352 காய்ச்சி வடித்தல்
352 காய்ச்சி வடித்தல் வதற்கும் காரணமாகலாம். மருந்தை நிறுத்தக் காய்ச் சலும் மறைந்திடும். இதையே மருந்துக் காய்ச்சல் (drug fever) என்பர். தைராய்டு சுரப்பி மிகுதியாக இயங்கும்போது, வளர்சிதை மாற்றத்தை மேலும் உயர்த்திக் காய்ச்சலை உண்டாக்கும். வேறு சில ஹார்மோன்களும் இவ்வாறு காய்ச்சலை உண்டாக் கலாம். மூளை தாக்கப்படும்போது அதன் ஒரு பகுதியான ஹைப்போதலமஸும் தாக்கப்படலாம். இதுவே உடம் பின் வெப்பநிலை நிறுத்தி (thermostat) ஆகும். நுண் ணுயிர் வழி - மூளைக்காய்ச்சல், மூளை அடிபடுதல், மூளையில் இரத்தம் கொட்டுதல், உறைதல் முதலிய காரணங்களால் இது தாக்கமடையலாம். கோடைக் காலத்தில் உடல் வெப்பம் உயரும் நிலையில் வெப்பநிலை நிறுத்தி அமைப்பு தாக்கமுற்று உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இயலாது உயந்து கொண்டே போவது கோடைக் காய்ச்சலுக்கு ஒரு முக்கிய காரணம். காய்ச்சல் 42-44°C என உயர்ந்து, மரணம் நேரிடலாம். மன அமைதி இன்மையாலும், அதிலும் எளிதில் குழந்தைப்பருவத்தில் அச்சத்தாலும் காய்ச்சல் வரலாம். ஹைப்போதலாமஸ் உடல் வெப்பத்தை உயர்த்திக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் என்பதற்குப்பல விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நுண்ணு யிர்களின் நச்சுகள், வெள்ளணுக்களைத் தாக்கு வதால் வெளிப்படும் வேதிப் பொருள்கள் ஹைப் போதலாமஸைத் தாக்குகின்றன என்றும், தாக்க முற்ற வெளிப்படும் ஹைப்போதலாமஸிலிருந்து புரோஸ்ட்டாகிளாண்டின் காய்ச்சலை உண்டாக்கும் உண்டாக்குகிறது வேதிப் பொருள்களை என்றும், ஆஸ்ப்ரின் போன்ற புரோஸ்ட்டோ உண்டாவதைத் கிளாண் 4 ன் பொருள்கள் போன்ற பொருள் தடுத்துக் காய்ச்சலைக் குறைக்கும் கருத்துக்கள் உள்ளன. date என்றும் பல கா.நடராஜன் நூலோதி. Alex C.Sonnewirth and Leonard Jarett, Gradwurhl's Clinical Laboratory methods and Diagnosis Vol - 1. Eighth Edition, C. V. Mosby Company, St Louis, 1980. காய்ச்சி வடித்தல் நீர்ம நிலையில் உள்ள ஒரு சுரிமச் சேர்மத்தைத் தூய்மைப்படுத்துவதற்குக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது. ஒரு நீர்மத்தை அதில் கரைந்துள்ள எளிதில் ஆவியாகாத பிற பொருள்களிலிருந்து பிரிப்பதற்கும், ஒரு கரைசலிலிருந்து கரைபொருளை யும் கரைப்பானையும் தனித்தனியே பிரிப்பதற்கும், ஓரளவு வேறுபாடு கொண்ட வெவ்வேறு கொதி நிலைகள் உள்ள இரண்டு நீர்மங்களைத் தனித் தனியே பிரிப்பதற்கும் இம்முறையைப் பயன்படுத்த லாம். கரைந்துள்ள பிற கனிமச் சேர்மங்களிலிருந்து தூய நீரைப் பிரிப்பதற்கும் இம்முறை பயன்படுகிறது. வடித்தல் குடுவை லீபிக் குளிர்கலம் படம் 1. காய்ச்சி வடித்தல் நீர் கொள்கலம் ஆய்வகத்தில் இம்முறையை நடத்தத் தேவையான துணைக்கருவிகள், வடித்தல் குடுவை (distillation flask ) லீபிக் குளிர்கலம் (Liebig condenser), கொள் கலம் (receiver) ஆகியவை ஆகும். இவை படம் 1 இல் காட்டியவாறு இணைக்கப்படுகின்றன. காய்ச்சி வடிக்க வேண்டிய நீர்மம் ஒரு பக்கக் குழாயுடைய வடித்தல் குடுவையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பக்சுக் குழாய்க்குச் சிறிது கீழே வெப்ப அளவியின் பாதரசம் கொண்ட அடிப்பகுதி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. நீர்மம் சூடாக்கப்படும்போது தூய நீர்மம் ஆவியாகி லீபிக் குளிர்கலம் வழியாகச் சென்று குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீர்மமாக மாறு கிறது. அது கொள்கலத்தில் சேகரிக்கப்படுகிறது. நீர்மத்தின் கொதிநிலை 140° Cக்கு மேல் இருக்கு மாயின் லீபிக் குளிர்கலத்திற்கு மாற்றாகக் காற்றுக் குளிர்கலத்தைப் (air condenser) பயன்படுத்த வேண்டும். பின்னக் காய்ச்சி வடித்தல். மிக நெருங்கிய கொதிநிலைகளைக் கொண்ட நீர்மக் கலவைகளைக் காய்ச்சி வடித்தல் முறையில் பிரிக்க இயலாது. இக்கலவைகளைப் பின்னக் காய்ச்சி வடித்தல் முறை யில் பிரிக்கலாம். இம்முறையில் பிரிகை அடுக்குகள் (fractionating column) பயன்படுகின்றன. ஒரு குடுவையில் நீர்மக் கரைசல் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அதனுடன் பிரிகை அடுக்கு இணைக்கப் பட்டு, பிரிகை அடுக்கின் மேல்பகுதியில் லீபிக் குளிர் கலம், கொள்கலம் ஆகியவை படம் 2 இல் காட்டிய வாறு இணைக்கப்பட்டுள்ளன.