பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 காமாச்சிதைவு

348 காமாச்சிதைவு X ஆகிறது. dx கந்தழிக்கு விரிகிறபடியால், 7(0) = + • Z ஒரு குறை முழு எண்ணாகவோ (negative integer) பூஜ்யமாகவோ ல்லாவிட்டால் 7^(z). y(I-z) = Sin r Z >(+2)= Cos Z y(2). (z + }) 42 y(2z) ஆகியவற்றை நிறுவலாம், மெய்யெண் p> o க்கு வரையறுக்கப்படும். Yz (P) = X (p-1) -t e dt 0 என்னும் வாய்பாடு முடிவுபெறாத காமாச் சார்பு எனப்படும். காமாச் சார்பைக் கொண்டு பீட்டாச் சார்பை (3. function) 8 (m, n) = எனக் கணக்கிடலாம். (m). ஒ (n) 7. (m+n) பொதுவாக, கணக்குகளின் தீர்வு முறைகளாகக் காமாச் சார்பு பயன்படுவதைவிடப் பிற சார்புகளோடு ஏற்படுத்தும் அதன் தொடர்பு மிகுதியாகப் பயன்படு கிறது. தகாத தொகைகளையும், முடிவிலாத் தொகைகளையும் எளிய முறையில் மதிப்பீடு செய்ய வும், புள்ளியியல் நிகழ்தகவு கோட்பாடு, கணித இயற்பியல், பொறியியற் கணிதம் போன்றவற்றில், வகைக்கெழு வேறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும் காமாச் சார்பு பயன்படுகிறது. காமாச்சிதைவு . பங்கஜம் கணேசன் இயற்கைக் கதிரியக்கத்தில் சில குறிப்பிட்ட தனிமங் களில் கருக்கள் தாமாகவே சிதைவுறுகின்றன. அவ் வாறு சிதைவுறும்போது, அவை ஆல்ஃபாத் துகள் களையும், பீட்டாத் துகள்களையும் வெளியிட்டு அவற்றோடு காமாக கதிர்களையும் வீசுகின்றன. ஆல்ஃபாதுகள் நேர்மின்னூட்டத்தையும் பீட்டா துகள் எதிர்மின்னூட்டத்தையும் பெற்றவை. ஆனால் காமாகதிர்கள் மின்னூட்டமற்றவை; அவை எக்ஸ் கதிர்களைப் போன்று மிகக்குறைவான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் ஆகும். எக்ஸ் கதிர் களைப் போன்றே அவை அலைப்பண்போடு துகள் பண்பும் கொண்ட ஃபோட்டான்கள் ஆகும். அவை ஃபோட்டான்கள் என்பதால் ஒளிமின் விளைவு களிலும், காம்ப்ட்டன் விளைவுகளிலும் தோன்றும் எலெக்ட்ரான்களைக் கொண்டு முடியும். அவற்றை உணர ஆல்ஃபாச் சிதைவின் போது தோன்றும் காமா கதிர்கள் குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்டவை. எனவே அவை தனித்தனி ஆற்றல் நிலைகளைக் கொண்டு அணுக்கருவின் கட்டமைப்பை விளக்குவன. இதை அணுநிரலுக்கு ஒப்பிடலாம். ரேடியம் என்னும் தனிமம் ஆல்ஃபாதுகள்களை வெளியிட்டு ரேடானாகச் சிதைவுறுகிறது. வெளி யிடப்படும் இரண்டு ஆல்ஃபாத் துகள்களில் ஒன்று 4.78 மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆற்றலும் மற்றொன்று 4.59 மி.எ.வோ. ஆற்றலும் பெற்றவை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. இவற் றோடு சேர்ந்து வெளியிடப்படும் காமாக்கதிர்வீச்சு 6.62× 10-12 மீ அலைநீளம் கொண்ட ஒரு தனி வரி நிறமாலையாகும். இதன் ஆற்றல் 0.187 மி.எ.வோ ஆகும். இது வெளியிடப்பட்ட இரு ஆல்ஃபாத்துகள் களின் ஆற்றல் அளவீடுகளின் வேறுபாட்டிற்குச் சமம். காமாகதிர்வீச்சு, ஒரு பீட்டாச்சிதைவின் போதும் நிகழலாம். ஆனால் இதனால் தோன்றும் நிரல் மிகவும் சிக்கலானது. காமாகதிர் நிரல் நுட்பவரி நிரல் (sharp line spectrum) மற்றும் தொடர் நிரல் (continuous spectrum) என இருவகைப்பட்டது, எனவே, இந்நிரலை எக்ஸ் கதிர் நிரலுக்கு ஒப்பிடலாம். ஓர் அணுக்கருத் தொகுப்பில் பல தனித்தனி ஆற்றல் நிலைகள் உள்ளன. எனவே அலைகளுக்குக் குவாண்ட்டம் எந்திரவியல் பயன்படுத்தப்பட்டு அவை தேர்வு விதிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. காமா சிதைவு ஓர் அணுக்கரு நிகழ்வாதலால், இது தேர்வு விதிகளுக்கு உட்பட்டது. இதை AI =0, +1 என்னும் சமனால் குறிப்பிடலாம். இங்கு I என்பது அணுக் கருவின் மொத்த கோண உந்தத்தைக் குறிக்கும். மூ.நா.சீனிவாசன் நூலோதி. Henry Semat and John R. Albright. Introduction io Aromic ard Nuclear Physics, Chapman and Hall, London. காய்கறிகள் அன்றாட உணவில் காய்கறிகள் பெரும் பங்கு பெறு கின்றன. பச்சைக் காய்கறிகள், கிழங்குகள், வேர்கள்,