360 கார்டீஷியன் ஆயங்கள்
360 கார்டீஷியன் ஆயங்கள் பாரம்பரியப் பெருங்குடல் தொங்கு தசைக் கட்டிகள் என்பர். குடும்பத்தில் பலரைத் தாக்கும் இந்நோய் புற்றாக மாறவும் வாய்ப்புண்டு. இத்தசைக் கட்டி களுடன், பிற தீங்கற்ற கட்டிகளான கொழுப்புக் கட்டி, நார்த்திசுக்கட்டி, செபேசியஸ் பைக்கட்டி, கபாலம், தாடையில் தோன்றும் எலும்புக் கட்டி ஆகியவை உடலின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவ தாலேயே இது கார்டினர் கூட்டியம் எனப்படுகிறது. கார்டினர் கூட்டியத்தில் முன்சிறுகுடல், இரைப்பை முதலியவற்றிலும் தொங்கு தசைக் கட்டிகள் காணப் படும். இக்கட்டிகள் யாவும் புற்றுக் கட்டியாக மாறும் நிலை உள்ளமையால் தாக்கமுற்ற குடல் பகுதி முழுமையும் எடுத்துக் களைவது வருமுன் காத்தல் ஆகும். ஆய்வு. பெருங்குடல் அகநோக்கி கொண்டு இக் கட்டிகளைக் கண்டுபிடிப்பதுடன் நோய்க் குறியியல் ஆய்வுக்கும் தசைத் துண்டுகளை எடுக்கவும் உதவு கிறது. பேரியம் போன்ற எக்ஸ் கதிர் புகா மருந்தைப் பெருங்குடலினுள் செலுத்திப் படம் எடுத்துத் தாக்கமுற்ற பகுதி அளவைக் கண்டுபிடிக்கலாம். மருத்துவம். இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டவுடன் வீட்டில் உள்ள ஏனையோரையும் ஆய்வது நல்லது. நாற்பது வயதாகும்போது புற்று உண்டாவது உறுதி யாதலால் பெருங்குடல் முழுதையும் வெட்டி எடுத்து விட்டு, பின் சிறுகுடலை மலக்குடலுடன் இணைக்க வேண்டும். மலக்குடல் தாக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்ந்து வர வேண்டும். உறவினர் களை ஆய்ந்து, கட்டி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் அறுவை செய்து கட்டியை அகற்ற வேண்டும். 4 மா.ஜெ.ஃபிரடெரிக் ஜோசப் a p (a, u) படம் 1.இருபரிமாணச் செவ்வக ஆயங்கள் Z4 கார்டீஷியன் ஆயங்கள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கோடுகளின் திசையில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியின் தொலைவுகள், கார்டீஷியன் ஆயங்கள் Cartesian coordinates) எனப்படும். ஒரு தட்டையான பரப்பில் X அச்சு, Y அச்சு என்னும் இரு நேர்கோடு களை அடி, நிலையாகக்கொண்டு குறிப்பிடுவது இரு பரிமாணக் (two dimension) கார்டீஷியன் ஆய முறை யாகும். இருகோடுகளும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் புள்ளி ஆதி (origin) எனப்படும். X அச்சைக் கிடை அச்சு என்றும், Y அச்சைக் குத்தச்சு என்றும் குறிப்பிடுவது வழக்கம். இரு அச்சுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்தானால் ஆயங்களைச் செவ்வக ஆயங்கள் என்றும், சாய்வாக வெட்டிக் கொண்டால் சாய்வு ஆயங்கள் என்றும் குறிப்பிடுவர். படம் 2. முப்பரிமாண ஆயங்கள் y 1. வலமுறை 2. இடமுறை