பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்டினர்‌ கூட்டியம்‌ 359

12 30 space) P6/mcc குழுவையும் சார்ந்தது. ஒசுமிலைட் Mg Al, (AlSi) O H,O என்னும் கனிமம் கார்டிய ரைட் கனிமத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதன் படிகக் கட்டமைவு இரட்டை, நான்மடிவு மற்றும் ஆறு உறுப்புகளைக் கொண்ட அறுகோண வளையங்களால் கட்டப்பட்டுள்ளமையால், கார்டிய ரைட் படிகக் கட்டமைவிலிருந்து சிறிது மாறுபடு கிறது. கார்டியரைட், இந்தியலைட், ஒசுமிலைட் போன்ற கனிமங்களை இனம் காண்பது கடினம். ஆதலால் எக்ஸ் கதிர் ஆய்வினால் இக்கனிமங்களை இனம் வெளிர் காணலாம். நிறங்களையுடைய கார்டியரைட் கனிமங்களை நீலநிறமுடைய கனிமங் களாகத் தவறுதலாகக் கருத நேரிடும். இவ்விரு கனிமங்களும் இயற்பியல் பண்புகளில் ஓரளவு ஒன்றி யுள்ளன. இது அமிலத்தில் மிகக் குறைவாகக் கரையக் கூடியது. காரவகைக் கார்பனேட் கரைசல்களுடன் வெப்பப்படுத்தும்போது முழுவதும் கரையும். கார்டியரைட் MgO-Al, O-SiO, பகுதியமைப் யில் ஒரு குறிப்பிடத்தக்க கனிமமாக வளர்கிறது. இவ்வமைப்பில் 800 -90u°C வெப்பநிலையில் கார்டியரைட் படிகமாகிறது. 500°C வெப்பநிலைக் குக் கீழும் 5000 வளி மண்டல அழுத்தம் வரையிலும் கார்டியரைட் நீருடன் சேர்ந்து சிதைந்து குளோ ரைட்டையும், பைரோபிலைட் கனிமத்தையும் உ வாக்குகிறது. கார்டியரைட் 2000 வளி மண்டலத் திலும் 1125°C வெப்பநிலையிலும் ஒவ்வா நிலையில் உருகி முல்லைட், ஸ்பினல் நீர்மமாக மாறுகிறது. உரு கார்டியரைட் வெப்பநிலை உயர்வால் உரு மாற்றம் அடைந்த அலுமினிய அடக்கமிக்க படிவுப் பாறைகளில் பெரும்பான்மையாகக் கிடைக்கிறது. இந்த உருமாற்றத்தின்போது நடைபெறும் பொது வான வேதி மாற்றம் கார்னட் + மஸ்கோவைட் கார்டியரைட் + பையோடைட் கொண்ட இம்மாற்றத்தால் இக்கனிமங்கள் வரிப்பாறைகள் உண்டாகின்றன. கார்டியரைட், அலுமினிய அடக்கமுள்ள படலப் பாறைகள் வரிப் பாறைகள்,கிரானுலைட் பாறைகளில் சிறிய அள வில் பரவலாகக் கிடைக்கும். கார்டியரைட் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்திலுள்ள கீரனூரிலும், சேலம் மாவட்ட செவிட்டுரங்கம் பட்டியிலும் இக்கனிமம் கிடைக்கிறது. இரா. இராமசாமி நூலோதி. L.G.Berry & B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers & Distributors, Delhi, 1985. கார்டிலேரியன் தொடர் கார்டினர் கூட்டியம் 359 து ஒரு வகை மலைத் தொடராகும். சங்கிலித் தொடர் போல அமைந்திருக்கும் இத்தொடரில் தனித் தனிக் குன்றுகளும், பீடபூமிகளும் அவற்றின் இடையே தாழ்நிலங்களும் அமைந்திருக்கும், இத் தொடர் புவியின் மேற்பரப்பில் விரிந்து பரந்து அமைந்ததொரு மலைத் தொடராகும். கார்டிலேரியன் தொடர் எனும் பெயர் பெரும் பாலும் குறுகிய எல்லைக்குள்ளேயே பயன்படுத்தப் பட்டு வருகிறது. பசிபிக் கடலுக்கு இடையே அமைந்துள்ள தென்மேற்கு, வடஅமெரிக்க மலைத் தொடரே இப்பெயரிட்டு வழங்கப்படுகிறது. வட அமெரிக்காவிலுள்ள பல்வேறு மலைக் குன்றுகளும் அவற்றின் பகுதிகளும் கார்டிலேரியன் தொடர் அல்லது ஒரோசென் எனப் பெயரிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புகழ் பெற்ற பகுதி களான சியெரா நெவேடா கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கு. கேஸ்கேடு மலைத் தொடர், பேசின் மலைத் தொடர், கொலராடோ பீடபூமி, ராக்கி மலைகள் ஆகியன இதில் அடங்கும். கார்டிலேரியன் மலைத் தொடர் பீடபூமிப் பகுதியில் அமைந்து உள்ளது. இப்பகுதிப் பாறைகள் மிகுதியான மாற்றத்திற்கு உள்ளாகிப் பின்னர் நாளடைவில் நிலைத்த தன்மையைப் பெற்றுள்ளன. தகட்டு நில ஆக்கக் கொள்கைமூலம் ஒன்று சேர்ந்து, ஒன்றோடு ஒன்று வினைபுரியும் தகட்டுப் பகுதிகளால் இம்மலைத் தொடர் தோன்றியதாகக் கருதப்படு கிறது. வட அமெரிக்கக் கார்டிலேரியன் மலைத் தொடர் ஒருங்கிணையும் தகடுகளால் உருவாக்கப் பட்டது. ஆனால் இமயமலையோ முன்னரே உள்ள தகட்டில் புதிய தகடு முட்டி மோதியதால் உருவான தாகும். கார்டிலேரியன் மலைத் தொடர் முன்னரே உள்ள புவித் தகட்டில் மற்றொரு கடல்தகடு இணை யும் போது உருவாகியது. து ஒரு நீண்ட காலச் செயலாகும். இவ்வகை மலைத் தொடரில் எரிமலை மற்றும் அனற்பாறையின் வகையான ஆழ்நிலைப் பாறைகளின் ஆக்கம் மிகுதியாக இருக்கும். மலைத் தொடரின் இருபுறத்திலும் குறைகோண உந்துப் பிளவுகளைக் காணலாம். -இராம.இராமநாதன் நூலோதி. Billings, Structural Geology, Third Edition, Prentice Hall of India, New Delhi. கார்டினர் கூட்டியம் பெருங்குடலைத் தாக்கும் தொங்கு தசைக் கட்டி எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கும். இதைப்