பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய அரந்தி நரம்பு அழற்சி 355

முழங்கையில் ஏற்படும் காயங்களில் குழியின் அருகில் உட்பக்கமாக ஏற்படும் எலும்பு முறிவிலும் முழங்கை மூட்டை வெட்டி எடுத்துச் செய்யும் அறுவையிலும் புய எலும்பின் கீழ்ப்பகுதி முறிவிலும் காலப்போக்கில் முழங்கை வெளிநோக்கி வளைந்து வளர்வதோடு இந்நரம்பும் தாக்கம் அடையலாம். நோய்க்குறிகள். இயக்க நரம்புப் பகுதியின் தாக் கத்தால் பிளக்சார் கார்பை அல்நாரிஸ் (Flexar carpi uinaris) மணிக்கட்டு உள் பக்கமாக முன்னோக்கி மடக்க உதவும் தசையும் விரலகள் முன்னோக்கி மடக்க உதவும் தசையும் தாக்கப்பட்டு நலிவடையும். இதனால் மணிக்கட்டை மடக்கும்போது தசை நாண்கள் புலப்படுவதில்லை. முன்கையின் உட்பக்கம் மெலிவடைந்து தோன்றும். பிளக்ஸார் புரபண்டஸ், டிஜிடோரம் தசை நலிவால் சிறுவிரல், மோதிர விரல், நடுவிரல்களை நீட்டும்போது வழக்கத்திற்கு மாறான கூடுதல் நீட்சி இருக்கும். இது விரல்கை (மெட்டா கார்போ பெலாஞ்சியல்) மூட்டின் மடக்குத் தசையின் நலிவால் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் உண்டா கிறது. கைகளில் உள்ள சிறு தசைகளில் கட்டை விரலின் கீழ் உள்ள தசையும் வெளிப் பக்கத்தில் உள்ள இரண்டு புழுவடிவத் தசையும் தவிர அனைத்துத் தசையும் இயக்க ஆற்றலை இழக்கும். இதனால் விரல்களை ஒட்டிச்சேர்க்கவோ விரிக்கவோ முடிவதில்லை. இதைக் காகித ஆய்வு என்று கூறுவர். எலும்பிடைத்தசை நலிவால் (paralysis of inter osseous muscle) இது இயல்வதில்லை. மடை ஃபிரோமென்ட் நோய்க்குறி (Froment's sign). கைகளுக்கிடையே ஒரு நூலைக் கட்டை விரலால் அழுத்தமாகப் பிடிக்கும்போது தாக்க டந்த கையில் கட்டை விரலின் நுனிப்பகுதி மடங்கி, அடக்டார் பாலுசிஸ் தசை(adductor pollicis நலிவால் தாக்கம் அடையாத கட்டை விரலின் நீள்தசை உதவிக்கு வரும். உள்ளங்கையின் உ பகுதியில் காணப்படும் வளைவு மாறித் தசைகள் நலிவால் நேராகக் காணப்படும். மணிக்கட்டில் ஏற்படும் காயம் மணிக்கட்டின் சிறு எலும்பு முறிவு, அரந்தி எலும்பின் கீழ்ப் பகுதி முறிவு, வெட்டுக்காயம் இவற்றில் இந்நரம்பு தாக்கம் அடையும். நோய்க்குறிகள். இயக்க நரம்பின் தாக்கத்தால், கைகளில் உள்ள சிறு தசைகளை மேற்கூறிய நலி வுறும் உணர்ச்சிப்பகுதித் தாக்கும். உள்ளங்கைப் பகுதியில் விரல்களில் உணர்ச்சியின்மை காணப்படும். தனால் காயங்கள் உண்டாகவும் வாய்ப்புண்டு. க.8-23 அ காய அரத்தி நரம்பு அழற்சி 355 மருத்துவம். முழங்கையில் ஏற்படும் நரம்பு அழுத்தத்தை அறுவை மூலம் நரம்பை முன்பக்கம் எடுத்து வைப்பதால் குறைக்கலாம். வெட்டுப் பட்ட நரம்பை அறுவை மூலம் சேர்த்துத் தைப்ப தால் மீண்டும் வளர வாய்ப்பு உண்டு. காயம் ஆறுதல், விபத்து,ஆயுத, போர்க்காயங்கள் மற்றும் அறுவை மருத்துவரால் ஏற்படும் காயங்கள் எனப் பலவகையில் காயங்கள் ஏற்பட்டாலும் இயற்கையில் அவை ஆறிவிடுகின்றன. சளிப்படலம் நுண்ணுயிர்கள் உட்புகா வண்ணம் உடலின் வெளிப்புறத்தில் உள்ள தோல் காக்கிறது. லிஸ்டர் என்பார் தோலை ஒத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி யுள்ளார். இதனால் காயங்களின் தோலை மூடுவதை இரண்டு நிலைகளில் செய்யலாம். முதலாம் முறையில் காயங்களை ஆறவைக்க உடலியல் கூற்றுப்படி ஒவ் வோர் இதழ்களாகத் தசை, அடித்தோல், புறத் தோல் எனத் தைக்க வேண்டும். கிழிந்த நசுங்கிய காயங்களில், திசுவின் தாக்கம் அறிய முடியாமையால் இரண்டாம் முறையில் சிலநாள் கழித்து ஆறவிட லாம். இதனால் உண்டாகும் தழும்பு மிகுதியாகவும் அருவெறுப்பாகவும் தோன்றும். காயம் ஆறப் பல நாள் ஆகலாம். அப்போது தாமதித்த முதல்நிலைத் தையல், இரண்டாம் நிலைத் தையல், மாற்றுத் தோல் இவற்றால் காயங்களை மூட அவை எளிதில் ஆறும். காயங்கள் ஆறும் நிலை. காயங்கள் ஏற்பட்ட உடனே அழற்சி நோய்க் குறிகளாகிய வெப்பம். செம்மையான நிறமாற்றம், வலி, வீக்கம் இவற்றுடன் செயலற்றதன்மையும் காயப்பட்ட பகுதியில் தோன்ற லாம். காயப்பகுதியுள் முதலில் இரத்தம் சீரம் முதலியவை நிரம்பக் காயம் கெட்டிப்படும். பிறகு ஓரங்களிலிருந்து புதிய தந்துகிகள் மறுபுறத்தை நோக்கி வளர்ந்து கொக்கிபோல் தோன்றும். இவற் றுடன் நார்த்திசுச் செல்களும் வளர்ந்து புண்ணை நிரப்பக் காயம் ஆறத் தொடங்கும். மேலே தோல் செல்கள் வளர்ந்து வர நார்ச்செல் முற்றித் தழும் பாக மாறும். இது முற்றுப்பெற ஏழு நாள் முதல் ஆறு மாதம் வரை ஆகும். முழுமையாகப் பழையநிலை அடைய 2 ஆண்டுகள் கூட ஆகலாம். எலும்புக் காயங்களும் இவ்வாறே ஆறும். உணவுப்பற்றாக்குறை, புற்றுநோய், இரத்தத்தில் யூரியா உப்பு மிகைப்பு, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், இரத்தத்தில் தொற்றுநோய் காணப்படல் புற்றுநோய்களுக்குக் கொடுக்கப்படும் செல் நச்சு மருந்து, கார்டிசோன் மருந்து முதலியவை காயத்தை ஆறவிடாமல் பொதுவாகத் தடை செய்யக்கூடும். மேலும் திசுக்களில் அழுத்தம் கூடுதல், வீக்கம், இரத் தக் கட்டிகள், தொற்றுக் காயம், இரத்த ஓட்டக் குறைவு. தவறான முறையில் தைக்கப்படுதல், எக்ஸ்