பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்ட்டிசோன்‌ 357

கார்ட்டிசோன் 357 உலர்ந்த பெரிபெரி, வெர்னிக்ஸ் கார்சக்காஃப் கூட்டியம் என்று பல்வேறு பெயர்களால் குறிப்பிடப் படுகிறது. உணவில் வைட்டமின் B சத்துக் குறைவ தாலும். உணவு குடலில் சரியாகச் செரிமானம் ஆகாமல் வ்வைட்டமின்கள் உடலில் சேராமை யாலும், மிகுதியாக மதுபானம் அருந்துவதாலும் இந்நோய் ஏற்படுகிறது. 1881ஆம் ஆண்டு கார் வெர்னிக்ஸ் என்பார் பின்வரும் நோய்க் குறிகளை இந்நோயில் கண்டுபிடித்தார். மனநிலையில் குழப்பம், கண்விழி இயக்கமின்மை, நடையில் தடுமாற்றம், விழிநரம்பு விர்ப்பு, விழித்திரையில் இரத்த ஒழுக்கு முதலியவை முக்கிய நோய்க் குறிகளாகும். நினை வாற்றல் திரும்பி வாராமல் நாட்பட்ட மயக்க நிலை யுடையோர் மரணம் அடைவர். தயமின் கொடுக்க இந்நோய்க் குறிகள் மாறி விழியியக்கம் காணப்படும். சிலருக்குக் கண் நடுக்கம் மாறும். மூன்றில் இரண்டு பகுதி நோயாளிகளில் நடை யில் உள்ள தடுமாற்றம் மாறி இயல்பு நிலைக்கு வரலாம். மனக் குழப்பம், மயக்கம், ஆழ் உறக்கநிலை முதலியவை மாறி நினைவாற்றல் குறைவுபடத் தொடங்கும். கடந்த கால நினைவுகள் மறந்து போவ துடன், எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமின்மை, சுற்றுப்புறச் சூழ்நிலையில் மாறுதல் இன்மை இவற் றோடு இருப்பர். ஏதாவது கேட்டால் உணர்வுட ன் பதில் சொன்னாலும் பொருளோ தெளிவோ இல்லாத பதிலே கிட்டும். இந்நிலையையே கார்சக் காஃப் கூட்டியம் என்பர். இந்நிலை தனிப்பட்ட நோயாக இல்லாது வைட்டமின் B குறைவால் ஏற்படும் மூன்று நிலை மாறுதல்களில் ஒன்றாகும். இந்நிலை தோன்றிய நோயாளியிடம் மருத்துவத்தால் பயன் தோன்றத் தொடங்குவதோடு சில சமயங் களில் முற்றிலும் நலமடையவும் வாய்ப்பு உண்டு. கிளை ஆய்வு. இந்நோயைக் கண்டுபிடிக்க, பின்வரும் உடலியல் வேதியியல் ஆய்வுகள் தேவைப்படும். இரத்தத்தில் தயமின் அளவு. பைருவேட் அளவு, ஆல்ஃபர் கீட்டோகுளுடாரேட், லாக்டேட். யாக்சலேட், சிறுநீரில் வெளியேற்றப்படும் தயமின் மற்றும் தயமின் ஆக்கச் சிதைவுப் பொருள்கள் தயமின் மிகுதியாகக் கொடுத்து ஆய்தல் என்பன இவற்றுள் அடங்கும். மருத்துவம். இந்நோய் கண்டுபிடிக்கப்பட்ட உடன் மருத்துவமாக தயமினை ஊசிமூலம் 15 மி.கி என்னும் அளவில் பலநாள்களுக்கும் பின்னர்2.5-5மி. கி என்னும் அளவில் வாய்வழியாகப்பல மாதங்களுக்கும் அளித்துவர வேண்டும். மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் நூலோதி. Robert G. Petersdorf et, al., Harrt- sons Principles of Internal Medicine, Tenth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. கார்ட்டிசோன் வயிற்றுப் பகுதியின் பின்புறத்தில் சிறுநீரகங்களை ஒட்டி அமைந்துள்ள நாளமில்லாச் சுரப்பிகளான அண்ணீரகச்சுரப்பிகளின் வெளி மட்டப் பகுதியான புறணியினின்று சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்று கார்ட்டிசோன் ஆகும். இது வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்சூழலில் ஏற்படும் மாற்றங்களையும், நெருக்கடி நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவசர நிலைகளில் உடலுறுப்புகளின் இயக்கத்தில் தக்க மாற்றங்களை விளைவிக்க இது துணையாக உள்ளது. இந்நிலைகளில் உடலில் ஏற்படும் மாறுதல்களின் விளைவாக உடல் அழிந்துவிடாமல் துகாக்கிறது. மேலும் நலமாக இருப்பது போன்ற உணர்வையும் விளைவிக்கிறது. தவிர, கல்லீரல் போன்ற உறுப்பு களின் இயக்கத்தை மாற்றி இரத்தத்தில் சர்க்கரைச் சத்தின் அளவை மிகைப்படுத்தலும், புரதச் சிதைவை ஊக்குவித்தலும், கொழுப்பு சேர்தலை ஊக்கு வித்தலும் இதன் பணிகளாகும். இச்சத்து உடலி னின்று சோடியம் வெளியேறுவதைக் குறைத்துப் பொட்டாசியம், கால்சியம் ஆகியவற்றின் வெளியேற் றத்தை ஊக்குவிப்பதோடு உடலுள் நீர் தேங்கவும் வைக்கிறது. இவற்றின் கூட்டு விளைவாக இரத்த அழுத்தம் மிக வாய்ப்புண்டு. மேலும் சிலவகை இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் இது குறைக்கிறது. நுண்ணுயிர்கள் போன்றவற்றால் உடலில் விளையும் அழற்சி விளைவுகளை இது கட்டுப்படுத்தி அப்போக்கில் உடல் உறுப்புகளே அழிந்து விடாமற் காக்கிறது. இரத்தக் குழாய்களின் சுவர்களை வலிமைப்படுத்தி அவற்றினின்று நீர் கசியாமல் தடுப்பதோடு நாரிழைம வளர்ச்சியையும் இது குறைக் கிறது. இதன் ஒட்டுமொத்த விளைவாக உடலில் ஏற்படும் புண்கள் ஆறுவதையும் இது தடுத்துவிடக் கூடும். இச்சத்து உடலிற் குறைந்தால் அடிசன் நோய் எனும் நோய்நிலை ஏற்பட்டு, நோயாளி கறுத்து, மெலிந்து, உடல்நலம் குன்றுவதோடு. நோய் எதிர்ப்புத் திறனையுமிழந்து காச நோய் போன்ற வற்றுக்கு ஆளாகித் துன்புறுவர். இச்சத்து உடலில் மிகுந்தால் குஷிங்கின் நோய் எனும் நோய்நிலை ஏற்பட்டு, நோயாளி பருத்து வீங்கி, முகம் உருண்டையாகித் தோல் வெளுப்ப தோடு இரத்த அழுத்த மிகை, நீரிழிவு, எலும்பு நலிவு, முறிவு. இரைப்பைப் புண். மன நோய் போன்றவற்றால் பாதிப்படையவும் நேரிடலாம். இக்கார்ட்டிசோன் செயற்கை முறையில் தயாரிக்கப் பட்டு அடிசன் நோய் தீர்க்கவும். வேறுபல நோய் களின் கடுமையைக் குறைக்கவும் உதவும் மருந்தாக விளங்குகிறது. மூச்சிரைப்பு நோய் (asthma)