பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 காமாக்கதிர்‌ நிரலியல்‌ அளவி

344 காமாக்கதிர் நிரலியல் அளவி R Pb Pb 0 எண்ணி வளைவு படிகம் படம் 1 R என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுதிரி யக்கப் பொருளினின்று வெளிவரும் காமாக் கதிர்கள் ஒரு காரியப் பிளவினூடே சென்று C -என்னும் பாறைப் படிகத்தின் மீது வீழ்ந்து எதிரொளிக்கப்பட்டு ஓர் ஒளிப்படத் தகட்டை அடைகிறது. காமாக்கதிர்ப் படிகத்தில் வீழ்ந்து எதிரொளிக்கும் கோணத்தை அளவிட்டு அதன் அலை நீளத்தைக் கணக்கிடலாம். இம்முறையில் ஏறக்குறைய 16×10-12 மீ அளவுள்ள அலைநீளத்தையும் கண்டுபிடிக்கலாம். மீக்குறைவான அலைநீளத்தை டூமாண்டு என்பார் 1927 ஆம் ஆண்டு வளைவுப் படிகத்தைக் கொண்டு கணக்கிட்டார். R- என்னும் மூலத்திலிருந்து வெளிப்படும் காமா கதிர் வளைவு படிகத்தின்மீது வீழ்ந்து V என்னும் இடத்தில் உருத்தோற்றத்தைத் தோற்றுவிக்கிறது. படிகத்தின் பின்னால் ஒரு கெய்கர் எண்ணி வைக்கப் பட்டு அதில் காமாக்கதிர் பெறப்படுகிறது. படிகத்தி லிருந்து எதிரொளிக்கப்பட்ட காமக்கதிர்கள் மட்டும் எண்ணியின் மீது விழுவதற்காக ஒரு காரீய இணை யாக்கி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி கொண்டு 10-15 மீ வரை காமாக்கதிரின் அலைநீளத்தை நுட்ப மாக அளக்கலாம். மூ.நா.சீனிவாசன் படம் 2 நூலோதி. Henry Semat and John R. Albright, Nuclear Physics, Chap- Introduction to Atomic and man and Hall, London. காமாக்கதிர் நிரலியல் அளவி காமாக் கதிரின் அலைநீளங்கள் எக்ஸ் கதிர்களின் அலைநீளங்களைவிட மிகக் குறைந்தவை. ஏறத்தாழ 1.004 A 0.4A வரை உள்ளன. இவற்றின் ஆற்றல் பல மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆகும். இக்கதிர்களின் அலை நீளம், ஆற்றல் ஆகிய வற்றை அளவிடும் கருவிகளுக்குக் காமாக்கதிர் நிர லியல் அளவி எனப் பெயர். பொதுவாக, காமாகதிர் களைப் பற்றி அறியப் பல நேரிடை முறைகளும் பல மறைமுக முறைகளும் நடைமுறையில் உள்ளன. நேரிடை முறைகள். படிகங்களை விளிம்பு விளைவு கீற்றணியாகப் (diffraction grating) பயன்படுத்தி எக்ஸ் கதிர்களின் அலை நீளத்தைக் கணக்கிடுதல் போல, காமாக் கதிர்களின் அலை நீளங்களையும் அளவிடலாம். ஆனால் மிகக் குறைந்த அலை நீள