362 கார்பமசோபின்
362 கார்படிசோபின் ஆக்சிஜனேற்றம் செய்து நீக்கும்போது கார்பசோல் கிடைக்கிறது. 2 -நைட்ரோடைஃபினைல் சேர்மத்தை ட்ரை எத்தில் பாஸ்ஃபைட் கொண்டு ஹைட்ரஜனேற்றம் செய்வதனாலும் கார்பசோல் உண்டாகிறது. ஸ்ரைக் னின் என்னும் அல்க்கலாய்டை உலர்த்திக் காய்ச்சி வடிக்கும்போது கார்பசோல் கிடைக்கிறது. புரூசின் என்னும் இயற்கையில் கிடைக்கும் அமீனைத் துத்த நாகத் துகள் கொண்டு காய்ச்சி வடிக்கும்போதும் கார்பசோல் கிடைக்கி கிறது. பண்புகள். கார்பசோல் ஒரு நிறமற்ற திண்மப் பொருள். நீரில் கரையாது. இதன் உருகு நிலை 246°C; கொதி நிலை 354-55°C. இது பதங்கமாகும் தன்மை கொண்டது. இதை எலெக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகளுக்கு உட்படுத்தும்போது 3, 6 எண் கார்பன் அணுக்களில் பதிலீட்டுத் தொகுதிகள் போய்ச் சேர்கின்றன. நைட்ரோ ஏற்றம், சல்ஃப னேற்றம், ஹாலஜனேற்றம், ஃப்ரீடல் - கிராஃப்ட்ஸ் அசைல் ஏற்றம் ஆகிய வினைகளுக்குக் கார்பசோல் உள்ளாகிறது. இது அமிலம், காரம், வெப்பம் ஆகிய வற்றால் தாக்கமுறுவதில்லை. சிவப்புப் பாஸ்ஃபரஸ் ஹைட்ரோ அயோடிக் அமிலக்கலவையால் ஹைட்ரஜ னேற்றம் செய்யும்போது, 1,2,3,4,10,11-ஹெக்சா ஹைட்ரோ கார்பசோல் உண்டாகிறது. சோடியம் அமைல் ஆல்கஹால் இவற்றால் ஹைட்ரஜனேற்றம் அடைந்து 1, 4-டைஹைட்ரோ கார்பசோலும் 1,2, 3.4 - டெட்ரோ ஹைட்ரோகார்பசோலும் கிடைக் கின்றன. ஒன்பதாம் எண் கொண்ட நைட்ரஜனில் உள்ள ஹைட்ரஜன் சிறிது அமிலத் தன்மை கொண்டது. இந்த ஹைட்ரஜனை டப்பெயர்ச்சிச் செய்ய இயலும். எத்திலீன் ஆக்சைடு, நைட்ரஸ் அமிலம், அசெட்டிலீன் ஆகியவை கார்பசோலில் உள்ள அமிலத்தன்மை கொண்ட ஹைட்ரஜனை நீக்கி முறையே 9-ஹைட்ராக்சி எத்தில், 9 - நைட்ரசோ, 9- வினைல் என அமைவதான கார்பசோல் சேர்மங் களைப் பெறலாம். பயன்கள். 9-வினைல் கார்பசோல் பல்லுறுப் பாக்கலில் (polymerisation) மைக்காவை ஒத்த மின் கடத்தாத் தன்மை கொண்ட பொருளைக் கொடுக் கிறது. சாயப் பொருள்கள் தயாரிப்பில் கார்பசோல் இடைநிலைப் பொருளாக அமைகிறது. ஹைட்ரோன் நீலம் என்னும் சாயத்தின் மூலக்கூறும் ஹைட்ரோன் மஞ்சள் என்னும் மூலக்கூறும் கார்பசோல் மைப்பைக் கொண்டுள்ளன. வடிவ அ. சண்முகசுந்தரம் நூலோதி. T.A. Geissman, Principles of Organic Chemistry, Fourth Edition, W.H. Freeman and Company, San Francisco. 1977. கார்பமசோபின் இம்மருந்து இமினோஸ்டில்பின்கள் (iminostilbines) எனும் வகையைச் சார்ந்தது. இதன் வேதி அமைப்பு மனச்சோர்வு எதிர்மருந்துகளில் ஒன்றான இமிப்ர மினின் அமைப்பை ஒத்துள்ளது. இம்மருந்து வாய் மூலம் மாத்திரை வடிவில் தரப்படுகிறது. 100, 200, 400 மி.கி மாத்திரைகள் பயனில் உள்ளன. வாய் மூலம் விழுங்கும் இம்மருந்து இரைப்பை, சிறுகுடல் வழியே நன்கு உள்ளுறிஞ்சப்பட்டுக் கல்லீரலில் வளர் சிதை மாற்றம் அடைகிறது. மருத்துவம் தொடங்கிய 3-6 நாளுக்குள் இரத்தத்தில் இம்மருந்தின் அளவு நிலைபெற்று விடுவது விரும்பத்தக்கது. இரத்தத்தில் தன் அரை வாழ்வு 15-30 மணி நேரமாகும். அரை வாழ்வுப் பொழுதைப் போல நான்கு மடங்கு நேரத் ல் இதன் இரத்த அளவு நிலை பெற்று விடுவதால் இது விரைந்து பயனளிக்கிறது. கல்லீரலில் பல்வேறு மருந்துகளின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நொதிகள் பலவற்றைத் தூண்டிவிடக்கூடிய நொதி தூண்டும் தன்மை இம் மருந்துக்கு இருப்பதால் இது தன்னுடன் உட்கொள் ளப்படும் வேறு பல மருந்துகளின் அரை வாழ்வை யும், விளைவையும், பயனையும் குறைக்கவல்லதாக உள்ளது, வலிப்பு நோய் தீர்க்கும் பொருட்டு இம் மருந்துடன் கொடுக்கப்படும் ஃபினைடாயின் இவ் வாறு தாக்கம் அடைகிறது. நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய பல்வேறு மருந்துகளின் அளவை மருத்துவர்கள் அறுதியிடும்போது இவ்வுண்மையைக் கருத்திற் கொள்ள வேண்டும். இம்மருந்து கல்லீரலில் வளர்சிதை மாற்றம் அடையும்போது விளையும் பொருள்களில் முதன்மையான எப்பாக்கி கார்பம் சோபினும் (epaxy carbamazepine ) வலிப்பு நோய் எதிர்ப்புத் திறன் (anticonvulsant effect}, மன வோட்டத் தூண்டு திறன் (psychotropic effect) போன்ற விரும்பத்தக்க தன்மைகளைக் கொண்டுள்ள மையால் மருத்துவத்தில் இதன் பயன் மேம்படுகிறது. தொடக்கத்தில் இம்மருந்து, வலிப்பு நோய் எதிர் மருந்தாகவே அறிமுகம் செய்யப்பட்டது. பலவித வலிப்பு நோய்களில் பல்வேறு வகையில் இது பயன்படுத்தப்படுகிறது. மனவோட்ட வலிப்பிலும் (psychomotor-epilepsy), பொட்டுமடல் வலிப்பிலும் (temporal coke epilepsy) வேறுபல வகையான பகுதி வலிப்புகளிலும் (partial epilepsy) பகுதி வலிப்பாகத் தொடங்கிப் பின்னர் கை கால் கால் வெட்டியிழுக்கும் வலிப்பிலும் இதுவே முதல் தர மருந்தாகப் பயன்படுகிறது. கைகால் வெட்டியிழுக்கும் பெரு வலிப்பிலும் ஃபினைடாயினுக்கு இணையாக இம் மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஃபினைடாயினைப் போலன்றி இது மன மகிழ்வை விளைவிக்கிறது. மேலும், கார்டினால் போன்ற பார்பிச்சுரேட்டுகளைப் போல இம்மருந்து கற்கும் திறனைக் (cognitive