயரிடப்பட்டன. கதிரியக்கத் தனிமம் ஒன்று வெளிவிடும் கதிர் களைக் காந்தப் புலம் ஒன்றிற்கு உள்ளாக்கி, கியூரி அம்மையாரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காமாக்கதிர்கள் வலிமை மிக்க காந்தப் புலங்களாலும் விலக்கப்படுவதில்வை என அறிவுறுத்தின. எனவே. அவை மின்னூட்டமற்றவை என அறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காமாக் கதிர்கள் மின்னூட்டமோ, நிறையோ அற்ற மின் காந்தக் கதிர்களே எனவும் துகள் பண்பு அற்றவை எனவும் உணர்த்தின. ஆயினும் அவை மிக வன் எக்ஸ் கதிர்களையும்விட மிகக் குறைந்த அலை நீளங் களைக் கொண்டுள்ளன. காமாக்கதிருக்கு மின்னூட்டமோ, நிறையோ இல்லாமையால் அதை வெளிவிடும் கனிமத்தில் அணு மாற்றம் ஏற்படாது: ஆற்றல் மட்டுமே வெளிப்படும். எனவே, காமாக் கதிர்களின் வெளியீட்டால் புதிய கனிமம் எதுவும் உருவாவதில்லை. வழக்கில் ஆல்ஃபா அல்லது பீட்டாக் கதிர்வீச்சைத் தொடர்ந்தேகாமாக் கதிர்கள் தோன்றுகின்றன என்பது அறியப் பட்டுள்ளது. அலை காமாக்கதிர்கள், எக்ஸ் கதிர்களைப் போல் மின் காந்தக் கதிர்வீச்சாக இருப்பின் படிகங்களை விளிம்பு விளைவுக் கீற்றணியாகப் (diffraction grating) பயன் படுத்தி அவற்றின் நீளங்களை அளவிட முடியும் எனக் கருதலாம். ஆனால், இங்கு இரு இடர்ப்பாடுகள் உள்ளன. அவை காமாக் கதிர்களின் மிகக் குறைந்த அலைநீளங்களின் காரணமாகச் சில பாகைகள் அளவேயுள்ள மிகச் சிறிய சாய் கோணங் களை அளவிடுவதில் உள்ள சிக்கல்கள்; படிகத்தளங் களில்லாது தனித்தனி அணுக்களுக்கு இடையே ஏற் படும் குறைந்த அளவு சிதறல் ஆகியவையாகும். ஆயினும் ரூதர்ஃபோர்டு, ஆண்ட்டி ரேடு, திபாடு. ஃப்ரில்வி ஆகியோர் RaB, RaC ஆகியவை வெளி விடும் காமாக் கதிர்களின் அலைநீளங்களை விடுவதில் வெற்றி கண்டனர். அள மிகக் குறைந்த அலை நீளங்களைக் கொண்ட காமாக் கதிர்களைப் பொறுத்தவரையில் படிகம், விளிம்பு விலகலை ஏற்படுத்த முடியாத அளவுக்குப் பண்பு நயமற்றதாக அமைகிறது. எனவே. காமாக் கதிர்களுக்கும் பொருளுக்குமிடையே ஏற்படும் இடை யீட்டால் (interaction) உண்டாக்கப்படும் இரண்டாம் நிலை எலெக்ட்ரான்களின் ஆற்றல் அளவீட்டை அடிப்படையாகக் கொண்ட மறைமுக முறைகளே காமக்கதிர்களின் அலை நீளங்களை அளவிடப் பயன் படுகின்றன. றன. அம்முறைகளாவன: உள்ளிடமாற்ற எலெக்ட்ரான் முறை (internal con- version electron method). இம்முறை உள்ளிட மாற்ற