356 காயல்
356 காயல் கதிர் மருத்துவம்,புற உறுப்புகள், வேற்றுப்பொருள் கள், புரை ஆகியவையும் காரணம் ஆகலாம். காயம் எளிதில் ஆற இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். முகம், தலை, விரல் காயங்கள் எளிதில் ஆறும். மாறாக முழங்காலுக்குக் கீழ் நளக எலும்பின் மேல் உள்ள காயங்கள் எளிதில் முதியோ ருக்கு ஆறுவதில்லை. காயத்தை அடுத்துள்ள திசுக் களில் ஏற்படும் அழுத்தம் இரத்த ஓட்டத்தைக் இரத்தக்கட்டு. குறைப்பதுடன், அசையாநிலை ஆகியவற்றிலும் யால் நாளத்தேங்கல், தொற்று அழுத்தத்தை மிகுதிப்படுத்தும். வைட்டமின்C காயம் ஆறுவதற்கு உறுதுணையாகும். வைட்டமின் A தோலின் புறச்செல்களாகிய எபித்தீலியம் வளரப் பெரிதும் துணை செய்யும். மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப் நூலோதி, Anthony N. Domonkos, Harry L Arnold and Richard B. Odom, Andrew's Diseases of the Skin, Seventh Edition, W. B. Saunders Com pany, Philadelphia, 1982. பாலானவை மிகையாக மாறுபடும் உவர்ப்பியத்திற்கு ஏற்றவாறு வாழும் தன்மையுடையவை. கண்டங்களுடன் தொடர்பில்லாமல் பவளப் பாறைகளுக்கே பசிபிக் உரிய பெரிய பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் பெருங்கடலில் பல வட்டத்திட்டுகள் உள்ளன. அவற் றின் நடுவில் காயல்கள் பிறைச்சந்திர வடிவாகவும். வட்ட வடிவமாகவும், நீள் வட்டமாகவும் அமைந் துள்ளன. இவை 50 - 60 மீட்டர் ஆழமுடையவை. இக்காயல்களில் உயிரினங்களும் தாவரங்களும் காணப்படுகின்றன. சுரைத் திட்டுகளும் அடித்தளமும் சமமாக இருப்ப தில்லை. வளரும் பவளங்களால் மேடுகளும் பள்ளங் களும் காணப்படும். சுண்ணாம்புச் சத்துத் துகள்களும் கூடுகளும் அவற்றின் துண்டுகளும் பரவிக் கிடக்கும். பவளப் பாறைகளிலும் வட்டப் பவளத் திட்டு உள்ள காயல்களிலும் நீர் மிகத் தெளிவாக உள்ளமையால் அவற்றில் வாழும் பலநிற உயிரினங்களை நன்றாகப் பார்க்க முடியும். ஓர் இயற்கை உயிர்க் கண்காட்சி நிலையமாகப் பவளப்பாறைக் காயல்களைக் கருத லாம். கா.பாலசுப்ரமணியன் காயல் கழிமுகத்தைக் காயல் என்றும் கூறுவர். தாமிரபரணி ஆறு கடலுடன் சேருமிடத்தில் பல காயல்கள் உள் ளன. கரையோரமாக நெடுந்தொலைவிற்குப் பரவி யிருக்கும் உப்பங்கழிக்கும், பவளப்பாறைகளுக்கும் இடை யிலுள்ள நீர்ப்பரப்பையும், நடுவில் காணப்படும் நீர்ப்பரப்பையும் காயல் எனப் புவியியல் அறிஞர் குறிக்கின்றனர். காயல்கள் குறைந்த ஆழமுடையவை. அவை வாய்க்கால்கள் வழியாக வழிந்தோடிக் கடலு டன் சேருகின்றன. அதனால் கடலின் ஓதம் காயலுக் குள்ளும் பரவுகிறது. மழைக்காலத்தில் நன்னீர்ப் பெருக்கத்தால் காயல் நீரின் உவர்ப்பியம் (salinity) குறைந்தும் மற்ற காலங்களில் கூடியுமிருக்கும். மிகு வெப்பக் காலங்களில் கால்வாய்களின் வழியாகப் பாயும் நீரைவிடக் காயல்களின் மேற்பரப்பிலிருக்கும் நீர் மிகுதியாக ஆவியாவதால் சில காயல்களில் உவர்ப்பியம் கடல் நீரைவிடக் கூடியிருக்கும். கழி முகங்களிலும். காயல்களிலும் ஒரே வகையான சூழலும் உயிரினங்களும் காணப்படும். காயல்களின் ஓரங்கள் களிமண் திட்டுக களாக அல்லது மணல் திட்டுகளாக அமையும். களிமண் திட்டுகளை அடுத்து உவர் சதுப்புநிலச் செடிகளைக் காணலாம். சில காயல்களில் மாங்குரோவ் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. காயல்களின் அடியில் மணல் அல்லது களிமண் தளங்களைக் காணலாம். ஓரங்களி லுள்ள திட்டுகளிலும், அடித்தளத்திலும், நீரிலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் பெரும் கார்க் தீவு கி.மீ. தொலைவில் உள்ளது. D ஈரான் நாட்டைச் சார்ந்த தீவாகிய கார்க் தீவு (Kharg island) வட பெர்சியன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இது புசைர் துறைமுகத்தின் வட மேற்காக 55 பதினைந்தாம் நூற்றாண்டில் டச்சு நாட்டவர் இத் தீவை வணிக நிலையமாக மாற்றி அங்கே தொழிற் சாலைகளை அமைத்தனர். அவர்களால் சில காலமே இத்தீவு பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1766 ஆம் ஆண்டில் பண்டாரே ரிக் எனும் சிறுபெர்சிய நாட்டுத் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இத்தீவு கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு நீண்ட காலமாக இத்தீவு எதற்குமே பயன்படாமலும், எவ்விதக் குடியேற்றம் இல்லாமலும் இருந்து வந்தது. ஆனால் ஈரானின் கனிம வளத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இத்தீவைப் பல்வேறு செயல்முறைகளுக்காகவும் தூய்மைப்படுத் தும் பணிக்காகவும் பயன்படுத்தத் தொடங்கினர். இத்தீவில் சல்ஃபேட் இருந்து உரங்களும், பெட்ரோலியத் துணைப்பொருள்களும் ஏற்றுமதியா கின்றன. கார்சக்காஃப் கூட்டியம் ம. அ.மோகன் உணவில் வைட்டமின் B அல்லது தயமின் குறைவால் உண்டாகும் மூளைத் தாக்கமே வெர்னிக்ஸ் நோய்.