பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய்ச்சல்‌ 349

காய்ச்சல் 349 பிற காய்கறிகள் என அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பச்சைக் காய்கறிகள். பசலைக் கீரை, கீரைத் தண்டு, புதினா, முருங்கைக்காய், கோஸ் ஆகியவை இதில் அடங்கும். இவை விலை குறைந்தவை. அடர் பச்சையாக இருந்தால் ஊட்டத்தன்மையும் மிகுதி யாக இருக்கும். இவற்றில் கரோட்டீன், ரிபோ பிளோவின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் C, K, கால்சியம் ஆகியவை காணப்படுகின்றன. இவற்றில் நிறைய நார் இருப்பதால் சிறந்த மலமிளக்கியாகப் பயன்படும். இவற்றின் ஆற்றல் குறைவாக உள்ளமை யாலும் கொள்ளளவு மிகுதியாக உள்ளமையாலும் எடையைக் குறைக்க இவை நன்கு பயன்படுகின்றன. நீண்ட நேரம் சமைப்பதும், திறந்த பாத்திரங்களில் சமைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவற்றின் ஊட்டம் பேணப்பட வேண்டும். வேர்க் கிழங்கு. இவற்றில் உருளைக்கிழங்கு, மர வள்ளிக் கிழங்கு, வெங்காயம், கேரட், முள்ளங்கி போன்றவை அடங்கும். உருளைக் கிழங்கிலும், மர வள்ளிக் கிழங்கிலும் மாவுப் பொருள் மிகுதியாக உள்ளது. இவற்றில் புரதமும், கொழுப்பும் குறை வாகவே உள்ளன. கால்சியும், பாஸ்ஃபரஸ் போன்ற கனிமங்கள் மிகுதியாக உள்ளன. உருளைக் கிழங்கில் வைட்டமின் C உள்ளது. வை அனைத்தும் உணவுக்குச் சுவையூட்டக் கூடியவை. பிற காய்கறிகள். இவற்றில் கத்தரிக்காய், தக் காளி, காலிஃபிளவர் ஆகியவை அடங்கும். இவற்றில் வைட்டமின்களும் கனிமங்களும் நிறைந்துள்ளன. - முப. கிருஷ்ணன் காய்ச்சல் உடல் நலக்குறைவிற்குக் காய்ச்சல் ஒரு முக்கிய அறி குறியாகும். காய்ச்சலோடு உடல் வலி, தலைவலி. தளர்ச்சி, சோர்வு, பசியின்மை ஆகியவையும் தோன் றும். காய்ச்சலுக்கான காரணம் விரைவில் தெரியும். சில சமயத்தில் பலநாள் சென்றும் காரணம் தெரி யாது. சிறந்த மருத்துவருக்கும் இது சிக்கலாக இருக் கும். காய்ச்சல் மிகுந்து ஆபத்தளிப்பதாக இருக்கும். நுண்ணுயிர்களின் நச்சு விளைவாகவும், கோடை வெப்பம், ஒவ்வாமை இவற்றின் காரணமாகவும் காய்ச்சல் தோன்றலாம். உடல் வெப்பம். இயல்பாக உ லின் வெப்பம் ஏறத்தாழ 37.2°C இருக்கும். இரவில் ஓய்வு எடுத்த காரணத்தால் காலையில் சற்றுக் குறைந்தும், பகல் உழைப்புக்குப் பின் மாலையில் சுற்று உயர்ந்தும் இருக்கும். தசை அணுக்கள், ஈரல் அணுக்கள் இயங் கும்போது சர்க்கரை போன்ற எரிபொருளை எரிக் கின்றன. அப்போது வெப்பம் உண்டாகிறது. இவ் வெப்பம் தோலிலிருந்து பரவுவதாலும் படிந்த வியர்வை காற்றாக மாறுவதாலும் மூச்சு வழி வெப்ப மான காற்று வெளீயேற்றப்படுவதாலும் தணிகிறது. இவற்றால் தோல் குளிர்ச்சி அடைய, இரத்த மும் குளிர உடல் வெப்பம் குறைகிறது. இறந்த பின் சூழ்நிலைக்கேற்ப உடல் வெப்பம் குறைந்துவிடும். குளிர் அல்லது வெப்பக் கருவிப் பெட்டிகளின் வெப் பத்தை ஒரே அளவில் அமைக்க வெப்பச்சீர் நிலைக் கருவி (thermostat) உண்டு. மூளையில் ஹைப்போதா லமஸ் என்னும் பகுதி வ்வாறு யங்கி உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. பல காரணங்களால் உடல் வெப்பநிலையைத் தாலமஸ் மாற்றி அமைக்கிறது. வெப்பம் மிகும் போது, காய்ச்சலும் குறையும். வெப்ப மிகுஉயர்வின் போது மிகு காயச்சல் உண்டாகும். ஹைபோதாலமஸ் இவ்வாறு இயங்கச் சில தானியங்கி நரம்புகள் உள்ளன. இவற்றின் வழியாகத் தசை நார்கள் சுருக்கம், வியர்வைப் ரத்த நாளச் சுருக்கம், பெருக்கம் ஆகியவை நிலைமைக்கேற்ப உண்டாகின்றன. உடல் வெப்பத்தை உயர்த்தக் கூடிய காரணங்கள் பலவாகும். . உடலின் இயல்பான பல நிகழ்ச்சிகளுக்கும் ஓரளவு வெப்பம் வேண்டும். நுண்ணுயிர்களினால் உண்டான நோயைப் போக்க காய்ச்சல், உ ல் தடுப்பு ஆற்றல்களுக்கு உதவுகிறது. எனவே, காய்ச் சல் அளவோடு உள்ள நிலையில், அதனால் வலி போன்ற துன்பங்கள் அதிகமில்லையேல் போக்க வேண்டியதில்லை. அதுவே மிகும்போது பல கேடுகள் விளையும். எனவே குறைத்துக் கொள்ள வேண்டும். தலை உயர் காய்ச்சலின் அளவைக் கொண்டு குறைந்த அளவு காய்ச்சல் (எ.கா. நீர்க்கோப்பு), மிகு அளவான காய்ச்சல் (எ.கா. மலேரியா), மிக விரைவாக வது (எ.கா. மலேரியா அல்லது நியுமோனியா), படிப்படியாக உயர்வது (எ. கா. டைஃபாய்டு) எனக் காய்ச்சலை வகைப்படுத்தலாம். விடாத காய்ச்சல். சற்றே குறைத்தும் உயர்ந்தும் அமையலாம். டைஃபாய்டு போல் அல்லது தாறு மாறாகக் குறைந்தும் உயர்ந்தும் எங்கோ சீழ்பிடித்த நச்சுக் காய்ச்சல் போல் அமையலாம். விட்டு விட்டு வரும் காய்ச்சலை முறைக்காய்ச்சல் என்பர். இதற்கு மலேரியா காய்ச்சல் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஒரு நாள் விட்டு ஒருநாள் அல்லது இரு நாள் இடைவெளி விட்டு வரலாம் அல்லது நாளும் விட்டு விட்டு வரலாம். காய்ச்சலின் காரணமறிதல். காய்ச்சல் பெரும் பாலும் சிக்கலானது அன்று. காரணமறிந்து ஏற்ற மருத்துவம் அளிப்பதே சிக்கலாகும். பிற நோய்களைப் போலவே சளிக் காய்ச்சலும் அடிக்கடி நிகழும்.