358 கார்டியரைட
358 கார்டியரைட் முடக்குவாத மூட்டு அழற்சி (rheumatoid arthritis). சிறுநீரக அழற்சி நோய்க் குறியின் கூட்டியம் (nephrotic syndrome), கல்லீரல் நாட்பட்ட அழற்சி (chronic active hepatitis), பெருங்குடற் புண் அழற்சி (ulcerative colitis), ஒவ்வாமை நோய்கள் allergic disorders) போன்ற பல கடும் நோய்களுக்கு ஆளாகித் துன்புறுவோர் கார்ட்டிசோனைப் பயன் படுத்துகின்றனர். மூளைவீக்கம் (cerebral odeoma) நுரையீரல் வீக்கம் (pulmonary odeoma) இரத்தத் தில் நுண்ணுயிர்ப் பெருக்கம் (septicemia) போன்ற உயிருக்குப் போராடும் நிலைகளிலும் உயிர் காக்கும் மருந்தாக இது பயன்படுகிறது. மாற்று உறுப்புப் பொருத்தும் மருத்துவ ஏற்படும் முறைகளால் வேண்டா விளைவுகளைக் குறைத்து நோயாளிகளின் வாழ்வை நீட்டிக்கவும் இது பயன்படுகிறது. க இருப்பினும், மேற்குறித்தவாறு கார்ட்டிசோன் பயன்படும் நோய்களில் அடிசனின் நோயைத் தவிர வேறெதையும் இது முற்றிலும் குணமாக்குவதில்லை. பெரும்பாலும் நோயின் கடுமையைக் குறைத்து அந் நிலையில் உயிரைக் காக்கவும், துயரைக் குறைக்க வுமே இது பயன்படுகிறது. நெடுங்காலம் பயன் படுத்தினால் குஷிங்கின் நோய் போன்ற வேண்டா விளைவுகளும் இதனால் ஏற்படலாம். மேலும் நெடுங்காலம் பயன்படுத்துவோர் இதைத் திடீரென நிறுத்தினாலும் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதோடு அட்ரினல் சுரப்பி இயக்கக் குறைவால் உயிருக்கே ஊறு விளையவும் வாய்ப்புண்டு. எனவே கார்ட்டி சோனை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதைத் திடீரென நிறுத்தாமல் சிறுகச் சிறுக மருந் தளவைக் குறைத்துக் காலப்போக்கிலேயே நிறுத்த வேண்டும் அல்லது சிறுநீரக மடுச்சுரப்பியூக்கிச் சத்தை ஊசி மூலம் செலுத்திய பின்னர் கார்ட்டிசோனை நிறுத்தலாம். க கா. லோகமுத்துக்கிருஷ்ணன் நூலோதி. Robert C. Bohinski, Modern Conce- pts in Biochemistry, Fifth Edition. Allyn and Bacon, Inc., Boston, 1987. அறுகோண (pseudo hexagonal) அமைப்பை ஒத்துச் சிலிக்கான் அணு அமைந்திருக்கும். பொட்டாசியம், சோடியம் மற்றும் நீர்ம அயனிகள் வெற்றிடங்களில் புகுந்திருக்கும். ஃபெர்ரிக் அயனி ஒரளவு மக்னீசியத் தையும், ஃபெரஸ் அயனி அலுமினியத்தையும் இடப் பெயர்ச்சி செய்யும். கார்டியரைட் பசுமை கலந்த நீல நிறத்தைக் கொண்டது. வெளிர் நீலத்திலிருந்து ஆழ்ந்த நீல மிளிர்வு கார்டியரைட்டுகளும் உள்ளன. பளிங்கு கொண்டது. தெளிவற்ற கனிமப் பிரிவையுடையது. ஒருமுனைவாக்கப்பட்ட ஒளிக்கதிர் வேறுபட்ட திசைப் புலன்களில் நிறமற்ற தன்மையில் இருந்து அடர் நீல வண்ணத்தைப் பெறும். பல திசை அதிர் நிற மாற்றப் பண்பு கொண்டது. விரைவொளித் திசையில் கருநிற ஊதாவும், நீலமும், இடையொளித் திசையில் ஆழ்நீல நிறமும்,மெதுவான ஒளிதிசை யில் மஞ்சள் வண்ணமும் கொண்டது. ஒளிபுகு கார்டியரைட் சுனிமங்கள் மணிக்கற்களாகப் பயன் படுகின்றன. இது எதிரொளி சுழற்றும் தன்மை கொண்டது. ஒளி அச்சுக் கோணம் 40°-84 வரை வேறுபடுகிறது. இதன் ஒளி விலகல் எண்கள் a-1.522 1.558; B 1.524 1.574; 7-1,527 - 1.578; இரட்டைக் கதிர் ஒளிவிலக்கம் 0.005-0.018 வரை வேறுபடும்; அடர்த்தி 2.53-2.78; கடினத் தன்மை 7-7.5. கார்டியரைட்டுடன் குவார்ட்ஸ், பொட்டாசிய ஃபெல்சுபார். மஸ்கோவைட், சில்லி மனைட், பையோடைட், குருந்தம், ஸ்பினல் ஆகிய கனிமங்கள் சேர்ந்து கிடைக்கின்றன. . கார்டியரைட் 18 துஒரு மக்னீசிய அலுமினிய சிலிக்கேட் Mg,(Al,Si,O,,) கனிமமாகும். கார்டியரைட்டின் (cordierite) படிக அச்சுகளின் நீளங்கள் முறையே a:b:c=0.5871:1:0.5585 ஆகும். இது செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியைச் சேர்ந்தது. ஆக்சிஜன். மக்னீசியத்துடன் எண்முகப் படிவுப் பிணைவையும் அலுமினியத்துடன் நான்முக படிவுப் பிணைவையும் கொண்டது. தேனடையில் காணப்படும் போலியான கார்டியரைட் படிகத் தோற்றம் பலதிசை அதிர் நிறமாற்றப் புள்ளிகள் (pleo choric holos) காணப்படும். ஒழுங்கற்ற படிக வமைப்பைக் கொண்ட கார்டியரைட், இந்தியாலைட் Mg, (AlSi),O18 எனப்படும். படிகவமைப்பையும், அலகறை அறுகோணப் டவெளிக் (unit cell