கார்பன் 365
கார்பன் 365 பயன்படும். துளை உளிகளின் (drills) நுனிகளில் இவ்வகை வைரங்கள் பொருத்தப்படுகின்றன. இவை கார்பனோடோ, போர்ட் என்று குறிப்பிடப்படு கின்றன. செயற்கை வைரங்கள். சர்க்கரையை வறுத்துக் கிடைக்கும் கார்பனுடன் மிகத் தூய்மையான இரும்பைச் சேர்த்து அக்கலவையைக் கரி மூசையில் (crucible) இட்டு மின் உலைகளில் 3000-4000C வெப்பநிலைக்குச் சூடேற்றி, விளைபொருளைநீரில் அமுக்கி, திடீரெனக் குளிர்வித்தால் மிகச் சிறிய வைரக் கற்கள் உண்டாகின்றன. மையான கிராஃபைட்,வைரத்தின் கிராஃபைட் கார்பனின் இரண்டாம் புறவேற்று இயற்பியல், வேதிப் பண்புகளிலிருந்து பெருமளவு மாறுபடுகிறது. கிராஃபைட் மென்மையான, வழவழப்பான, கறுப்பு நிறமுடைய உலோகங்களைப் போன்ற பளபளப் பான திண்மம்; எளிதில் நொறுங்கக் கூடியது. இது மின்சாரத்தை நன்கு த்துகிறது. உயர் அழுத்தத் தில் இதன் உருகுநிலை 3527°C, சாதாரண அழுத் தத்தில் இதை வெப்பப்படுத்தும்போது 3500°C இல் பதங்கமாகிறது. இதன் படிக அமைப்பு, கீழே கொடுக் கப்பட்டுள்ளது. இதில் கார்பன் கார்பன் அணுக்களுக் கிடையேயான தொலைவு 1.42Å இது வைரத்திலிருக் கும் கார்பன்-கார்பன் அணுக்களுக்கிடையேயான தொலைவை விடக் குறைவாகும். கிராஃபைட் படிகத் தில் மூன்று கார்பன் அணுக்கள் மற்ற கார்பன் அணுக் களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. வைரத்தில் கார்பன் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந் துள்ளது. அறுமுக படிவங்களுக்கிடை யேயான தலைவைக் கணக்கிட்டால் இந்த இணைதிறனைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம். இரு படிவங்களுக் கிடையேயான தொலைவு 3.40A. இததொலைவு கார்பன் அணு நான்கு இணைதிறன் பெறுவதற்கு மிகவும் அதிகமாகும்; எனவே எஞ்சியிருக்கும் நான் எலெக்ட்ரான் வெப்பத்தையும், மின்சாரத்தை யும் கடத்த உதவுகிறது. வைரத்தின் அடர்த்தியையும் (3.51 இ/க.செ) கிராஃபைட்டின் அடர்த்தியையும் (2.22 கி/க.செ) ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவற்றிற் கிடையேயிருக்கும் நெருக்கத் தன்மையின் அளவை (degree of compactness) அறியலாம். காம் கிராஃபைட் புறவேற்றுமையை (Cg) வைரமாக (Cd) மாற்றலாம். கிராஃபைட்டுடன் இரும்பு வினையூக்கியைச் சேர்த்து உயர் அழுத்தத் திலும் உயர் வெப்பத்திலும் சூடுபடுத்தினால் வைரம் உண்டாகிறது. இரு புறவேற்றுமைகளும் 15000 Cd. Ca வளிமண்டல அழுத்தத்தில், 300K வெப்பநிலையில் அல்லது 4000 வளிமண்டல அழுத்தத்தில் 1500 K வெப்பநிலையில் சமநிலை அடைகின்றன. செயற்கை வைரங்கள். கிராஃபைட் அல்லது கார்பனைக் கொண்ட வேறு சேர்மங்களை (எ.கா: கார்போ ஹைட்ரேட்டுகள்) உயர் அழுத்தத்தில் வெப்பத்திற் குட்படுத்தும்போது பெறலாம். லெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்து வதால் இது மின்னாற் பகுப்புக் கலன்களில் மின் முனைகளாகப் பயன்படுகிறது. வெப்பம் தாங்கும் மூசைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. வழவழப் பாக உள்ளமையால் எண்ணெய், நீர் ஆகியவற்றுடன் கலந்தும், தனித்த நிலையிலும் எந்திரங்களில் உயவுப் பொருளாகவும் (lubricants) பயன்படுகிறது. படிக உருவமற்ற கார்பன் வகைகள் கார்பனின் படிக உருவமற்ற புறவேற்றுமைகள் எண்ணிலடங்கா. மரக்கரி (wood charcoal} காற்றில் லாத சூழ்நிலையில் மரத்துண்டுகளை வெப்பப்படுத்தி னால் கிடைக்கிறது. மை அல்லது புகைக்கரி (எண் ணெய் விளக்குகள் போதுமான காற்றில்லாத சூழலில் எரிந்து கிடைக்கும் கரி) வளிமக்கரி (நிலக்கரியைச் சிதைத்து வடித்து, சுட்ட கார்பன் தயாரிக்கும்போது வாலையில் படியும் கார்பன்). சர்க்கரைக் கரி (தூய் மையாக்கப்பட்ட சர்க்கரையை வறுத்துப்பெறும் கரி). விலங்குக் கரி (தூய்மையாக்கப்பட்ட எலும்புகளைச் சிதைத்து வடிப்பதால் கிடைப்பது) நிலக்கரி (கார்பன், மற்ற கனிமப்பொருள்கள் கலந்த கலவை). கல்கரி (coke) போன்றவற்றில் கார்பன் பலவாறாக உலோகங்களைப் நிறைந்துள்ளது. இவை பிரித் கரிய